search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் குழந்தையுடன் தி.மு.க. கவுன்சிலர் பலி: காரை ஓட்டி வந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கைது
    X
    கைது செய்யப்பட்ட மாணவர்

    விபத்தில் குழந்தையுடன் தி.மு.க. கவுன்சிலர் பலி: காரை ஓட்டி வந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கைது

    • 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் சந்தோஷ்குமார்
    • பின்னால் வந்த மற்றொரு கார் பயங்கர வேகமாக மோதியது.

    திருப்பூர் :

    கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் சந்தோஷ்குமார் (27). இவரது மனைவி இந்துமதி (23). இந்த தம்பதிக்கு பிறந்து 6 மாதமே ஆன காஜல் என்ற பெண் குழந்தை உண்டு. கடந்த 12&ந் தேதி சேலத்திற்கு காரில் சந்தோஷ்குமார் குடும்பத்துடன் புறப்பட்டார். இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, இவர்களது கார் மீது பின்னால் வந்த மற்றொரு கார் பயங்கர வேகமாக மோதியது. இந்த விபத்தில் சந்தோஷ்குமார் மற்றும் 6 மாத பெண் குழந்தையான காஜல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், இந்துமதி பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே சந்தோஷ்குமார் ஓட்டி வந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது கோவை சௌரிபாளைத்தை சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சித்தார்த் (22) என்பவரது கார் என்பது தெரியவந்தது. சித்தார்த் தனக்கு சொந்தமான காரில் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த க்ளாட்வின் (21), ஆண்ட்ரிவ் (22), ஜீவன் (22) மற்றும் அருண் (22) ஆகியோர்களுடன் செங்கப்பள்ளிக்கு வரும் போது, விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்தில் சித்தார்த் உள்பட 5 பேருக்கும் காயம் ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காரை ஓட்டி வந்த சித்தார்த் மீது அதிவேகமாக காரை ஓட்டுதல், கவனக்குறைவாக ஓட்டுதல், விபத்தை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×