என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கி உள்ளனர்.
    • ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

    உடுமலை:

    கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், போடிப்பட்டி முருகன் கோவில் உள்ளிட்ட உடுமலை பகுதி முருகன் கோவில்கள் மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள், வண்ண வண்ண மின்விளக்குகளால் விழா கோலம் பூண்டுள்ளது.

    முருகப்பெருமானுக்கு 16 வகையான அபிஷேகப்பொருட்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வரிசையில் நின்று முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்தும், காப்பு கட்டியும் விரதம் தொடங்கி உள்ளனர்.

    பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி சாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. விழாவில் காலை 10 மணியளவில் ஞானதண்டாயுதபாணி, சாது சன்யாசி அலங்காரத்திலும், மாலை 6 மணிக்கு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து இரவு 8 மணியளவில் இந்திர விமானத்தில் சுவாமி திரு வீதி விழா நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வேடர் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

    நாளை (புதன் கிழமை) பாலசுப்பிரமணியர் அலங்காரம் மற்றும் யானை வாகனத்தில் திருவீதி உலா, வியாழக்கிழமை வைதீகாள் அலங்காரம், சின்னமயில் வாகனத்தில் திருவீதி உலா நடைபெறவுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் அம்மையப்பன் பூஜை செய்து சக்தி வேல் வாங்கும் உற்சவம் நடைபெறும்.

    நிகழ்வின் உச்சமான சூரசம்காரம் வரும் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. பக்தர்கள் கோவில் வளாகம் மற்றும் வீடுகளில் விரதமிருக்க தொடங்கினர்.

    • விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
    • விளக்கத்தின் அடிப்படையில் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் யூனியன் மில் மெயின் ரோட்டில் பிரபல தியேட்டர் ஒன்று உள்ளது. இங்கு தீபாவளி அன்று அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவின் அடிப்படையில் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், வருவாய் அதிகாரி தேவி, கிராம நிர்வாக அதிகாரி விஜயராஜ் ஆகியோர் தியேட்டரில் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக காலை 7.10, 7.25, 8.10, 8.25 என 6 காட்சிகள் வெளியிட்டு இருப்பது தெரியவந்தது.

    விசாரணைக்கு பின் இது தொடர்பான அறிக்கையை திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு தாசில்தார் அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அனுமதித்த நேரத்துக்கு முன்பாக திரையிட ப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப ப்பட்டுள்ளது .அந்த விளக்க த்தின் அடிப்படையில் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    • அபிஷேக கட்டணத்தை ரூ.500லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி உள்ளனர்.
    • கந்த சஷ்டி விழா கோவில்கள் தோறும் நடைபெற்று க்கொண்டிருக்கிறது.

    திருப்பூர்:

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கந்த சஷ்டி விழா கோவில்கள் தோறும் நடைபெற்று க்கொண்டிருக்கிறது. கந்தசஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இந்து சமய அறநிலையத்துறையினர் அபிஷேக கட்டணத்தை ரூ.500லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தியும், விஸ்வரூப தரிசன கட்டணத்தை ரூ.100 லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தியும் செய்தி வெளியிட்டிருப்பது மிகவும் வேதனையான விஷயமாக உள்ளது. இந்து அறநிலையத்துறையினரின் செயலானது கடவுளை காட்சிப்பொருளாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருப்பதாக உள்ளது.

    அத்துடன் முக்கியமான விழாக்காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவோ, அல்லது பக்தர்களின் வாகனங்களை நிறுத்தும் இடங்களில் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை கட்டுப்படுத்தவோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு கட்டணத்தை அதிகப்படுத்தி பணம் சம்பாதிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவது ஏன்?. முக்கிய விழாக்காலங்களில் கோவில்களில் கூட்ட நெரிசல் இருக்கும் என்பது தெரிந்தும் தமிழக அரசு கண்டும் காணாதது மாதிரி நடந்து கொள்வதை சிவசேனா கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • வேளாண் பல்கலையின் ஆராய்ச்சி உதவியாளர் பிரிவின் கீழ் தற்காலிக பணி வாய்ப்புகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
    • பி.எஸ்சி., அக்ரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள், 15-ந்தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.

    திருப்பூர்:

    வேளாண் பல்கலையின் ஆராய்ச்சி உதவியாளர் பிரிவின் கீழ் தற்காலிக பணி வாய்ப்புகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பயிர் மேலாண்மை துறையின் கீழ், பயிர் பல்வகைப்படுத்துதல் பிரிவின் கீழ் திட்ட ஆராய்ச்சிக்கு ஓராண்டு தற்காலிக அடிப்படையில், இளம் தொழில்வல்லுநர் ஒருவரும், விவசாய பயிர்களில் விதை உற்பத்தி ஆராய்ச்சியின் கீழ் ஜூனியர் ஆராய்ச்சி உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கு மாத ஊதியம், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. பி.எஸ்சி., அக்ரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள், 15-ந்தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் காலை 9 மணிக்கு பயிர் மேலாண்மை துறையில் நடைபெறும். மேலும், விபரங்களை https://tnau.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம். 

    • இந்தப்பள்ளியில் 2024-2025- ம் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு மற்றும் 9- ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
    • 6 மற்றும் 9-ம் வகுப்பில் பெண்களுக்கான சேர்க்கையும் நடைபெற உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதியில் சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் 2024-2025- ம் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு மற்றும் 9- ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான அகில இந்திய சைனிக் பள்ளிகளின் நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 7-ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. விண்ணப்பதாரர்கள் https://aissee.nta.nic.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை அடுத்த மாதம் 16- ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 6 மற்றும் 9-ம் வகுப்பில் பெண்களுக்கான சேர்க்கையும் நடைபெற உள்ளது. 6-ம் வகுப்பில் சேரும் விண்ணப்பதாரர் 31.03.2024 அன்று 10 முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும். 9-ம் வகுப்பில் சேரும் விண்ணப்பதாரர் 31.03.2024 அன்று 13 முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும். சேர்க்கையின் போது அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் இருந்து 8- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் இது குறித்த முழுமையான விவரங்களை nta.ac.in ; https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

    • மாநகராட்சியின் மேற்பார்வையில் தேசிய நகர்ப்புற இயக்கத்தில் தங்கி இருக்கும் ஆதரவற்றவர்களால் நடத்தப்படுகிறது.
    • துணை ஆணையாளர் சுல்தானா, மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் ஆலங்காட்டில் மலிவு விலையில் உயர்தர உணவு வழங்கும் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் மேற்பார்வையில் தேசிய நகர்ப்புற இயக்கத்தில் தங்கி இருக்கும் ஆதரவற்றவர்களால் நடத்தப்படுகிறது. புதிதாக அமைந்துள்ள இந்த உணவகத்தை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், துணை ஆணையாளர் சுல்தானா, மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த உணவகத்தில் காலை உணவாக ஒரு வடை ரூ.5, மூன்று இட்லி ரூ.15, பொங்கல், கிச்சடி தலா ரூ.20-க்கும், மதிய உணவாக முழு சாப்பாடு ரூ.30, குஸ்கா, தக்காளி சாதம், லெமன் சாதம், புளி சாதம், பீட்ரூட் சாதம், மல்லி சாதம் ஆகியவை தலா ரூ.15-க்கும், தயிர் சாதம், வெஜ்பிரியாணி ஆகியவை தலா ரூ.20-க்கும், இரவு உணவாக 3 இட்லி ரூ.15-க்கும், இரண்டு சப்பாத்தி ரூ.15-க்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் உணவின் தரம் குறித்து தொடர்ந்து மாநகராட்சி சார்பில் கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா இன்று கொடிேயற்றுத்துடன் தொடங்கியது.
    • பக்தர்கள் விரத காப்பு அணிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா இன்று கொடிேயற்றுத்துடன் தொடங்கியது.

    திருப்பூர் மாநகர் காலேஜ் ரோடு கொங்கணகிரியில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்த சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்தசஷ்டி சூரசம்ஹார விழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி, இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா ெதாடங்கியது. தொடர்ந்து, பக்தர்கள் விரத காப்பு அணிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதேபோல் வாலிபாளையத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில், பொங்கலூர் அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவில், சிவன்மலை கோவில், ஊத்துக்குளி கதித்தமலை வெற்றிவேலாயுத சுவாமி கோவில், அலகுமலை கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று மாலை கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் பக்தர்கள் காப்பு அணிந்து தங்களது விரதத்தை தொடங்குகின்றனர். 18-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. அதுவரை தினமும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.   

    • அரசுப்பள்ளி மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்த பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் கலைத்திருவிழா பள்ளிகல்வித்துறையால் நடத்தப்பட்டது.
    • உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    திருப்பூர்:

    அரசுப்பள்ளி மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்த பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் கலைத்திருவிழா பள்ளிகல்வித்துறையால் நடத்தப்பட்டது.மாவட்ட அளவிலான தனிநபர், குழு போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் மாநில அளவில் நடக்கவுள்ள போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவர் குழுவினர் விபரங்களை மாவட்ட கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தனிநபர் பிரிவில் 120 பேரும் குழுபிரிவில் 316 பேரும் தேர்வாகியுள்ளனர். அதில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    குறிப்பாக காற்றுக்கருவி - இஜிரா (அரசு உயர்நிலைப்பள்ளி, சோழமாதேவி), ஓவியம் - ஸ்ரீசபரிஆகாஷ் (அரசு மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம்), இயற்கை காட்சி வரைதல் -- ஸ்ரீகிருஷ்ணாகுமார், ரூபன் (அரசு மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம்) ஆகியோர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.இவர்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

    • அதிக மழை காரணமாக தக்காளி பழங்கள் அழுகி வருகின்றன.
    • கார்த்திகைப் பட்டத்தில் விவசாயிகள் தக்காளி நடவு செய்ய ஆயத்தம் ஆகி வருகின்றனர்.

    திருப்பூர்:

    டிப்பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதத்தில் மழை இன்மையால் விளைச்சல் அதிகரித்தது. இதனால் ஒரு பெட்டி (14கிலோ) தக்காளி 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையானது. பறிப்பு கூலிக்கு கூட கட்டுப்படியாகாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிக மழை காரணமாக தக்காளி பழங்கள் அழுகி வருகின்றன. செடிகளின் இலைகள் தீயில் கருகியது போல் காட்சியளிக்கின்றன. செடியில் பூ, பிஞ்சு, இலைகள் என்று எதுவும் இல்லை.

    மழையால் தக்காளி விளைச்சல் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் ஒரு பெட்டி தக்காளி தற்பொழுது 500 ரூபாய்க்கு விலை போகிறது.வரும் நாட்களில் தக்காளி வரத்து வெகுவாக குறையும் அபாயம் உள்ளது. கார்த்திகைப் பட்டத்தில் விவசாயிகள் தக்காளி நடவு செய்ய ஆயத்தம் ஆகி வருகின்றனர். அவை தை மாதத்தில் தான் அறுவடைக்கு வரும். எனவே வெளியூர் வரத்து இல்லாவிட்டால் தக்காளி விலை உச்சத்தை தொடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • பஸ்சில் ஏறும் போதே சில்லரை கொடுக்க வேண்டும் என கேட்கக்கூடாது
    • சில்லரை தொடர்பான விவாதங்களை தவிர்க்க வேண்டும்

    திருப்பூர் : 

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், பஸ் நடத்துனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பஸ்களில், பயணிகள் ஏறும் போதே பயணச்சீட்டுக்கு உரிய சில்லரையுடன் பயணிக்க வேண்டும் என, பயணிகளிடம் நடத்துனர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. மாநகர பஸ்களில், பயணிகள் பஸ்சில் ஏறும் போதே சில்லரை கொடுக்க வேண்டும் என கேட்கக்கூடாது. பயணச்சீட்டு பெற பயணிகள் வழங்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று பயணச்சீட்டு வழங்க வேண்டும். பஸ்களில் சில்லரை தொடர்பான விவாதங்களை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருப்பூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர் பாஷா கூறியதாவது:-

    சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுக்க, அரசு போக்குவரத்துக்கழக டவுன் பஸ்களில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். பஸ்களில், சில்லரை பிரச்சினை என்பது தொடர்ந்து இருந்து வருகிறது. சரியான சில்லரை கொடுத்து டிக்கெட் வாங்காத பயணிகளை, நடத்துனர்கள் பாதி வழியில் இறக்கி விட்டு செல்லும் நிலை கூட உள்ளது. தற்போது, டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகளவில் மேற்கொள்ளப்படும் நிலையில் 10 ரூபாய்க்கு டீ குடித்தால் கூட, ஜிபே, போன்பே' வாயிலாக பணம் செலுத்தும் நிலை இருப்பதால், சில்லரை புழக்கம் என்பது குறைந்திருக்கிறது. எனவே பஸ் நடத்துனர்களுக்கு, போக்குவரத்து கழகம் சார்பிலேயே தேவையான சில்லரை வழங்கி மாநிலம் முழுக்க பஸ்களில் தென்படும் சில்லரை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • ஆண்டு சராசரி மழையளவு வெறும், 600 மி.மீ.., மட்டுமே என்ற நிலையில் பருவமழை தான் பிரதான நீராதாரமாக இருந்து வருகிறது.
    • வனச்சரகங்களையொட்டி, மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அவிநாசி:

    வட கிழக்குப்பருவ மழை கை கொடுப்பதால், அவிநாசி வட்டாரத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்ப துவங்கியுள்ளன.குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்த அவிநாசி, மழைமறைவு பகுதியாகவே உள்ளது.

    ஆண்டு சராசரி மழையளவு வெறும், 600 மி.மீ.., மட்டுமே என்ற நிலையில் பருவமழை தான் பிரதான நீராதாரமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில் வட கிழக்குப்பருவ மழை கை கொடுக்க துவங்கியிருக்கிறது.

    அவிநாசி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டைகள் நிரம்ப துவங்கியுள்ளன. குறிப்பாக 2 நாள் முன் 120 மி.மீ., மழை பெய்தது விசவாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    மழையால் அசநல்லிபாளையம் குளம், தாமரைக்குளம், கருவலூர் குளம் மற்றும் வெள்ளியம்பாளையத்தில் உள்ள நல்லாறு செக்டேம் ஆகியவை வேகமாக நிரம்புகின்றன. அதேபோல் பிற ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளும் மழைக்கு நிரம்ப துவங்கியுள்ளன. இன்னும் ஓரிரு நாட்கள் இதே போன்று மழை பெய்யும் பட்சத்தில் குளம், குட்டைகள் நிரம்பி நீர் வளம் பெருகும் என விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர்.

    சில மாதங்களுக்கு முன் குளம் குட்டைகளில் இருந்து, விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதன் அடிப்படையில் பல குளம், குட்டைகளில் இருந்து மண் எடுக்கப்பட்டது. வெட்டுக்குழிகள் ஏற்படாத வகையில் மேல் மண் மட்டுமே அள்ள வேண்டும்.

    அப்போது தான் குளம், குட்டைகள் அதன் தன்மையை இழக்காமல் இருக்கும் என்ற நிலையில் ஆழமாக அடிமண் வரை தோண்டி எடுக்கப்பட்டதால் பல இடங்களில் உள்ள குளம், குட்டைகளில் வெட்டுக்குழிகள் ஏற்பட்டு அதில் தண்ணீர் நிரம்பியுள்ளது. தப்பித்தவறி அதில் இறங்கினால் சேற்றில் சிக்கும் வாய்ப்புக்கூட உள்ளது.

    நீர் தேங்கியிருக்கும் குளம், குட்டைகள் அருகே, குழந்தைகள் சென்று விளையாடாத வகையிலான விழிப்புணர்வை, பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் தீயணைப்புத்துறையினர்.

    அவிநாசியில் கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின், முதலையுண்ட பாலகனை மீட்டெடுத்த தல வரலாறு உடைய தாமரைக்குளம், மங்கலம் ரோட்டில் உள்ளது. ஏறத்தாழ, 103 ஏக்கர் பரப்பளவு உடைய தாமரைக்குளம், சுற்றுவட்டார கிராமங்களில் நஞ்சை விவசாய பூமிகளுக்கு பாசன நீர் ஆதாரமாக விளங்குகிறது.

    கோவை மாவட்டம், அன்னூரில் துவங்கி கருவலூர், நம்பியாம்பாளையம், செம்பியநல்லூர் வழியாக பாய்ந்து வரும் மழை நீரோட்டமானது தாமரை குளத்திற்கு வந்தடைகிறது. அதன்பின் உபரிநீராக ராஜ வாய்க்கால் வழியாக வெளியேறி ராக்கியாபாளையம், திருமுருகன்பூண்டி வழியாக நல்லாற்றில் கலந்து நொய்யலில் சங்கமிக்கிறது.

    கடந்த 2 நாள் முன் பெய்த மழையால் தண்ணீர் அதிகரித்து வர துவங்கியது. சாலையப்பாளையத்தில் உள்ள குட்டை நிரம்பி மதகு வழியாக உபரி நீர் தாமரைக்குளத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடரும் நிலை உள்ளதால் பொதுப்பணித்துறையினர் தாமரைக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தடையின்றி தண்ணீர் பாய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் அரிய வகை வனவிலங்குகள் அதிகளவு உள்ளன. இந்த வனச்சரகங்களையொட்டி, மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக நீண்ட கால பயிரான மா, தென்னை மற்றும் மானாவாரி சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது.வனத்தில் போதிய மழை இல்லாத போது, தண்ணீர் தேவைக்காக, வன எல்லையிலுள்ள விளைநிலங்களுக்கு விலங்குகள் இடம் பெயர்ந்து பயிர்களையும் சேதப்படுத்தும். இதனால் மனித - வனவிலங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவாகும்.

    வனத்திலுள்ள சிறு ஓடைகளில் மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் வரத்து இருக்கும். இப்பிரச்னைக்கு தீர்வு காண வனத்துறை சார்பில் இரு வனச்சரகங்களிலும், விலங்குகளின் குடிநீர் தேவைக்காக காட்டாறுகள், ஓடைகளின் குறுக்கே 50க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதே போல் 40 குடிநீர் தொட்டிகளும் உள்ளன.

    இதில் இரு வனச்சரகங்களிலும் தலா 5 தொட்டிகளுக்கு, போர்வெல் மற்றும் சோலார் மின் மோட்டார் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக தண்ணீர் தேவைக்காக தாவர உண்ணிகள், மூணாறு ரோட்டை கடந்து அமராவதி அணைக்கு வந்து செல்லும்.இந்நிலையில் வடகிழக்கு பருவமழையானது மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக பெய்து வருகிறது. இதனால் வனத்திலுள்ள தடுப்பணைகள், தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வருகிறது.இதனால் விளைநிலங்களுக்கு வனவிலங்குகள் இடம் பெயர்வது வெகுவாக குறைந்துள்ளது. வனமும் பசுமைக்கு திரும்பி வருவதால் தாவர உண்ணிகள் அதிக தூரம் இடம் பெயராது என விவசாயிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.

    • வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் அமைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
    • பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு, 20 கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    சாலைகள், தெருக்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரியும் கால்நடைகள், விலங்குகளை பராமரிக்கும் வகையில், வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் அமைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தன்னார்வலர்கள், அரசு சாரா நிறுவனங்கள், பிராணிகள் துயர் துடைப்பு சங்கங்கள் மற்றும் பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு, 20 கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. தெருவில் திரியும் தெருநாய்களை ஓரிடத்தில் வைத்து, அவற்றுக்கு கால்நடை டாக்டர்களை கொண்டு கருத்தடை செய்வது, அவற்றை பிடித்த இடத்திலேயே கொண்டு சென்று சேர்ப்பது, காயம் அடைந்து தெருவில் திரியும் நாய்களுக்கு சிகிச்சை வழங்குவது உள்ளிட்ட பல பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இத்தகைய பணிகளை மேற்கொள்ள மாவட்டம் வாரியாக பிரத்யேக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி, அந்தந்த மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையினர் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என அரசின் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

    ×