search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி அருகே செல்போன்-பணம் திருடிய வாலிபர் கைது
    X

    கைது செய்யப்பட்ட ஜெய கோவிந்தராஜ்.

    அவினாசி அருகே செல்போன்-பணம் திருடிய வாலிபர் கைது

    • சர்வீஸ் செய்து வைத்திருந்த 14 ஆயிரம் மதிப்புள்ள 5 செல்போன் மற்றும் பணம் ரூ .5 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.
    • கைது செய்தவரிடமிருந்து 7 செல்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவினாசி:

    அவினாசியை அடுத்துள்ள தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 26). இவர் தெக்கலூர் அவினாசி மெயின் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியுற்றார்.

    கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் சர்வீஸ் செய்து வைத்திருந்த 14 ஆயிரம் மதிப்புள்ள 5 செல்போன் மற்றும் பணம் ரூ .5 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த அவினாசி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அமல் ஆரோக்கியதாஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீசார் பாரூக், அஜித்குமார் ஆகியோர் அவினாசி பகுதியில் தீவிர விசாரனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சி.சி.டி.வி.கேமரா பதிவை பார்த்தபோது செல்போன் கடையில் திருடியவரது அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து அவினாசி அருகே நத்தக்காட்டு பிரிவில் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஜெய கோவிந்தராஜ் (20) என்பதும் செல்போன் கடையில் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 செல்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×