search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanda Shashti"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு எண்.06001 சிறப்பு ரெயில் இன்று (17-ந்தேதி) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.
    • மற்றொரு சிறப்பு ரெயில் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்டு டாடா நகருக்கு இயக்கப்படுகிறது.

    சென்னை:

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். பக்தர்கள் வசதிக்காக தெற்கு ரெயில்வே சிறப்பு கட்டண ரெயில்களை அறிவித்து உள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு எண்.06001 சிறப்பு ரெயில் இன்று (17-ந்தேதி) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.

    இந்த ரெயில் நாளை பகல் 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இதே போல் திருச்செந்தூரில் இருந்து நாளை (18-ந்தேதி) எண். 06002 சிறப்பு கட்டண ரெயில் தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருச்செந்தூரில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.

    இந்த 2 சிறப்பு ரெயில்களும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோனம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    மற்றொரு சிறப்பு ரெயில் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்டு டாடா நகருக்கு இயக்கப்படுகிறது. இன்று பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் இந்த ரெயில் மறுநாள் மாலை 5.30 மணிக்கு டாடா நகர் போய் சேருகிறது.

    • பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கி உள்ளனர்.
    • ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

    உடுமலை:

    கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், போடிப்பட்டி முருகன் கோவில் உள்ளிட்ட உடுமலை பகுதி முருகன் கோவில்கள் மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள், வண்ண வண்ண மின்விளக்குகளால் விழா கோலம் பூண்டுள்ளது.

    முருகப்பெருமானுக்கு 16 வகையான அபிஷேகப்பொருட்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வரிசையில் நின்று முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்தும், காப்பு கட்டியும் விரதம் தொடங்கி உள்ளனர்.

    பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி சாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. விழாவில் காலை 10 மணியளவில் ஞானதண்டாயுதபாணி, சாது சன்யாசி அலங்காரத்திலும், மாலை 6 மணிக்கு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து இரவு 8 மணியளவில் இந்திர விமானத்தில் சுவாமி திரு வீதி விழா நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வேடர் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

    நாளை (புதன் கிழமை) பாலசுப்பிரமணியர் அலங்காரம் மற்றும் யானை வாகனத்தில் திருவீதி உலா, வியாழக்கிழமை வைதீகாள் அலங்காரம், சின்னமயில் வாகனத்தில் திருவீதி உலா நடைபெறவுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் அம்மையப்பன் பூஜை செய்து சக்தி வேல் வாங்கும் உற்சவம் நடைபெறும்.

    நிகழ்வின் உச்சமான சூரசம்காரம் வரும் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. பக்தர்கள் கோவில் வளாகம் மற்றும் வீடுகளில் விரதமிருக்க தொடங்கினர்.

    • முருகனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • 6 நாட்களுக்கு தினசரி மாலை 6.30 மணியளவில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில், எல்.கே.சி நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி விழா முதல் நாளான நேற்று முருகனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    நேற்று செவ்வாய் கிழமை முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு தினசரி மாலை 6.30 மணியளவில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 25-ந் தேதி கந்த சஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் தொடக்கப்படுகிறது.
    • 1500 பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    திருப்பரங்குன்றம்

    முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. விழாவினையொட்டி மதுரை மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலில் தங்கி 6 நாட்கள் விரதம் இருப்பார்கள்.

    இந்த ஆண்டுக்கான விழா வருகின்ற 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழா வின் முக்கிய நிகழ்ச்சி யாக வருகின்ற 29ந் தேதி அம்பாளிடம் முருகப் பெருமான் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 30-ந் தேதி சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்கார நிகழ்ச்சியும், விழாவின் சிகர நிகழ்ச்சியாக 31-ந் தேதி காலை முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்த ருளி சிறிய சட்டத்தேரில் வலம் வரும் நிகழ்ச்சியும் அன்று மாலை 3 மணி அளவில் பாவாடை தரிச னமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஆயிரக் கணக்கான தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்காக காலையில் பால், எலுமிச்சைச்சாறு, திணை மாவு மற்றும் 1500 பக்தர் களுக்கு உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் காலையிலும் மாலையிலும் நடைபெறும் சண்முகார்ச்சனை விழா வினை பார்ப்பதற்காக கோவிலில் பல்வேறு இடங் களில் பெரிய அளவி லான திரைகள் வைக்கப் பட்டு நேரடியாக ஒளி பரப்பு செய்யப்படும். பக்தர்களுக்கு சரவணப் பொய்கையில்குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் கோவில் வாசல் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் கழிப்பறை வசதிக ளும் கோயில் நிர்வாகத்தினா லால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சூரிய கிரகணம்

    25-ந் தேதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளதால் அன்றைய தினம் பிற்பகல் 11.30 மணி அளவில் கோவில் நடை சாத்தப்பட்டு இரவு 7 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×