search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    37 வழக்கில்  தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
    X

    குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளங்கோவன்

    37 வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

    • மதுரை மாவட்டம் ஆணையூர் பகுதியை சேர்ந்த பூதப்பாண்டி என்பவரது மகன் இளங்கோவன்
    • பணத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்

    பல்லடம் :

    மதுரை மாவட்டம் ஆணையூர் பகுதியை சேர்ந்த பூதப்பாண்டி என்பவரது மகன் இளங்கோவன் (வயது 44). இவர் கடந்த செப்.18-ந்தேதி பல்லடம், மாணிக்கபுரம் சாலை பாரதிபுரத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் சென்னையை சேர்ந்த பல் மருத்துவர் பிரபாகரன் என்பவரது வீட்டில் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த ரூ. 95 ஆயிரம் பணத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் மீது மதுரை, அவிநாசி, சேலம், திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 37-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இதையடுத்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்மொழிவின் பேரில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் பரிந்துரையின் பேரில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் குற்றவாளி இளங்கோவனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள அவரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு அளிக்கப்பட்டது. மேற்கண்ட தகவலை பல்லடம் ேபாலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×