என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சில்லரை பிரச்சினை"

    • பஸ்சில் ஏறும் போதே சில்லரை கொடுக்க வேண்டும் என கேட்கக்கூடாது
    • சில்லரை தொடர்பான விவாதங்களை தவிர்க்க வேண்டும்

    திருப்பூர் : 

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், பஸ் நடத்துனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பஸ்களில், பயணிகள் ஏறும் போதே பயணச்சீட்டுக்கு உரிய சில்லரையுடன் பயணிக்க வேண்டும் என, பயணிகளிடம் நடத்துனர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. மாநகர பஸ்களில், பயணிகள் பஸ்சில் ஏறும் போதே சில்லரை கொடுக்க வேண்டும் என கேட்கக்கூடாது. பயணச்சீட்டு பெற பயணிகள் வழங்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று பயணச்சீட்டு வழங்க வேண்டும். பஸ்களில் சில்லரை தொடர்பான விவாதங்களை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருப்பூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர் பாஷா கூறியதாவது:-

    சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுக்க, அரசு போக்குவரத்துக்கழக டவுன் பஸ்களில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். பஸ்களில், சில்லரை பிரச்சினை என்பது தொடர்ந்து இருந்து வருகிறது. சரியான சில்லரை கொடுத்து டிக்கெட் வாங்காத பயணிகளை, நடத்துனர்கள் பாதி வழியில் இறக்கி விட்டு செல்லும் நிலை கூட உள்ளது. தற்போது, டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகளவில் மேற்கொள்ளப்படும் நிலையில் 10 ரூபாய்க்கு டீ குடித்தால் கூட, ஜிபே, போன்பே' வாயிலாக பணம் செலுத்தும் நிலை இருப்பதால், சில்லரை புழக்கம் என்பது குறைந்திருக்கிறது. எனவே பஸ் நடத்துனர்களுக்கு, போக்குவரத்து கழகம் சார்பிலேயே தேவையான சில்லரை வழங்கி மாநிலம் முழுக்க பஸ்களில் தென்படும் சில்லரை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    ×