என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் வரி வசூலில் சாதனை ெவள்ளகோவில் நகராட்சி முதலிடம்
    X

    கோப்புபடம்

    தமிழகத்தில் வரி வசூலில் சாதனை ெவள்ளகோவில் நகராட்சி முதலிடம்

    • வரி வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து உள்ளது
    • தமிழகத்தில் 86 சதவீதம் வரிவசூல் செய்து சாதனை படைத்துள்ளது

    வெள்ளகோவில் :

    தமிழகத்தில் மொத்தம் 138 நகராட்சிகள் உள்ளன. இதில் வெள்ளகோவில் நகராட்சி 2023- 2024- ஆம் ஆண்டிற்கான வரி வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து உள்ளது. அதாவது 86 சதவீத வரிகளை வசூல் செய்து தமிழகத்தில் முதலிடம் பிடித்து உள்ளது. இதுகுறித்து நகராட்சி தலைவர் மு.கனியரசி மற்றும் நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் கூறியதாவது:- நகராட்சிக்கு உட்பட்ட மக்களின் ஒத்துழைப்பினால் தமிழகத்தில் 86 சதவீதம் வரிவசூல் செய்து நகராட்சி சாதனை படைத்துள்ளது. மேலும் மீதம் உள்ள 14 சதவீத வரியினங்களை பொதுமக்கள் தாங்களே முன்வந்து செலுத்தி, வெள்ளகோவில் நகராட்சிக்கு பெருமை தேடி தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×