என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
    X

    கோப்புபடம்

    அவினாசியில் மோட்டார் சைக்கிள் திருட்டு

    • வீட்டின் வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று குடும்பத்தினருடன் தூங்கிவிட்டார்.
    • பிரகாஷ் அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அவினாசி:

    அவினாசியை அருகேயுள்ள சின்ன கருணைபாளையத்தைச் சேர்ந்த கணேஷ் மகன் பிரகாஷ் (வயது 34). இவர் அனைப்புதூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் வீட்டின் வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று குடும்பத்தினருடன் தூங்கிவிட்டார். மறுநாள் காலையில் வெளியே வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது. இது குறித்து அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×