என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்த 60 பேர் மீது வழக்கு
- திருப்பூர் மாநகர் பகுதியில் பட்டாசு வெடித்தது தொடர்பாக வழக்குப்பதிவு ஏதும் செய்யப்படவில்லை
- அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அரசு அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க நேரம் அறிவிக்கப்பட்டது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பட்டாசு வெடித்தாலோ, அதிக சத்தத்துடன் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தாலோ போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன்படி திருப்பூர் மாநகர் பகுதியில் பட்டாசு வெடித்தது தொடர்பாக வழக்குப்பதிவு ஏதும் செய்யப்படவில்லை. திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உட்பட்ட புறநகர பகுதியில் தீபாவளியன்று அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story






