search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகை - திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து நாளை ஆலோசனை
    X

    கோப்புபடம். 

    தீபாவளி பண்டிகை - திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து நாளை ஆலோசனை

    • தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இருந்து எவ்வளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்பது குறித்து நாளை 6-ந்தேதி முடிவு செய்யப்பட உள்ளது.
    • பண்டிகைக்கு குறிப்பிட்ட நாட்கள் முன்னதாக, கோவையில் இருந்து நாகர்கோவில், சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.

    திருப்பூர்:

    தீபாவளியையொட்டி சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இருந்து எவ்வளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்பது குறித்து நாளை 6-ந்தேதி முடிவு செய்யப்பட உள்ளது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து கழக பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை எந்த நேரமும் தொடர்புகொள்ளலாம். அதேபோல், ஆம்னி பஸ்களில் அதிக கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 கட்டணமில்லா எண்கள் மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அரசு போக்குவரத்து கழக துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகைையயொட்டி கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன், கோவை, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம்-சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் போன்ற ெரயில்களில் முன்பதிவு, 100 சதவீதம் நிறைவு பெற்றது. பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கோவையில் இருந்து சென்னை, நாகர்கோவில், பெங்களூரு போன்ற ஊர்களுக்கு தீபாவளி சிறப்பு ெரயில் அறிவிப்பு வெளியிட வேண்டும். பயணிகள் கூட்ட நெரிசல் அதிகரித்தால், பண்டிகைக்கு குறிப்பிட்ட நாட்கள் முன்னதாக, கோவையில் இருந்து நாகர்கோவில், சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.சிறப்பு ெரயில் அறிவிப்பு குறித்து கோரிக்கை வைக்கும் போது அதனை பரிசீலிக்கும் சேலம் கோட்ட அதிகாரிகள் எர்ணாகுளம், கொச்சுவேலி, ஆலப்புழா, திருவனந்தபுரம் என கேரளாவில் இருந்து சென்னைக்கு ெரயில் அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், கோவை, திருப்பூர் மாவட்ட பயணிகளுக்கு இருக்கை கிடைக்காமல் போகிறது. எனவே இம்முறையும் அப்படியொரு அறிவிப்பு வெளியிடாமல் கோவையில் இருந்து ெரயில் புறப்படும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×