என் மலர்
திருப்பூர்
- தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது.
- காங்கயம் நகர பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பாதாள சாக்கடைகளில் கழிவுநீர் வழிந்து ஓடியது.
காங்கயம்:
தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் காங்கயம் நகர பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பாதாள சாக்கடைகளில் கழிவுநீர் வழிந்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் ஆங்காங்கே தேங்கி நின்றது. மேலும் வாகனத்தில் செல்பவர்களுக்கு சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால், ரோடு சரியாக தெரியாததால் ஆங்காங்கே சிறிது நேரம் வாகனத்தை ஓரம் கட்டி பார்க்கிங் லைட்டை எரிய விட்டு நின்றனர். இந்த தொடர் மழையால் காங்கயம் பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவில் உள்ள ஆவின் நிறுவனத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
- மாநகர செயலாளர் டி.கே.டி நாகராஜ், நிர்வாகிகள் சிவபாலன், மகளிர் அணி கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவில் உள்ள ஆவின் நிறுவனத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாதன், ஆவின் பொது மேலாளர் சுஜாதா, துணைப்பதிவாளர் ஆவின் இரா. கணேசன், வடக்கு மாநகர செயலாளர் டி.கே.டி நாகராஜ், நிர்வாகிகள் சிவபாலன், மகளிர் அணி கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது.
- கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக நாள்தோறும் அரசு பஸ்களும், விசேஷ நாட்களில் கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்குவது வழக்கம்.
உடுமலை:
உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது.இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா,சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் சுயம்புவாக ஒரு சேர எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்கள். அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் அருவியில் குளித்து மகிழவும் நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள்,பொதுமக்கள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக நாள்தோறும் அரசு பஸ்களும், விசேஷ நாட்களில் கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்குவது வழக்கம்.ஆனால் நேற்று உடுமலையில் இருந்து திருமூர்த்தி மலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த பக்தர்கள் உடுமலை மத்திய பஸ் நிலையத்திலேயே மணி கணக்கில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,
தீபாவளி பண்டிகை விடுமுறை மற்றும் அமாவாசை விழாவை கொண்டாடுவதற்கு திருமூர்த்தி மலைக்கு வருகை தந்தோம்.ஆனால் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து திருமூர்த்தி மலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மத்திய பஸ் நிலையத்திலேயே மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டபோது பஸ் வரும் என்றார்கள்.ஆனால் நேரம் சென்றதே தவிர பஸ் வரவில்லை.
மேலும் அமாவாசையையொட்டி மதியம் 12 மணிக்குள் திதி,தர்ப்பணம் கொடுத்து 12 மணியில் இருந்து 1 மணிக்குள் முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபாடு செய்ய வேண்டும்.ஆனால் பஸ் வசதி இல்லாததால் திருமூர்த்தி மலைக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க இயலவில்லை. ஒரு சிலர் ஆட்டோ மற்றும் வேனுக்கு நபர் ஒன்றுக்கு ரூ.200 கொடுத்து திருமூர்த்தி மலைக்கு சென்றனர். போதிய பஸ்கள் இருந்தும் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள். பொதுமக்களின் எண்ணங்கள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே அதிகாரிகள் உள்ளனர்.ஆனால் உடுமலை போக்குவரத்து கிளை அதிகாரிகள் பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டாதது வேதனை அளிக்கிறது. இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.எனவே உடுமலையில் இருந்து திருமூர்த்தி மலைக்கு போதிய பஸ் வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஆனால் கார்,வேன்,பைக் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பஞ்சலிங்க அருவிக்கு சென்று உற்சாகத்தோடு குளித்து மகிழ்ந்தனர்.அதன் பின்னர் அடிவாரத்துக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்தனர்.ஒரு சில பொதுமக்கள் பாலாற்றின் கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் பஞ்சலிங்க அருவி, கோவில் மற்றும் அணைப்பகுதியில் பக்தர்கள்,சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
- திருப்பூர் மாவட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.
- விழாவிற்கு அலகுமலை கோவில் திருப்பணிக்குழு தலைவர் சின்னுக்கவுண்டர் தலைமை தாங்கினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.
பொங்கலூர் அருகே உள்ள அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று காலை தொடங்கியது. இதில் ஆறுபடை வீடு, காரிய சித்தி ஆஞ்சநேயர் வளாகத்திலுள்ள ஷண்முகம் மஹாலில் கோமாதா பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மஞ்சள் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், அங்குரார்ப்பனம் சங்கல்பம் ஆகியன நடைபெற்றது. பின்னர் முருகனின் வேலுக்கு காப்பு கட்டியவுடன், குழந்தைகள், பெரியவர்கள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கங்கணம் அணிந்து சஷ்டி விரதத்தை தொடங்கினார்கள்.
விழாவிற்கு அலகுமலை கோவில் திருப்பணிக்குழு தலைவர் சின்னுக்கவுண்டர் தலைமை தாங்கினார். சிவகிரி ஆதினம், உத்தண்டராஜகுரு சிவ சமயபண்டித குருசுவாமிகள் முன்னிலை வகித்து ஆசியுரை வழங்கினார். வாவிபாளையம் ஞானபாரதி வெ.ஆனந்தகிருஷ்ணன் சொற்பொழிவு நடைபெற்றது.
தொடர்ந்து முதல்நாள் யாகசாலை பூஜைகள், மண்டபார்ச்சனை, தீபாராதனை, வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை ஆகியனவும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தினசரி காலை மற்றும் மாலை வேலைகளில் வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது. வருகிற 18-ந் தேதி காலையில் கந்த சஷ்டி விழாவும், மாலையில் சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.45 மணிக்கு மேல் சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மங்கலம் அருகே உள்ள குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில்கந்த சஷ்டி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை 8:30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வருகிற 18-ந்தேதி சஷ்டி அன்று சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் வைபவம் நடக்கிறது. 19-ந்தேதி காலை 10 மணிக்கு வள்ளி தெய்வானையுடன் குழந்தை வேலாயுதசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்து மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
தாராபுரம் புதுபோலீஸ் நிலையம் எதிரில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா மற்றும் முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. நேற்று காலை 7.30 மணிக்கு கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சளுடன் கங்கணம் கட்டி விரதத்தை தொடங்கினர். மாலை 4 மணிக்கு செண்பக சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேக ஹோம பூஜைகளும் நடைபெற்றது. வருகிற 18-ந்தேதி கந்த சஷ்டியை முன்னிட்டு காலை 8 மணி முதல் சிறப்பு பூஜைகளும், மாலை 5 மணிக்கு சூரசம்ஹார விழாவும் நடைபெற உள்ளது. 19-ந்தேதி மாலை 6.30 மணிக்கு முருகபெருமானுக்கு வள்ளி-தெய்வானையுடன் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவில் பாலமுருகன் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) வரை தொடர்ந்து 6 நாட்கள் நடக்கிறது.
கந்தசஷ்டி விழாவையொட்டி திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் நேற்று மாலை சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சண்முக சுப்பிரமணியர் வெண்மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இங்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு காப்பு கட்டப்பட்ட பின் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேப்போல் காலேஜ் ேராட்டில் உள்ள கொங்கணகிரி கந்தபெருமான் கோவிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.
அவினாசி அருகே சேவூர் அறம் வளர்ந்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் சோமஸ்கந்தராய் அருள்பாலிக்கும் கல்யாண சுப்பிரமணிய சாமிக்கு, கந்தசஷ்டி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 17 -ந்தேதி வரை தினசரி அலங்கார பூஜைகளும், மகாதீபாராதனையும் நடக்கிறது.18-ந் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. பல்லடம் அருகே உள்ள முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் நேற்று விநாயகர் வேள்வியுடன் கந்தசஷ்டி விழாதொடங்கியது. 18-ந்தேதி சூரசம்ஹார விழா நடக்கிறது.
- பல லட்சக்கணக்கான பக்தர்கள் கந்தசஷ்டி விரத நாட்களில் மிக கடுமையான விரதங்களை மேற்கொண்டு திருச்செந்தூர் முருகனைக் கண்டு அருள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்றனர்.
- தரிசன கட்டணத்தை பல மடங்காக உயர்த்தி பக்தர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசை இந்து முன்னேற்ற கழகம் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
திருப்பூர்:
இந்து முன்னேற்றக்கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் ராதா எஸ். சுதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பல லட்சக்கணக்கான பக்தர்கள் கந்தசஷ்டி விரத நாட்களில் மிக கடுமையான விரதங்களை மேற்கொண்டு திருச்செந்தூர் முருகனைக் கண்டு அருள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்றனர். ஆனால் தரிசன கட்டணத்தை பல மடங்காக உயர்த்தி பக்தர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசை இந்து முன்னேற்ற கழகம் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
மேலும் கடவுளை காட்சிப் பொருளாக வைத்துக் கொண்டு அதன் மூலம் லாபத்தை ஈட்டிட இந்து கோவில் ஒன்றும் லாப நோக்கத்துடன் செயல்படும் நிறுவனங்கள் அல்ல என்பதை தமிழக அரசு புரிந்து கொண்டு சிறப்பு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னேற்ற கழகம் சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
- 60 வாா்டுகளிலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 600 டன் குப்பைகள் சேகரமாகி வருகிறது.
- பட்டாசு மற்றும் இதர குப்பை கழிவுகளின் அளவு அதிகமாக இருந்தது
திருப்பூர் :
திருப்பூா் மாநகரில் உள்ள 60 வாா்டுகளிலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 600 டன் குப்பைகள் சேகரமாகி வருகிறது. இந்தக் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் லாரிகள் மூலமாக அப்புறப்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையையொட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டாசு மற்றும் இதர குப்பை கழிவுகளின் அளவு அதிகமாக இருந்தது. திருப்பூா் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கூடுதலாக 12 டன் பட்டாசுக்குப்பைகள் அதாவது 612 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட தீபாவளி பட்டாசு கழிவுகளின் அளவு நிகழாண்டு குறைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
- திருப்பூரில் திரையரங்குகளைத் தவிர பொழுதுபோக்கு வசதிகள் போதுமான அளவு இல்லை.
- விடுமுறை நாள்களில் மாநகராட்சி வெள்ளிவிழாப் பூங்காவில் குவிவது வழக்கம்
திருப்பூர் :
பின்னலாடை நகரான திருப்பூரில் திரையரங்குகளைத் தவிர பொழுதுபோக்கு வசதிகள் போதுமான அளவு இல்லை. இதனால் பெரும்பாலானவா்கள் சனி, ஞாயிறு வார விடுமுறை நாள்களில் மாநகராட்சி வெள்ளிவிழாப் பூங்காவில் குவிவது வழக்கம்.
இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையையொட்டி, திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டதால் ஏராளமான வடமாநில தொழிலாளா்கள் காலையிலேயே பூங்காவில் குவியத் தொடங்கினா். பூங்காவுக்கு வருகை தந்த தொழிலாளா்கள் டிக்கெட் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனா். குழந்தைகள் ஊஞ்சல், தண்ணீா் படகு, ராட்டினம் ஆகியவற்றில் விளையாடி மகிழ்ந்தனா். முன்னதாக பூங்காவில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக 10க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.
- உடுமலை அருகே உள்ள சுற்றுலாத்தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
- நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உடுமலை :
தீபாவளி விடுமுறையை ஒட்டி உடுமலை அருகே உள்ள சுற்றுலாத்தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்தி மலையில் தீபாவளி விடுமுறையை ஒட்டி ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கானோா் குடும்பத்துடன் வந்திருந்தனா். அமணலிங்கேஸ்வரா் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின்னா் பஞ்சலிங்கம் அருவியில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். பின்னா் இயற்கை எழில் கொஞ்சும் திருமூா்த்தி அணை பகுதியை கண்டு ரசித்தனா். இந்தப்பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி விடுமுறை நாளை கொண்டாட அமராவதி அணைப்பகுதிக்கு குடும்பத்துடன் வந்த மக்கள் இங்குள்ள முதலைப்பண்ணையை கண்டுகளித்தனா். அமராவதி அணைக்கு முன்புறம் உள்ள பூங்காவில் ஆயிரக்கணக்கானோா் குவிந்தனா். மேலும் இங்குள்ள மீன் பண்ணை, சிறுவா் பூங்காவிலும் கூட்டம் அலைமோதியது. அமராவதி அணையின் மேல்புறம் சென்ற மக்கள் அணையின் அழகை பாா்த்து ரசித்தனா். பின்னா் படகுத்துறைக்கு சென்று மகிழ்ச்சியுடன் படகு சவாரி செய்தனா்.
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள சின்னாறு மலைப்பகுதிக்கு நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் வனப்பகுதியின் அழகை கண்டு ரசித்தனா். இங்குள்ள பூங்கன் ஓடைப்பகுதியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மான்கள் மற்றும் யானைகளை நேரில் பாா்த்து பரவசம் அடைந்தனா். குறிப்பாக மூணாறு செல்லும் வாகனங்கள் தமிழக-கேரள எல்லையில் பல கிலோ மீட்டா் தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. இதனால் வனப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையொட்டி உடுமலை, அமராவதி வன அலுவலா்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
- மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
- சாலையின் பல்வேறு இடங்களில் யானைகள் அடிக்கடி கடந்து செல்வதோடு குட்டிகளுடனும் உலா வருகின்றன.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மறையூர், மூணாறு ரோட்டில் சுற்றுலா வாகனங்கள் அதிக அளவு சென்று வந்த வண்ணம் உள்ளது. மேலும் மருத்துவம், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கும், மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த ரோடு ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகம் மற்றும் கேரள மாநிலம் சின்னாறு வனப்பகுதியில் அமைந்துள்ளது. மலைப்பகுதிகளில் மழைபொழிவு அதிகரித்துள்ள நிலையில் யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
சாலையின் பல்வேறு இடங்களில் யானைகள் அடிக்கடி கடந்து செல்வதோடு குட்டிகளுடனும் உலா வருவதால், சுற்றுலா பயணிகள்- பொதுமக்கள் மிகுந்த கவனமாக செல்ல வேண்டும். தொடர் விடுமுறை காரணமாக வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் இந்த சாலையில், வாகனங்களை நிறுத்தக்கூடாது. காட்டுயானை உள்ளிட்ட வன விலங்குகளை கண்டால், வாகனங்களை நிறுத்தி விட வேண்டும். ஹாரன் அடிப்பது போன்ற வன விலங்குகளை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது
- இம்மாதத்துக்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு.
காங்கயம்:
வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும், ஐப்பசி மாதம் ஐஸ்வா்யங்களை அள்ளித் தரும் மாதம் என்பது பக்தா்களின் நம்பிக்கை. இம்மாதத்துக்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு.
இந்நிலையில் சிவன்மலை முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முதல் பூஜையாக கோமாதா பூஜை நடைபெற்றது. பின்னா் காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றன.
மதியம் 12 மணிக்கு சிவன்மலை முருகரான சுப்பிரமணிய சுவாமியும், வள்ளி, தெய்வானையும் சிறப்பு அலங்காரத்தில் உள்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து, பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். தொடா்ந்து உச்சிகால பூஜை நடைபெற்றது. தீபாவளியை தொடா்ந்து திங்கள்கிழமையும் விடுமுறை என்பதால் பக்தா்கள் அதிக அளவில் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
- திருப்பூர் மாநகர் பகுதியில் பட்டாசு வெடித்தது தொடர்பாக வழக்குப்பதிவு ஏதும் செய்யப்படவில்லை
- அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அரசு அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க நேரம் அறிவிக்கப்பட்டது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பட்டாசு வெடித்தாலோ, அதிக சத்தத்துடன் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தாலோ போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன்படி திருப்பூர் மாநகர் பகுதியில் பட்டாசு வெடித்தது தொடர்பாக வழக்குப்பதிவு ஏதும் செய்யப்படவில்லை. திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உட்பட்ட புறநகர பகுதியில் தீபாவளியன்று அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கூட்டம் இருந்தால் 18, 19-ந் தேதிகளில் பஸ்களை இயக்கவும் தயாராக உள்ளனர்.
- வெளியூர் சென்றவர்கள் நேற்று முதல் திருப்பூர் திரும்ப தொடங்கியுள்ளனர்.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி சென்றனர். குறிப்பாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்கள் மூலமாக தொழிலாளர்கள் புறப்பட்டனர். கடந்த 9-ந் தேதி முதல் கோவில்வழி, மத்திய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் பகுதிகளில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 11-ந் தேதி இரவு கோவில்வழி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. 40 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். புதிய பஸ் நிலையத்தில் இருந்து 30 ஆயிரம் பேர், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் என 80 ஆயிரம் பேர் புறப்பட்டனர். கடந்த 9,10,11-ந் தேதிகளில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளதாக அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளியூர் சென்றவர்கள் நேற்று முதல் திருப்பூர் திரும்ப தொடங்கியுள்ளனர். இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது. நாளை (புதன்கிழமை) வரை பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கூட்டம் இருந்தால் 18, 19-ந் தேதிகளில் பஸ்களை இயக்கவும் தயாராக உள்ளனர்.






