என் மலர்
திருப்பூர்
- உயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங்கை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை யு.ஜி.சி., ஒவ்வொரு ஆண்டும் எடுத்து வருகிறது
- ராக்கிங் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாராபுரம்:
உயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங்கை முற்றிலும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை யு.ஜி.சி., ஒவ்வொரு ஆண்டும் எடுத்து வருகிறது. அவ்வகையில், நடப்பாண்டும் கல்லூரிகளில் ராக்கிங் இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு ராக்கிங் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்டு 12-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை ஒரு வாரம் ராக்கிங் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த 4 நாட்களும், ராக்கிங் எதிர்ப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகள், கட்டுரை எழுதுதல், விளம்பர பலகை உருவாக்குதல், லோகோ (இலச்சினை) வடிவமைத்தல் போன்ற போட்டிகளை நடத்தி, அதில் மாணவர்கள், கல்லூரி ஊழியர்களை பங்கேற்க செய்ய வேண்டும்.
போதிய வசதியிருப்பின் கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்தலாம். குறும்படம், ஆவணப்படங்களை திரையிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை, பல்கலை கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.
- பனியன் தொழில், விசைத்தறி, நூற்பாலை தொழில்களும் அதிகம் இருக்கிறது.
- ஏற்கனவே இயங்கும் 7 துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளன.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் விவசாயமும், தொழில்வளமும், வேலை வாய்ப்பும் மிகுந்த மாவட்டமாக இருக்கிறது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக பனியன் தொழில், விசைத்தறி, நூற்பாலை தொழில்களும் அதிகம் இருக்கிறது.தொழில் வளர்ச்சி காரணமாக திருப்பூர் மாவட்டத்துக்கான மின்தேவையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அவ்வகையில் இம்மாவட்டத்தில் மட்டும் 13 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்து ஆயத்தப் பணியும் துவங்கியுள்ளது.
அதன்படி காங்கயம் பெரியார் நகரில் ரூ. 1.62 கோடி மதிப்பில், பல்லடம் நாரணாபுரத்தில் 2.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு துணை மின்நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.பல்லடம் - முத்தணம்பாளையம் கிராமம், அமராவதிபாளையம், உகாயனூர் கிராமத்தில் துணை மின்நிலையங்கள் அமைய தலா 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு காளிபாளையம் கிராமம் தாண்டாக்கவுண்டன்பாளையம், நெருப்பெரிச்சல், காவிலிபாளையம், பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட, அணைப்பாளையம், திருப்பூர் வடக்கு தொகுதி, கூலிபாளையத்திலும் துணை மின்நிலையம் அமைய உள்ளது.காங்கயம் மடவிளாகம், கத்தாங்கன்னி, கம்பளியாம்பட்டி பகுதிகளில் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பல்லடம் - காங்கயம் ரோடு துணை மின்நிலையம், விஜயாபுரம் துணை மின்நிலையம், தாராபுரம் - சங்கராண்டாம்பாளையம், சக்திபாளையம் துணை மின்நிலையம் அமைக்க இடம் தேடும் பணி நடந்து வருகிறது.
காங்கயம் தொகுதி - குறுக்கத்தி, ராசாத்தாவலசு, காடையூர், பல்லடம் - பொங்கலூர், தாராபுரம் தொகுதி- செலாம்பாளையம் துணை மின்நிலையம் அமைக்க அனுமதி பெறப்பட்டு ஆயத்த பணி துவங்கியுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், திருப்பூர், பல்லடம், உடுமலை மின்பகிர்மான வட்டங்களில் 13 இடங்களில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். ஏற்கனவே இயங்கும் 7 துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளன. மொத்தம், 144 கோடி ரூபாய் மதிப்பில் இப்பணிகள் நிறைவு பெற்றதும் விவசாயம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்வினியோகம் மேம்படுத்தப்படும் என்றனர்.ன
- மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் ஆகியவை குறித்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
- அலுவலக நேரத்தில் காலையில் 9 மணி முதல் 5 மணி வரை அலுவலக நேரங்களில் நடைபெற உள்ளது.
தாராபுரம்:
தாராபுரம் பகுதியில் புதிய மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் கடந்த 24-ந்தேதி முதல் வருகிற ஆகஸ்டு 24-ந்தேதி வரை அந்தந்த மின்சார வாரிய அலுவலகங்களில் நடைபெற உள்ளது.இது குறித்து தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற் பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தாராபுரம் பகுதியில் மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் ஆகியவை குறித்து மின் நுகர்வோருக்கான சிறப்பு முகாம் கடந்த 24-ந்தேதி முதல் வருகிற ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி வரை ஒரு மாத காலத்திற்கு அலுவலக நேரத்தில் காலையில் 9 மணி முதல் 5 மணி வரை அலுவலக நேரங்களில் நடைபெற உள்ளது.
மின் நுகர்வோர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி புதிய மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் செய்யலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உரிய கீழ்கண்ட ஆவணங்களை அந்தந்த மின்சார வாரிய அலுவலகத்தில் கொடுத்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மின் நுகர்வோர் பெயர் மாற்றம் செய்ய ஆதார் அட்டை நகல், நகராட்சி மற்றும் மாநகராட்சியில் சமீபத்தில் செலுத்திய சொத்துவரி ரசீது நகல், விற்பனை பத்திரத்தின் நகல் அல்லது நீதிமன்ற ஆணை, மின் உரிமையாளர் இறந்திருப்பின் அவற்றின் பெயர் மாற்றம் செய்ய கொடுக்க வேண்டிய ஆவணங்கள், ஆதார் அட்டை, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றின் புதிதாக சொத்து வரி செலுத்திய ரசீது நகல், நகராட்சி அல்லது மாநகராட்சி பகுதிகளுக்கு ஏதேனும் ஒரு நகலை சமர்ப்பிக்கலாம்.
குழு இணைப்புகளில் பொது சேவைக்கான மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் இணைக்க வேண்டிய ஆவணங்கள், பில்டர்கள், டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள், குடியிருப்பு வளாகங்கள், குரூப் ஹவுசிங்கில் உள்ள பொது சேவைக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய நலவாழ்வு சங்கத்தின் பதிவு சான்று, அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற விண்ணப்பத்தில் கையொப்பமிட்ட குடியிருப்போரிடம் அனுமதி கடிதம் இவற்றுடன் ரூ.726-ஐ செலுத்தி பெயர் மாற்றம் செய்து பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எம்ஆர்பி., ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும்.
- தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு புதிய நிரந்தர செவிலியர் பணியிடங்களை தோற்றுவித்து அதில் பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கும் எம்ஆர்பி., ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி,மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் சுகாதார மாவட்டத்திற்கு தேவையான மெண்டர் செவிலியர் பணியிடங்களை புதிதாக தோற்றுவித்து அதில் எம்ஆர்பி., ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஓபன் எண்டு ஸ்பிண்ணிங் மில் தொழில் மிகவும் பாதிப்படைந்து வருவதாக கூறியுள்ளனர்.
- ஓ.இ.மில்களில் கலா் நூல்கள் உற்பத்தி செய்யப்படுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், ஜவுளி பொருட்களையும் பாா்வையிட்டனா்.
திருப்பூர்:
மின் கட்டண உயா்வை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, காந்தி, சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோரை சென்னையில் ஜவுளி உற்பத்தி துறையினா் அண்மையில் சந்தித்து பேசினா்.
அப்போது, ஓபன் எண்டு ஸ்பிண்ணிங் மில் தொழில் மிகவும் பாதிப்படைந்து வருவதாகவும், தொழிலைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓபன் எண்டு ஸ்பிண்ணிங் மில் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அருள்மொழி கோரிக்கை விடுத்தாா்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா்கள் உறுதியளித்த நிலையில், திருப்பூா், கோவை மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ஓ.இ. மில்களில் ஜவுளி துறை முதன்மைச் செயலாளா் டி.பி. யாதவ், ஜவுளி துறை கமிஷனா் வள்ளலாா், கூடுதல் இயக்குநா் கா்ணன் ஆகியோா் கொண்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஓ.இ.மில்களில் கலா் நூல்கள் உற்பத்தி செய்யப்படுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், ஜவுளி பொருட்களையும் பாா்வையிட்டனா்.
மேலும், தொழில் நிலவரம் குறித்து கேட்டறிந்ததுடன், தொழில் மேம்பாடு அடைய முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.ஓபன் எண்டு ஸ்பின்னிங் மில்கள் சங்கத் தலைவா் அருள்மொழி, செயலாளா் சந்திரசேகரன், துணைத் தலைவா் ராயல் செந்தில்குமாா், பொருளாளா் பிரான்சிஸ், இணைச் செயலாளா் சுரேஷ்குமாா், செயற்குழு உறுப்பினா்கள் யுவராஜ், ஜெயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
- 28-ந்தேதி( வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இ ருக்காது.
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாளை 28-ந்தேதி( வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பொங்கலூா், காட்டூா், தொட்டம்பட்டி, மாதப்பூா், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், கண்டியன் கோயில், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூா், என்.என்.புதூா், வடக்கு அவிநாசிபாளையம், எல்லப்பாளையம் புதூா், காங்கேயம்பாளையம், ஒலப்பாளையம்.
- பெரிய வாளவாடி பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
- கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்வதற்கு அனுமதிக்க கூடாது.
உடுமலை:
கைத்தறி நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி உடுமலை அருகே உள்ள பெரிய வாளவாடி பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த அடையாள உண்ணாவிர போராட்டத்தில் சங்கத்தின் தலைவர் ஜோதி ,செயலாளர் லட்சுமணன், பொருளாளர் ஜெயராமன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்வதற்கு அனுமதிக்க கூடாது. கைத்தறி நெசவாளர் காப்பீட்டு திட்ட அட்டையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பெண்கள் கைத்தறி ராட்டையில் துணி நெசவு செய்தனர்.
- கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) நிறுவனத்தின் திருப்பூர்மண்டலம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருப்பூர்:
திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்ததாவது,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) நிறுவனத்தின் திருப்பூர்மண்டலம் சார்பில் திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் திருப்பூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி மற்றும் சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அடிபட்டவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- அந்த சம்பவம் தற்கொலையா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.
திருப்பூர்:
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே ஆண் ஒருவர் ெரயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ெரயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லோகநாதனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ெரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்தாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயற்சித்த போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா என சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.
- அவினாசி புதிய பஸ் நிலையம் அருகே கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்திற்கு பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஏ.எம். மாணிக்கம் முன்னிலை வகித்தார்.
அவினாசி:
மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அவினாசி புதிய பஸ் நிலையம் அருகே கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் வக்கீல் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஏ.எம். மாணிக்கம் முன்னிலை வகித்தார்.
இதில் வட்டாரத் தலைவர் சாமிநாதன், சின்னேரிபாளையம் ஊராட்சி தலைவர் த.சரவணன், முறியாண்டம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ரங்கசாமி., காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவு மாநில பொதுசெயலாளர் சாய்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஆர்சிஎச்., ரக பருத்தி குவிண்டால் ரூ.6000 முதல் ரூ. 7206 வரையிலும் ஏலம் போனது.
- மட்டரகப் பருத்தி குவிண்டால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
அவினாசி:
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரத்தில் புதன்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 747 மூட்டை பருத்தி வந்திருந்தது.
இதில் ஆர்சிஎச்., ரக பருத்தி குவிண்டால் ரூ.6000 முதல் ரூ. 7206 வரையிலும் ஏலம் போனது. மட்டரகப் பருத்தி குவிண்டால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.16லட்சம் ஆகும். இந்த தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- வீட்டின் வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று குடும்பத்தினருடன் தூங்கிவிட்டார்.
- பிரகாஷ் அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவினாசி:
அவினாசியை அருகேயுள்ள சின்ன கருணைபாளையத்தைச் சேர்ந்த கணேஷ் மகன் பிரகாஷ் (வயது 34). இவர் அனைப்புதூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்தார்.
பின்னர் வீட்டின் வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று குடும்பத்தினருடன் தூங்கிவிட்டார். மறுநாள் காலையில் வெளியே வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது. இது குறித்து அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






