என் மலர்
திருப்பூர்
- தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம், சணல் வாரியம் சார்பில், புதிய தொழில் பயிற்சிகள் விரைவில் துவங்க இருக்கிறது.
- சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சியில் 10ம் வகுப்புக்கு மேல்படித்த 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர் பங்கேற்கலாம்.
திருப்பூர்:
திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி மற்றும் மத்திய, மாநில அரசு திட்டங்களில், இலவச பயிற்சி அளிக்கும் மையம், திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இயங்கி வருகிறது. கடந்த, 8 ஆண்டுகளாக, 4,000க்கும் அதிகமான இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.
தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம், சணல் வாரியம் சார்பில், புதிய தொழில் பயிற்சிகள் விரைவில் துவங்க இருக்கிறது. வேலை வாய்ப்பற்ற இளைஞர், இளம்பெண்கள், இல்லத்தரசிகள், இப்பயிற்சியில் பங்கேற்கலாம். குறிப்பாக சணல் பொருட்கள் தயாரிப்பது குறித்து இலவசமாக பயிற்சி பெறலாம்.
இது குறித்து ' நிப்ட்-டீ நிட்வேர் பேஷன் இன்ஸ்டிடியூட் மைய பொறுப்பாளர்கள் கூறியதாவது:-
இலவச குறுகியகால திறன் பயிற்சியில் தையல் பயிற்சியில், 8-ம் வகுப்புக்கு மேல் பயின்ற 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர் பங்கேற்கலாம். சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சியில் 10ம் வகுப்புக்கு மேல்படித்த 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர் பங்கேற்கலாம்.
இலவச பயிற்சி பெறுவோருக்கு, வேலை வாய்ப்பும் உறுதி செய்து கொடுக்கப்படும். முதலில், பயிற்சிக்கான சேர்க்கையை முடித்த பிறகே, பயிற்சி துவங்கும் நாள் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 88707 25111 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மத்திய மோட்டார் வாகன சட்ட அறிவுறுத்தலின் படி கொண்டு வரப்பட உள்ளது
- இதற்கான பணிகளை போக்குவரத்து துறை தொடங்கி உள்ளது.
திருப்பூர் :
வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் மூலம், வாகனங்களுக்கு தகுதிச்சான்று (எப்.சி.,) வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி, தானியங்கி சோதனை நிலையம் மூலம் தகுதிச்சான்று வழங்கும் திட்டம், மத்திய மோட்டார் வாகன சட்ட அறிவுறுத்தலின் படி கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் 48 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 18 அலுவலகங்களில் 2024 ஜனவரி முதல் தானியங்கி சோதனை மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை போக்குவரத்து துறை தொடங்கி உள்ளது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் கூறுகையில்:- முழுத்தகுதி பெற்ற வாகனங்கள் சாலையில் இயங்குவதை உறுதி செய்வதுடன், இடைத்தரகர்கள் தலையீட்டை முழுவதும் தடுக்க வேண்டும் என்பதற்காக தானியங்கி சோதனை மையம் உருவாக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் ஆட்டோ, கார், பைக், பஸ் மற்றும் கனரக வாகனங்களுக்கு தனித்தனி பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாகனங்களின் பிரேக் அமைப்பு, முகப்பு விளக்கு, பேட்டரி, சக்கரம், பிரதிபலிப்பு ஸ்டிக்கர் மற்றும் வேகம் காட்டும் கருவி உள்ளிட்ட பல்வேறு சோதனைகளுக்கு பின் ஆய்வாளர் ஒப்புதலுடன் சான்றிதழ் வழங்கப்படும் என்றனர். தாம்பரம், ஸ்ரீ பெரும்புதுார், செங்குன்றம், வேலூர், திண்டிவனம், சேலம் மேற்கு, ஸ்ரீ ரங்கம், தஞ்சாவூர், திருப்பூர் வடக்கு, கோவை வடக்கு, ஈரோடு கிழக்கு, நாமக்கல் வடக்கு, திண்டுக்கல், மதுரை தெற்கு, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் தானியங்கி சோதனை அமைய உள்ளது.
- பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா, கடலூருக்கு மாற்றப்பட்டார்.
- பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பல்லடம்:
பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா, கடலூருக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக கடலூர் மதுவிலக்கு டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த விஜிகுமார் பல்லடம் டி.எஸ்.பி.,யாக மாற்றப்பட்டு பொறுப்பேற்றார்.
பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாததால் பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி கூடுதல் பொறுப்புடன் கவனித்து வருகிறார்.
- மின் நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
- திருப்பூா் மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்தும், மனுக்கள் அளித்தும் நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- திருப்பூா் மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் திருப்பூா் மின்பகிா்மான வட்ட கூடுதல் தலைமைப் பொறியாளா் பங்கேற்று மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறியவுள்ளாா்.
எனவே, இக்கூட்டத்தில் திருப்பூா் மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்தும், மனுக்கள் அளித்தும் நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் துவக்கி வைத்தார்.
- மாநகர பொறியாளர் செல்வநாயகம், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் மற்றும் எஸ்.ஆர். நகர் பகுதியில் தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் துவக்கி வைத்தார்.
மேலும் "தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி" தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க மாட்டோம், பொருட்கள் வாங்க செல்லும் பொழுது தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிகளை பயன்படுத்த மாட்டேன் நம் நகரின் தூய்மை மற்றும் பசுமையை மேம்படுத்த நான் ஒத்துழைப்பேன். தூய்மை உறுதிமொழி எனது குப்பை எனது பொறுப்பு, என் நகரம் என் பெருமை. எனது நகரத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்புமாகும், தூய்மைப்பணிகளுக்கு என்னைஅர்ப்பணித்து கொள்ள, என் நேரத்தை ஒதுக்குவேன். நான் பொது இடங்களில் குப்பை கொட்டமாட்டேன், பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்கமாட்டேன். குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பேன், தூய்மை நகருக்கான எனது ஆர்வத்தில், என்னை சார்ந்தவர்களும் குறைந்தபட்சம் தினசரி 2 மணி நேரம் பங்கேற்க ஊக்குவிப்பேன்.நகர தூய்மைக்கு பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பதே ஒரே காரணம் என்பதை நான் நம்புகிறேன், என்னால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் எனது நகரத்தை தூய்மையாக வைக்க பேருதவி செய்யும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்ற தூய்மை உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகர நல அலுவலர் கௌரி சரவணன், உதவி ஆணையாளர் (மண்டலம்) வினோத், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்துமதி பலத்த காய மடைந்து உயிருக்கு போராடினார்.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
கோவை போத்தனூர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 27). தி.மு.க.வை சேர்ந்த இவர் செட்டிப்பாளையம் ஊராட்சி 10-வது வார்டு கவுன்சிலராக இருந்தார். இவரது மனைவி இந்துமதி (23). இவர்களுக்கு கஜோல் என்ற 6 மாத கைக்குழந்தை உள்ளது.
இந்தநிலையில் நேற்றிரவு சந்தோஷ்குமார் தனது மனைவி, குழந்தையுடன் ஈரோட்டில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டினார். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது பின்னால் வந்த சொகுசு கார், சந்தோஷ்குமார் காரின் பின்புறம் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் கார் சாலையின் நடுவில் உள்ள டிவைடரில் மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்த சந்தோஷ்குமார், கைக்குழந்தை கஜோல் ஆகிய 2பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்துமதி பலத்த காய மடைந்து உயிருக்கு போராடினார். நள்ளிரவு நேரம் என்பதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த இந்துமதியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சொகுசு காரில் வந்த 5பேர் காயமடைந்தனர். அவர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்ற போது தி.மு.க. கவுன்சிலர் தனது கைக்குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைபணியாளர்கள், தண்ணீர் திறப்பாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
- மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் , மங்கலம் ஊராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மங்கலம்:
தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைபணியாளர்கள், தண்ணீர் திறப்பாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தூய்மை பணியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீபாவளிபரிசை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியண்ட்மணி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களான முகமதுஇத்ரீஸ், ராதாநந்தகுமார்,ராஜாபரமேஸ்வரன்,ரபிதீன்,பால்ராஜ்,அர்ஜூனன்,மங்கலம் ஊராட்சி செயலாளர் நாகராஜ் மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் , மங்கலம் ஊராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை - இனிப்பு வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
சாமளாபுரம்:
கலைஞரின் நூற்றாண்டு விழா - தீபாவளி பண்டிகையையொட்டி சாமளாபுரம் தி.மு.க. பேரூர் செயலாளரும், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 5-வது வார்டு கவுன்சிலருமான பி.வேலுச்சாமியின் ஏற்பாட்டில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை - இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை சாமளாபுரம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி ெதாடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 11-வது வார்டு கவுன்சிலர் வினோஜ்தயாளன், 2-வது வார்டு பட்டீஸ்வரன், 10-வது வார்டு கனகசபாபதி, 4-வது வார்டு பிரதிநிதி கதிரேசன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சியை செய்து காண்பித்தனர்.
- பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கயம்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீ விபத்து இல்லாத தீபாவளி மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு காங்கயம் தீயணைப்பு துறையினர் சார்பில் காங்கயம் அருகே உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் முன்னிலையில் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சியை செய்து காண்பித்தனர்.
இதில் பட்டாசுகள் திறந்தவெளியில் கூரை வீடுகள் இல்லாத இடங்களில் வெடிக்க வேண்டும். கைக்குழந்தைகள் இருக்கும் வீடுகள் அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. எண்ணெய் சேமிக்கும் குடோன்கள், தேங்காய் பருப்பு குடோன்கள், பெட்ரோல் பங்குகள் இருக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. கையில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. சிறியவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாங்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு 6 ஆண்டுகள் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம்
- மாவட்ட கலெக்டர், காங்கயம் தாசில்தார் என தொடர்ந்து 6 ஆண்டுகள் மனுக்கள் கொடுத்தும், தற்போது வரை எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை.
காங்கயம்:
ஒதுக்கீடு செய்யப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாவை வழங்க வலியுறுத்தி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் எல்லப்பாளையம்புதூர் ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து காங்கயம் தாலுகா, எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 20 பெண்கள் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை காங்கயத்தில் சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-
எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியில் 20 குடும்பங்கள் சொந்த வீடு இல்லாமல் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு 6 ஆண்டுகள் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம். இது குறித்து ஆதிதிராவிட நலத்துறை, ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கள ஆய்வு செய்து மேற்கண்ட 20 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கலாம் என விசாரணையில் உறுதி செய்தனர்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், காங்கயம் தாசில்தார் என தொடர்ந்து 6 ஆண்டுகள் மனுக்கள் கொடுத்தும், தற்போது வரை எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை. எனவே சொந்த வீடோ அல்லது வீட்டுமனைப் பட்டாவோ இல்லாமல் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினர்
- வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் கே.சந்திரசேகரன், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர்:
வெள்ளகோவில் வட்டார விசைத்தறி உரிமையாளர் சங்கத்திற்கும், வெள்ளகோவில் அடைப்புத்தறி உரிமையாளர்கள் சங்கத்திற்கும், வீரசோழபுரம் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்திற்கும் மற்றும் வெள்ளகோவில் தி.மு.க. விசைத்தறி தொழிலாளர் முன்னேற்ற சங்கம், இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற் சங்கத்திற்கும் இடையே போனஸ் ஒப்பந்த உடன்படிக்கை கூட்டம் காங்கயத்தில் உள்ள பயணியர் மாளிகையில் நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினர். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் திருப்பூர் 4-ம் மண்டல தலைவருமான இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கே.ஆர்.முத்துகுமார், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் கே.சந்திரசேகரன், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தகூட்டத்தில் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களிடமிருந்து தறி ஓட்டுபவர், பாவு ஓட்டுபவர், நூல் சுற்றுப்பவர், பாவு பிணைப்பவர், மேஸ்திரி, தார் போடுபவர் என இத்தொழில்களில் பிரிவு வாரியாக ஒரு வருடத்திற்கு என்ற வீதமும், மாதம் ஒன்று என்ற வீதமும் கணக்கிட்டு போனஸ் தொகை வழங்க அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தறி ஓட்டுபவர், பாவு ஓட்டுபவர்களுக்கு வருடத்திற்கு ரூ.1450, நூல் சுற்றுபவருக்கு ரூ.900, ஒன்றுக்கு மேற்பட்ட பட்டறையில் பாவு ஓட்டுபவர்களுக்கு ரூ.500, பாவுபினைப்போருக்கு ரூ.220, மேஸ்திரிக்கு ரூ.220, தார் போடுவதற்கு ரூ.320, நூல் காயப்போடுபவர், தார் எடுப்பவர், பீஸ் மடிப்பவர்களுக்கு ரூ.320 என்ற கணக்கில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சுமார் ரூ.1.50 கோடி போனஸ் வழங்கப்பட உள்ளது.
கூட்டத்தில் வெள்ளகோவில் நகர மன்ற தலைவர் கனியரசி முத்துக்குமார், வெள்ளகோவில் வட்டார விசைத்தறிவு உரிமையாளர் சங்க தலைவர் எம்.எஸ்.மோகன செல்வம், வெள்ளகோவில் அடைப்புத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ.எம்.சி.செல்வராஜ், வீரசோழபுரம் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுச்சாமி, வெள்ளகோவில் தி.மு.க. விசைத்தறி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் வி.வி.தம்பிதுரை, செயலாளர் சதாசிவம், இந்திய தேசிய தொழிற்சங்க தலைவர் பாலு, செயலாளர் அசோக் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், விசைத்தறி உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது.
- கன்னிவாடி சந்தை வாரம்ேதாறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.
குண்டடம்:
தமிழகத்தில் நடைபெறும் ஆடுகள் விற்பனை சந்தையில் திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி சந்தையும் ஒன்றாகும். கன்னிவாடி சந்தை வாரம்ேதாறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது. அதே நேரம் ஆடுகள் வரத்து அதிகரிப்பால் விலையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது.
இது குறித்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரி மகேந்திரன் கூறியதாவது:-
இந்த வார சந்தைக்கு மூலனூர், அரவக்குறிச்சி, தாராபுரம், பகவான் கோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்குவதற்காக மேச்சேரி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஆந்திரா, சென்னை, உடுமலை, பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும், இறைச்சிக்காகவும் கொண்டு செல்கின்றனர்.
ஆடுகளின் வரத்து அதிகரித்திருந்ததாலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதாலும் புத்தாடைகள் போன்ற பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் வியாபாரிகள், விவசாயிகள் அதிக அளவில் ஆடுகளை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்
இதனால் கடந்த வாரங்களில் இறைச்சிக்காக வாங்கப்படும் 10 கிலோ எடையுள்ள ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்து 200க்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.5 ஆயிரத்து 500க்கு விலைபோனது. ரூ.12 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடுகள் இந்த வாரம் ரூ.9 ஆயிரத்து 500ஆக குறைந்துவிட்டது. இதனால் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. மேலும் நேற்று நடைபெற்ற சந்தையில் சுமார் ரூ.10 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






