என் மலர்
திருப்பூர்
- வரி வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து உள்ளது
- தமிழகத்தில் 86 சதவீதம் வரிவசூல் செய்து சாதனை படைத்துள்ளது
வெள்ளகோவில் :
தமிழகத்தில் மொத்தம் 138 நகராட்சிகள் உள்ளன. இதில் வெள்ளகோவில் நகராட்சி 2023- 2024- ஆம் ஆண்டிற்கான வரி வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து உள்ளது. அதாவது 86 சதவீத வரிகளை வசூல் செய்து தமிழகத்தில் முதலிடம் பிடித்து உள்ளது. இதுகுறித்து நகராட்சி தலைவர் மு.கனியரசி மற்றும் நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் கூறியதாவது:- நகராட்சிக்கு உட்பட்ட மக்களின் ஒத்துழைப்பினால் தமிழகத்தில் 86 சதவீதம் வரிவசூல் செய்து நகராட்சி சாதனை படைத்துள்ளது. மேலும் மீதம் உள்ள 14 சதவீத வரியினங்களை பொதுமக்கள் தாங்களே முன்வந்து செலுத்தி, வெள்ளகோவில் நகராட்சிக்கு பெருமை தேடி தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டசாலையில் விற்பனை மேளாவும் நடைபெற உள்ளது.
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்கள் சந்திப்பு முகாமும் நடைபெற உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா தொடங்கியது. இவ்விழா வருகிற 20-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. விழாவை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கலந்து கொண்டு கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
இதனை தொ டர்ந்து இன்று (புதன்கிழமை) சிவன்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மரகன்றுகள் நடும் விழாவும், நாளை (வியாழக்கிழமை) பொங்கலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்கள் சந்திப்பு முகாமும் நடைபெற உள்ளது.
மேலும் தொடர்ந்து 17-ந்தேதி அன்று கூட்டுறவு அமைப்புகளை பரவலாக்குதல் மற்றும் எளிமைப்படுத்துதல் என்ற தலைப்பில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 18-ந்தேதி என். காஞ்சிபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை மருத்துவ முகாமும், 19-ந்தேதி திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டசாலையில் விற்பனை மேளாவும் நடைபெற உள்ளது.
20-ந்தேதி (திங்கட்கிழமை) குடிமங்கலம் ஜெயராணி மகாலில் மாவட்ட அளவிலான கூட்டுறவு வாரவிழாவின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயங்கள் மற்றும் கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளனர். விழாவில் பொதுமக்கள் மற்றும் கூட்டுறவாளர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
- கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
- கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை வழிபாடு செய்துவிட்டு திரும்பி சென்றனர்.
உடுமலை, நவ.15-
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமை ந்துள்ளது திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் வழியாக நீர்வரத்தை வழங்கி வருகிறது.
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அருவியில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து காணப்பட்டது.இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி மாலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் திடீரென பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அருவியில் தண்ணீரின் சீற்றம் குறைந்ததால் கடந்த 11-ந்தேதி முதல் அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.அதைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகை விடுமுறை தினத்தை ஜாலியாக பொழுதை கொண்டாட திருமூர்த்தி மலைக்கு சுற்றுலா வந்த பயணிகள் உற்சாகத்தோடு குளித்து மகிழ்ந்தனர்.
இதையடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது. இதனால் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ள பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு, ஆர்ப்பரித்தவாறு, மலையின் அடிவார பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சுற்றிலும் தழுவியவாறு திருமூர்த்தி அணையை வந்தடைந்தது.
அதைத் தொடர்ந்து கோவில் வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு வழக்கம் போல் பூஜை நடைபெற்றது. நேற்று காலை அருவியில் குளித்து மகிழ்வதற்காக சுற்றுலா பயணிகள் ஆவலோடு திருமூர்த்தி மலைக்கு வந்தனர். ஆனால் அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் அதில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதைத் தொடர்ந்து கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை வழிபாடு செய்துவிட்டு திரும்பி சென்றனர்.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கு நீரில் இருந்து பாதுகாக்க கோவில் உண்டியல்களை பிளாஸ்டிக் பைகள் கொண்டு கட்டப்பட்டது. மேலும் அருவிக்கு வந்துள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதே போன்று உடுமலை, தளி, அமராவதி பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் சீற்றம் குறைந்து இதமான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
- மாலையில் பெண் மயில் ஒன்று இறந்து கிடந்தது
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லடம் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீநகர் பகுதியில் உள்ள மின் மாற்றி அருகே நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலையில் பெண் மயில் ஒன்று இறந்து கிடந்தது. மின்மாற்றில் மோதி இறந்ததா? அல்லது மின்கம்பியில் மோதி இறந்ததா? என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்த தகவலின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அதிகாலை 5 மணி யளவில் உடுமலை பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது
- பெரிய பழமை வாய்ந்த மரம் ஒன்று திடீரென சரிந்து சாலையின் குறுக்காக விழுந்தது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதை முன்னிட்டு சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து வானம் மேகம் மூட்டமாக காணப்படுவதுடன் இதமான சூழலும் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி யளவில் உடுமலை பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது.மழையின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் உடுமலை நகராட்சி 24 - வது வார்டுக்கு உட்பட்ட பாபுகான் வீதியில் உள்ள பெரிய பழமை வாய்ந்த மரம் ஒன்று திடீரென சரிந்து சாலையின் குறுக்காக விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் அந்த வீதியில் போக்குவரத்து இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி பணியாளர்கள் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். அதைத் தொடர்ந்து அந்த வீதியில் போக்குவரத்து சீரடைந்தது. இதே போன்று கபூர்கான் வீதியில் அடிப்படை கட்டமைப்பான கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வில்லை.இதன் காரணமாக மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் சாலையின் இரண்டு புறங்களிலும் தேங்கி நிற்கிறது.இதனால் அந்த வழியாக செல்கின்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள், உழவர் சந்தைக்கு வருகை தருகின்ற வியாபாரிகள், பொதுமக்கள், ெரயில் நிலையத்துக்கு செல்கின்ற பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:- பிரதான சாலையான கபூர்கான் வீதியில் கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஆனால் அதற்கு உண்டான முயற்சிகளை அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் சாலையின் பாதி அளவிற்கு மழைத் தண்ணீர் ஆக்கிரமித்துக் கொள்வதால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது மிகவும் நிலை தடுமாறி வருகின்றனர். எனவே கபூர்கான் வீதியில் கழிவு நீர் கால்வாய் வசதியை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று தெரிவித்தனர்.
- ஒன்றியம் தற்போது நாளொன்றுக்கு 40,000 லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது.
- 55 எண்ணிக்கை பணியாளர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.
திருப்பூர்:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கால்நடை, பால்வளம்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி பிரிவில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால்உற்பத்தியாளர்கள் புதிய நிர்வாக அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் , திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:-
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் டிசம்பர் -2018 அன்று முதல் ஈரோடு ஒன்றியத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை விவகார எல்லையாக கொண்டு சுமார் 430 சங்கங்களிலிருந்து 14,121 பால் உற்பத்தியாளர்கள் மூலம் தற்போது நாளொன்றுக்கு 1,38,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் பால்குளிர்விப்பு நிலையங்கள் 2 மற்றும் தொகுப்பு பால் குளிரகங்கள் 35 மூலம் நாளொன்றுக்கு 1,38,000 லிட்டர் பால் சேகரிக்கப்பட்டு ஈரோடு, கோவை மற்றும் இதர ஒன்றியங்களுக்கும், இணையத்திற்கும் அனுப்பப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பால் சேகரிப்பு பணியில் 50 எண்ணிக்கை பால் சேகரிப்பு ஒப்பந்த வழித்தட வாகனங்கள் செயல்படுகிறது. ஒன்றியம் தற்போது நாளொன்றுக்கு 40,000 லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. ஒன்றியத்தில் தற்போது மாதம் ஒன்றுக்கு ரூ.24 லட்சம் மதிப்பீட்டுத்தொகை பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்து வருகிறது.
ஒன்றியத்தில் தற்போது பால் விற்பனைக்காக 8 எண்ணிக்கை பால் விநியோக ஒப்பந்த வழித்தடம் செயல்பட்டு வருகிறது, பால் உற்பத்தியாளர்களுக்கு 10 தினங்களுக்கு ஒருமுறை நிலுவையில்லாமல் பணம் வழங்கப்பட்டு வருகிறது. 55 எண்ணிக்கை பணியாளர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.
அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சி, வீரபாண்டி பிரிவில் பால்குளிரூட்டும் நிலையத்தில் புதியதாக தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிநிதி உதவியுடன் ரூ.3,00,57,047 மதிப்பீட்டில் நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி ) கிர்திகா எஸ்.விஜயன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன்,பொதுமேலாளர் (ஆவின்) சுஜாதா, துணைப்பதிவாளர் (பால்வளம்) கணேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- புதுமையான தீர்வுகளை வழங்கியவர்களுக்கு பரிசு களை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்
- விழிப்பு ணர்வு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருப்பூர் மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு மற்றும் ஸ்டார்டப் டி.என் இனைந்து தயாரிக்கப்பட்டுள்ள விபத்தில்லா திருப்பூர் சாலை பாதுகாப்பு ஐடியத்தான் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் சாலைப் பாதுகாப்புக் குறித்து புதுமையான தீர்வுகளை வழங்கியவர்களுக்கு பரிசு களை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் சாலை விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்பு ணர்வு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில், திருப்பூர் மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு மற்றும் ஸ்டார்டப் டி.என் இனைந்து தயாரிக்கப்பட்டுள்ள "விபத்தில்லா திருப்பூர்" சாலை பாதுகாப்பு ஐடியத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. விபத்தில்லா திருப்பூர் உருவாக்கும் வகையில் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு, விபத்திற்கு முன்னும், பின்னும் கண்டறிதல், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பொதுவான திட்டங்கள், அதிக விபத்து ஏற்படும் இடங்கள் கண்டறிதல். தலைகவசம் அணியாமல் வருபவர்களை கண்டறிதல், அதிக வேகத்தில் வாகனம் இயக்குவதை கண்டறிதல் உள்ளிட சாலைப் பாதுகாப்புப்பை மேம்படுத்துவது குறித்து புதுமையான தீர்வுகளை வழங்க பல்வேறு தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்ற க்கப்பட்டது. இதில் ஸ்டார்டப் டி.என் இருந்து 43 விண்ணப்ப ங்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களிடமிருந்து 378 விண்ணப்பங்களும், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களிடமிருந்து 26 விண்ணப்பங்களும் பெறப்பட்டது.
பெறப்பட்ட விண்ண ப்பங்கள் சமந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னிலையில் மதிப்பீடு செய்யும் பணி நடை பெற்றது. இதில் புதுமையான தீர்வுகளை வழங்கியவர்களின் கருத்துக்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் சிறந்த தீர்வுகளை வழங்கியவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட சாலை பாதுகாப்புக்குழுவினரிடம் சமர்பிக்கப்பட்டது. மேலும், சாலை பாதுகாப்புக்குழு ஆலோசனை மேற்கொண்டு சிறந்த சாலைப்பாதுகாப்பு குறித்து தீர்வுகளை வழங்கிய நபர்கள் தேர்வு செய்யப்பட்டு இன்றைய தினம், சிறப்பாக புதுமையான தீர்வுகளை வழங்கிய ஸ்டார்டப் டி.என் பிரிவில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.30 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.20 ஆயிரம் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.30 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.15 ஆயிரம் தன்னார்வலர்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் இறுதி சுற்றுவரை கலந்து கொண்டவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் என 22 நபர்களுக்கு பரிசுகான காசோலைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கல்லூரி மாணக்கார்கள், தன்னார்வலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் சந்தோஷ்குமார்
- பின்னால் வந்த மற்றொரு கார் பயங்கர வேகமாக மோதியது.
திருப்பூர் :
கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் சந்தோஷ்குமார் (27). இவரது மனைவி இந்துமதி (23). இந்த தம்பதிக்கு பிறந்து 6 மாதமே ஆன காஜல் என்ற பெண் குழந்தை உண்டு. கடந்த 12&ந் தேதி சேலத்திற்கு காரில் சந்தோஷ்குமார் குடும்பத்துடன் புறப்பட்டார். இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, இவர்களது கார் மீது பின்னால் வந்த மற்றொரு கார் பயங்கர வேகமாக மோதியது. இந்த விபத்தில் சந்தோஷ்குமார் மற்றும் 6 மாத பெண் குழந்தையான காஜல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், இந்துமதி பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே சந்தோஷ்குமார் ஓட்டி வந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது கோவை சௌரிபாளைத்தை சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சித்தார்த் (22) என்பவரது கார் என்பது தெரியவந்தது. சித்தார்த் தனக்கு சொந்தமான காரில் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த க்ளாட்வின் (21), ஆண்ட்ரிவ் (22), ஜீவன் (22) மற்றும் அருண் (22) ஆகியோர்களுடன் செங்கப்பள்ளிக்கு வரும் போது, விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்தில் சித்தார்த் உள்பட 5 பேருக்கும் காயம் ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காரை ஓட்டி வந்த சித்தார்த் மீது அதிவேகமாக காரை ஓட்டுதல், கவனக்குறைவாக ஓட்டுதல், விபத்தை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மதுரை மாவட்டம் ஆணையூர் பகுதியை சேர்ந்த பூதப்பாண்டி என்பவரது மகன் இளங்கோவன்
- பணத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்
பல்லடம் :
மதுரை மாவட்டம் ஆணையூர் பகுதியை சேர்ந்த பூதப்பாண்டி என்பவரது மகன் இளங்கோவன் (வயது 44). இவர் கடந்த செப்.18-ந்தேதி பல்லடம், மாணிக்கபுரம் சாலை பாரதிபுரத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் சென்னையை சேர்ந்த பல் மருத்துவர் பிரபாகரன் என்பவரது வீட்டில் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த ரூ. 95 ஆயிரம் பணத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் மீது மதுரை, அவிநாசி, சேலம், திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 37-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இதையடுத்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்மொழிவின் பேரில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் பரிந்துரையின் பேரில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் குற்றவாளி இளங்கோவனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள அவரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு அளிக்கப்பட்டது. மேற்கண்ட தகவலை பல்லடம் ேபாலீசார் தெரிவித்துள்ளனர்.
- நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதியை நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
- அனைவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
முத்தூர் :
திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில் இருந்து இன்று (புதன்கிழமை) அதிகாலை கூலி வேலைக்காக ஆட்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதியை நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இன்று காலை 7 மணியளவில் காங்கயம், பழையகோட்டை சாலை, வாய்க்கால் மேடு பகுதி அருகே வந்த போது அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகில உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் போது எதிர்பாராதவிதமாக சாலையில் கவிந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 11 பேர் சாலையில் பதறியபடி கூச்சலிட்டு விழுந்தனர். இந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடோடி வந்து சாலையில் காயங்களுடன் கிடந்த அனைவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு 11 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேனில் பயணம் செய்த 11 பேரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக வந்த ஆம்புலன்ஸ்களின் சத்தத்தால் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
- முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரத்திற்கான வரைவோலை வழங்கப்படும்.
- சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும்அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம்.
திருப்பூர்:
பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்பட உள்ளது.
சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும்அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம். https://www.tnhorticulture.tn.gov.inஎன்ற தோட்டக்கலைத்துறை இணையதளத்தின் மூலமாகவும், வட்டாரதோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் விண்ணப்பங்களை பெற்று க்கொள்ளலாம்.
அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், நீர்மேலாண்மை மற்றும் முறையான மண்வளமேம்பாடு, அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்ற காரணிகளின் அடிப்படையில மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் சிறந்த விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விருது பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரத்திற்கான வரைவோலை வழங்கப்படும். மேலும் தகவலுக்குஅனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- சேலம் பைபாஸ் ரோட்டில் தினமும் வாலிபர் ஒருவர் அதிவேகமாக செல்லக்கூடிய பைக் ஒன்றில், அபாயகரமாக ஓட்டி சென்று சாகசம் செய்வதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்கள் தெரிவித்தனர்.
- பைக்கை பறிமுதல் செய்த போலீசார் துரைராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில் தினமும் வாலிபர் ஒருவர் அதிவேகமாக செல்லக்கூடிய பைக் ஒன்றில், அபாயகரமாக ஓட்டி சென்று சாகசம் செய்வதாகவும் இதனால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல்கள் தெரிவித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் அந்த வாலிபரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று செங்கப்பள்ளி அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் ஊத்துக்குளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது அவர் அவிநாசி, திருமுருகன்பூண்டியை சேர்ந்த துரைராஜ் (23) என்பதும், பெருமாநல்லுாரில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரிய வந்தது. மேலும் இவர் தனது பைக்கில் அபாயகரமாக பைபாஸ் ரோட்டில் ஓட்டி சென்று, அதை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






