search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச வீட்டுமனை  பட்டா கேட்டு  அமைச்சரிடம் பெண்கள் கோரிக்கை மனு
    X

    அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த பெண்கள்.

    இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அமைச்சரிடம் பெண்கள் கோரிக்கை மனு

    • நாங்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு 6 ஆண்டுகள் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம்
    • மாவட்ட கலெக்டர், காங்கயம் தாசில்தார் என தொடர்ந்து 6 ஆண்டுகள் மனுக்கள் கொடுத்தும், தற்போது வரை எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை.

    காங்கயம்:

    ஒதுக்கீடு செய்யப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாவை வழங்க வலியுறுத்தி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் எல்லப்பாளையம்புதூர் ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து காங்கயம் தாலுகா, எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 20 பெண்கள் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை காங்கயத்தில் சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

    எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியில் 20 குடும்பங்கள் சொந்த வீடு இல்லாமல் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு 6 ஆண்டுகள் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம். இது குறித்து ஆதிதிராவிட நலத்துறை, ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கள ஆய்வு செய்து மேற்கண்ட 20 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கலாம் என விசாரணையில் உறுதி செய்தனர்.

    மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், காங்கயம் தாசில்தார் என தொடர்ந்து 6 ஆண்டுகள் மனுக்கள் கொடுத்தும், தற்போது வரை எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை. எனவே சொந்த வீடோ அல்லது வீட்டுமனைப் பட்டாவோ இல்லாமல் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×