என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • சொந்த ஊர்களுக்கு செல்ல பாலக்காடு - சென்னை ரயிலை பயன்படுத்துகின்றனர்.
    • ெரயிலில் அமர இடமில்லாமல், நீண்ட தூரம் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டியதுள்ளது.

    உடுமலை:

    தமிழகத்தில் 31 ெரயில்கள் கூடுதலாக ஒரு ெரயில்வே நிலையத்தில் நின்று செல்லும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, சேலம் ெரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் சென்னை- கோவை (12673) சேரன் எக்ஸ்பிரஸ் வரும், 19ந் தேதி முதல் காட்பாடி ெரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம் நிறுத்தப்படும்.

    பாலக்காடு- சென்னை (22652) ெரயிலானது வரும், 18ந் தேதி முதல் குடியாத்தம் ரெயில் நிலையத்திலும், சேலம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (22154) ெரயில் வரும், 18ந் தேதி முதல் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்திலும் 2 நிமிடம் நின்று செல்லும் என அறிவித்துள்ளது.

    இந்தநிலையில் பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ெரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரெயில் நிலையம் உள்ளது. தற்போது கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்தூர், திருவனந்தபுரம் - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து, ஏராளமானோர் உடுமலை வழியாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு ெரயில்களில் பயணம் செய்கின்றனர். மேலும் இங்கு தொழிற்சாலை, கம்பெனிகளில் பணிபுரியும் வட மாநிலத்தினரும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பாலக்காடு - சென்னை ரயிலை பயன்படுத்துகின்றனர்.

    ஆனால், அந்த ெரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைந்த அளவே உள்ளதால், அதில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறுகின்றனர். இதில் குழந்தைகள், முதியோர் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    இதனால், அவர்கள் ெரயிலில் அமர இடமில்லாமல், நீண்ட தூரம் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டியதுள்ளது. எனவே, சென்னை ெரயிலில், பயணியரின் சிரமத்தை போக்கும் வகையில், கூடுதல் பெட்டிகள் இணைக்க, தெற்கு ெரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

    • பசுமைக்குடிலின் கட்டுமானத்துள் கிளிப்புகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மாற்றவேண்டும்.
    • vல்ல காற்றோட்டம் கிடைக்கும் வகையில் கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும்

    திருப்பூர்:

    தென்மேற்கு பருவமழை மற்றும் பலத்த காற்றில் இருந்து பயிா்களைப் பாதுகாப்பது குறித்து தோட்டக்கலைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் பலத்த காற்றில் இருந்து பயிா்களைக் பாதுகாக்க பசுமைக்குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும். பசுமைக் குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று உள்ளே புகாதவாறு பாதுகாக்கவேண்டும். அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.

    பசுமைக்குடிலின் கட்டுமானத்துள் கிளிப்புகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மாற்றவேண்டும். நிழல்வலைக் குடிலில் கிழிந்து போன நிழல் வலைகளை தைத்து சரி செய்வதுடன், அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை போன்ற பயிா்களில் காய்ந்த மற்றும் பட்டுப் போன கிளைகளை அகற்ற வேண்டும். நல்ல காற்றோட்டம் கிடைக்கும் வகையில் கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும்.

    மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணைக் குவித்துவைக்க வேண்டும். தோட்டதுக்குத் தேவையான வடிகால் வசதி செய்ய வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் தூா்ப்பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்காத வகையில் தாங்கு குச்சிகளைக் கொண்டு கட்டவேண்டும். கனமழை காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வோ் பகுதியை சுற்றிலும் மண்ணைக் கொண்டு அணைக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களுக்குத் தேவையான தொழு உரம் இடுவதுடன், நோய்த் தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். தோட்டக்கலைப் பயிா்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி மற்றும் கொத்தமல்லி போன்ற பயிா்களுக்கு உரிய காலத்தில் பயிா் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீா் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும்.

    நீா்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிா்க்க காற்று வீசும் திசைக்கு எதிா் திசையில் குச்சிகளால் முட்டுக் கொடுத்து புதிதாக நடவு செய்த செடிகள் சாயாத வகையில் பாதுகாக்க வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்தி குடும்ப நலத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    • கருக்கலைப்பு மாத்திரைகள் வினியோகம் செய்யும் மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    திருப்பூர்:

    மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்யும் மருந்துக்கடைகளினால் கர்ப்பிணிகளுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு முறைகள் குறித்து அரசு பயிற்சி அளித்துள்ளது.கருக்கலைப்பு மாத்திரைகள் பாதுகாப்பான முறையில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் சட்டத்துக்கு உட்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

    இந்த சேவைகள் குறித்த தகவல் மற்றும் கல்வி தொடர்பு சாதனங்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்தி குடும்ப நலத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் கவுரி தெரிவித்துள்ளார்.

    மருத்துவரின் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி தெரிவித்துள்ளார்.அரசின் ஆணையை மீறி கருக்கலைப்பு மாத்திரைகள் வினியோகம் செய்யும் மருந்தகங்கள் மற்றும் போலி மருத்துவர்கள் மீது இணை இயக்குனர் தலைமையிலான மருத்துவக்குழு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த குற்றங்களுக்கு தண்டனை, அபராதம் விதித்தல், சிறை தண்டனை மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும். பாதுகாப்பான கருக்கலைப்பு குறித்த அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

    • நுகர்வோர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
    • புகார்களுக்கு துறை சார்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி, இணை ஆணையாளர் லீலாவதி ஆகியோர் மேற்பார்வையின் திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் துறை சார்பாக நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பல்வேறு நுகர்வோர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. சட்ட முறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகள் தொடர்பாக புகார் அளிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நுகர்வோர் கூட்டமைப்பு பொறுப்பாளர்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.

    பல்வேறு அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்களுக்கு துறை சார்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் துறை சார்ந்த தொழிலாளர் ,துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். 

    • 23 ஆயிரத்து 394 பேருக்கு ரூ.82 கோடியே 94 லட்சம் மதிப்பில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்.3-ல் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 5 லட்சத்து 59 ஆயிரத்து 149 குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 23 ஆயிரத்து 394 பேருக்கு ரூ.82 கோடியே 94 லட்சம் மதிப்பில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தாராபுரத்தில் நடந்த முகாமில் 74 பேருக்கும், காங்கயத்தில் நடந்த முகாமில் 149 பேருக்கும் புதிதாக மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டன. திருநங்கைகளுக்கு நடத்தப்பட்ட முகாமில் 60 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது.

    மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை எடுக்காதவர்கள் ரேஷன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல் மற்றும் வருமான சான்று (ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்குள்) ஆகிய ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்.3-ல் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 73730 04271 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • தென்னை சாகுபடியில் வருமானம் ஈட்ட முடியாமல் பொருளாதார ரீதியாக விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
    • விவசாயிகளின் கோரிக்கைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

    உடுமலை:

    நீண்ட நாளைக்கு நிலைத்து நின்று நிரந்தர வருமானத்தை அளிக்கக்கூடிய தென்னை விவசாயம் உடுமலைப் பகுதியில் பிரதான தொழிலாக உள்ளது. ஒரு சில விவசாயிகள் முழுவது மாகவும், பகுதி அளவும் தென்னை மரங்களை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர்.

    இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக தேங்காய்க்கு உரிய விலை கிடை ப்பதில்லை.ஆனால் பராமரிப்பு, இடுபொருட்கள்,தேங்காய் போடுதல், உரித்தல் ,உடைத்தல், சுமத்தல் என பல்வேறு பணிகளுக்கு கூலியும் உயர்ந்து உள்ளது. இதனால் தென்னை சாகுபடியில் வருமானம் ஈட்ட முடியாமல் பொருளாதார ரீதியாக விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    மேலும் தேங்காய்க்கு உரிய விலை வழங்கக்கோரி நீண்ட நாட்களாக கோரிக்கையும் விடுத்து வருகின்றனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

    இந்த சூழலில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தென்னை விவசாயிகளை காப்பாற்ற கோரி தேங்காய் உடைக்கும் போராட்டம் உடுமலையில் நடைபெற்றது.உடுமலை பொள்ளாச்சி நெடுஞ்சாலை யில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருண்பிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார். மாநிலத் தலைவர் சண்முகம் சிறப்புரை ஆற்றினார்.

    அதைத்தொடர்ந்து உரித்த தேங்காயை கிலோ ரூ.50 க்கு நேரடியாக கொள்முதல் செய்யுமாறும், கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 140 க்கு விலை நிர்ணயம் செய்திட வேண்டும், கொப்பரைக்கு ஊக்கத்தொகை வழங்கி ஆண்டு முழுவதும் கொப்ப ரையை கொள்முதல் செய்ய வேண்டும், ஏக்கருக்கு ஆண்டுக்கு 290 கிலோ கொள்முதல் செய்வதை 900 கிலோ அளவிற்கு உயர்த்த வேண்டும், ரேஷன் கடைகள் மூலமாக தேங்காய் எண்ணெய் வழங்கிட நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    பாமாயில் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும், தென்னை மரங்களை நோய் தாக்குதில் இருந்து காப்பாற்ற மானிய விலையில் மருந்துகள், நுண்ணூட்ட சத்துக்கள் வழங்க வேண்டும், சென்னையில் உள்ள தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை திருமூர்த்தி மலையில் உள்ள தென்னை ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிலையத்திற்கு மாற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  

    • மண்டல கல்வி வாரிய அதிகாரி செண்பராஜன் கலந்துகொண்டு நல வாரியங்களின் பலன்கள் பற்றி எடுத்துக்கூறினார்.
    • பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் சர் பிட்டி தியாகராயர் தொழிற்சங்கம் மற்றும் மத்திய அரசு தொழிலாளர் கல்வி வாரிய மண்டல அலுவலகம், கோவை மண்டலம் சார்பில் நலவாரியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மண்டல கல்வி வாரிய அதிகாரி செண்பராஜன் கலந்துகொண்டு நல வாரியங்களை பற்றியும், அதனுடைய பலன்கள் பற்றியும் எடுத்துக்கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சர் பிட்டி தியாகராயர் தொழிற்சங்க செயலாளர் கே.ஜி நடராஜ் செய்திருந்தார். இதில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஷோகேஸ்சில் வைத்திருந்த தங்க வளையல்களை நகைக்கடைக்காரர் காண்பித்துள்ளார்.
    • தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் தங்க நகைக்கடை உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி சிலை அருகே தயா என்பவர் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் 3 பெண்கள் நகைக்கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் டாலர் வாங்குவதாக கூறி கடையில் இருந்த நகைகளை நோட்டமிட்டுள்ளனர். அப்போது எங்களுக்கு டாலர் பிடிக்கவில்லை, வளையல் காட்டுங்கள் என நகைக்கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளனர்.

    அதற்கு நகைக்கடை உரிமையாளர் 12 கிராம் எடையுள்ள 2 தங்க வளையல்களை காண்பித்துள்ளார். அப்போது 3 பெண்களில் ஒருவர் தங்க வளையல்களை கையில் அணிந்து கொண்டார். 2 பெண்கள் வேறு டிசைனில் வளையல் காட்டுமாறு கடை ஊழியரிடம் கேட்டுள்ளனர்.

    அதற்காக ஷோகேஸ்சில் வைத்திருந்த தங்க வளையல்களை நகைக்கடைக்காரர் காண்பித்துள்ளார். அதே நேரத்தில் தங்க வளையல் அணிந்திருந்த ஒரு பெண் கடையை விட்டு நைசாக புறப்பட்டு சென்றார். அதன்பிறகு மற்ற 2 பெண்களும் தங்களுக்கு மாடல் எதுவும் பிடிக்கவில்லை என சொல்லிவிட்டு கடையிலிருந்து நைசாக சென்று விட்டனர்.

    3 பெண்களும் சென்றவுடன் கடை உரிமையாளர் காண்பித்த தங்க வளையல்களை ஷோகேஸ்சில் அடுக்கி வைத்த போது 12 கிராம் எடை கொண்ட 2 தங்க வளையல்களை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது 3 பேரும் நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி தங்க வளையல்களை திருடி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து திருடி சென்ற 3 பெண்களை தேடிச் சென்றார். ஆனால் அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தனது கடையில் தங்க வளையல்கள் திருடு போன சிசிடிவி காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு நகைக்கடைக்காரர்கள் உஷாராக இருங்கள், எங்களது நகைக்கடையில் 3 பெண்கள் தங்க வளையல்களை திருடி சென்றுள்ளனர் என பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது தாராபுரம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் தங்க நகைக்கடை உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர். தாராபுரத்தில் பட்டப்பகலில் 3 பெண்கள் தங்க வளையல்களை திருடி சென்ற சம்பவம் தாராபுரம் நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சர்வீஸ் செய்து வைத்திருந்த 14 ஆயிரம் மதிப்புள்ள 5 செல்போன் மற்றும் பணம் ரூ .5 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.
    • கைது செய்தவரிடமிருந்து 7 செல்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவினாசி:

    அவினாசியை அடுத்துள்ள தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 26). இவர் தெக்கலூர் அவினாசி மெயின் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியுற்றார்.

    கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் சர்வீஸ் செய்து வைத்திருந்த 14 ஆயிரம் மதிப்புள்ள 5 செல்போன் மற்றும் பணம் ரூ .5 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த அவினாசி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அமல் ஆரோக்கியதாஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீசார் பாரூக், அஜித்குமார் ஆகியோர் அவினாசி பகுதியில் தீவிர விசாரனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சி.சி.டி.வி.கேமரா பதிவை பார்த்தபோது செல்போன் கடையில் திருடியவரது அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து அவினாசி அருகே நத்தக்காட்டு பிரிவில் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஜெய கோவிந்தராஜ் (20) என்பதும் செல்போன் கடையில் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 செல்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஏ. ஐ. டி. யு. சி., சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
    • சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம், அவினாசி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை அவினாசி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வழங்கி அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் தனலட்சுமி மற்றும் அவினாசி பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோரிடம் ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    அதேபோல் அவினாசி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடமும் அவினாசி சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஏ. ஐ. டி. யு. சி., சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    மேற்கண்ட நிகழ்ச்சியில் ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் கலந்துகொண்டனர்.மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி நிர்வாகத்தினர், சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையினரிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    • வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பணப்பை தவறி கீழே விழுந்து விட்டது.
    • பிரியாவின் நேர்மையை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் பாராட்டினர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள இலவந்தி வடுகபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 56). இவர் பல்லடம் அஞ்சல் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்த நிலையில், சேமிப்பு பணம் ரூ. 1லட்சத்து10 ஆயிரம் பணத்தை, ஒரு மஞ்சள் பையில் வைத்துக் கொண்டு, அவருடைய மோட்டார் சைக்கிளில் முன்புறம் மாட்டிக் கொண்டு பல்லடம் கடைவீதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பணப்பை தவறி கீழே விழுந்து விட்டது. இதனை அவர் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சின்னிய கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரியா(27) என்பவர் அந்த வழியே சென்ற போது அவர் அந்த பையை எடுத்துப்பார்த்தார். அதில் கட்டுக்கட்டாக பணம், மற்றும் ஏடிஎம் கார்டு, உள்ளிட்டவை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார், அந்தப் பெண்ணிடம் இருந்து பையை வாங்கி அதில் உள்ள அடையாள அட்டையை பார்த்தபோது அது தபால் நிலைய தற்காலிக ஊழியர் குணசேகரனுடையது என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். கடைவீதியில் பணத்தை தேடி சுற்றிக் கொண்டிருந்த அவர் உடனடியாக அங்கு வந்தார்.அவரிடம் விசாரணை செய்த போலீசார், அவர் கூறிய அடையாளங்கள் மூலம் அந்தப் பணம் அவருடையது தான் என்பதை உறுதி செய்து கொண்டு பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர்.

    கண்களில் நீர் மல்க அந்த பணத்தை போலீசாரிடமிருந்து பெற்றுக்கொண்ட குணசேகரன், பணத்தை கண்டெடுத்த அந்த பெண்ணுக்கு கை கூப்பி மீண்டும், மீண்டும் நன்றி சொன்னார். ஏழ்மை நிலையில் இருந்த போதும், கண்டெடுத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பிரியாவின் நேர்மையை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் பாராட்டினர். இந்த நெகிழ்ச்சி ஊட்டும் சம்பவத்தால் பல்லடம் கடைவீதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உரிமை உள்ளது.
    • அரசு விழாக்களில் ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் கலந்து கொள்வதில் தவறில்லை என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல்.குமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குள் அரசு நிகழ்ச்சிகளை திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பது விதிமுறைகளை மீறிய செயலாகும் என்றார்.

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தமிழ்நாடு சட்டமன்ற சட்ட உரிமை குழு உறுப்பினராக உள்ளார். அவருக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உரிமை உள்ளது. இதற்கிடையே, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ஊராட்சி பொது நிதி மற்றும் தமிழ்நாடு அரசு நிதி ஆகியவற்றின் மூலம் நடைபெறும் மக்கள் நல திட்ட பணிகளுக்கு, எங்களது விருப்பத்தின் பேரில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு திருப்பூர் தெற்கு தொகுதியிலேயே ஏராளமான பணிகள் இருந்தும், எங்களது வேண்டுகோளுக்கிணங்கவே பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் நடைபெறும் விழாக்களுக்கு வருகிறார்.

    இதில் எந்தவிதிமீறலும் இல்லை. ஏற்கனவே அரசு விழாக்களில் ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் கலந்து கொள்வதில் தவறில்லை என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பேட்டியின் போது பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், பொங்கலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×