தேவனூர்புதூர் பகுதியில் நாளை மின்தடை

துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.மின் பாதையின் அருகில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

உடுமலை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அங்கலக்குறிச்சி செயற்பொறியாளர் ஆர்.தேவானந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேவனூர்புதூர் துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ஆகவே நாளை (திங்கட்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சி.பொ.சாளை, பாண்டியன்கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்க முத்தூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. அப்போது மின் பாதையின் அருகில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com