search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடாது பெய்து வரும் மழையால் தக்காளி விலை அதிகரிக்க வாய்ப்பு
    X

    கோப்பு படம்.

    விடாது பெய்து வரும் மழையால் தக்காளி விலை அதிகரிக்க வாய்ப்பு

    • வழக்கத்திற்கு மாறாக ஐப்பசி மாதம் வரை வறண்ட வானிலை நிலவியதால், தக்காளி விளைச்சல் அதிகரித்தது.
    • தக்காளி விலை தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலுார் பகுதியில் ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வழக்கத்திற்கு மாறாக ஐப்பசி மாதம் வரை வறண்ட வானிலை நிலவியதால், தக்காளி விளைச்சல் அதிகரித்தது. எனவே, 13 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி, 100 ரூபாய்க்கு விலை போனது. இது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்ய தொடங்கி உள்ளது. எனவே, அதிக ஈரப்பதம் காரணமாக தக்காளி அழுகும் நிலைமை அதிகரித்துள்ளது.

    தற்போது ஒரு பெட்டி தக்காளி 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரும் வாரங்களில் மழை அதிகரிக்கும் என்பதால் தக்காளி மேலும் அழுக வாய்ப்புள்ளது. இதனால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது.

    இந்த தகவலை பொங்கலூர் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×