என் மலர்
திருப்பூர்
- நகராட்சியில் வரிவிதிப்பு செய்யுமாறு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இதற்காக குழுக்கள் அமைத்தும் சொத்து வரி விதிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அல்லது கூடுதலாக கட்டப்பட்ட, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு உடனடியாக தாங்களாகவே முன்வந்து நகராட்சியில் வரிவிதிப்பு செய்யுமாறு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.நகராட்சியில் வரிவிதிப்பு செய்யுமாறு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.நகராட்சியில் வரிவிதிப்பு செய்யுமாறு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக குழுக்கள் அமைத்தும் சொத்து வரி விதிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பு கிடைத்த 3 நாட்களுக்குள் வரிவிதிப்பு செய்ய தவறும் பட்சத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 97-ன் படி 6½ ஆண்டுகளுக்கு குறையாமல் வரிவிதிப்பு செய்யப்படும். இந்த தகவலை வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.
- கொப்பரை தேங்காய் ஏலம், வியாழக்கிழமை தோறும் பாக்கு மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
- வியாபாரிகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் விற்பனை செய்கின்றனர்.
உடுமலை :
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் சந்தை இ-நாம் மூலம் செவ்வாய்க்கிழமை தோறும் கொப்பரை தேங்காய் ஏலம், வியாழக்கிழமை தோறும் பாக்கு மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஆயிரத்து 600 ஏக்கரில் நெல், 23 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை, 2 ஆயிரம் ஏக்கரில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் விளையும் வாழைத்தார்களை வியாபாரிகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் விற்பனை செய்கின்றனர்.
எனவே ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைதார் ஏலம் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் வாழை விவசாயிகள் பயன் பெறும் வகையில் வியாழக்கிழமை தோறும் வாழைத்தார் ஏலம் நடைபெற உள்ளது.
இந்த ஏலம், தேசிய வேளாண் சந்தை இ- நாம் மூலம் நடைபெறும். இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இதனால் விவசாயிகள் கொண்டு வரும் வாழைத்தார்களுக்கு சரியான விலை, சரியான எடை, நேரடி வங்கி பணம் பரிமாற்றம் உடனடியாக கிடைக்கும். எனவே இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி பயன் பெறலாம்.இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்தார்.
- சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், திறந்தவெளியில் பிளாஸ்டிக் கழிவு வீசப்படுகிறது
- வனவிலங்குகள், பாலித்தீன் கவருடன் உட்கொள்ளும் போது, உயிரிழப்பு நேரிடுகிறது.
உடுமலை :
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில், உள்ள வனச்சரகங்களில் வனவிலங்குகளும், பசுமை மாறாக்காடுகளும், நீர்நிலைகளும் நிறைந்துள்ளன.
அங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், திறந்தவெளியில் பிளாஸ்டிக் கழிவு வீசப்படுகிறது. குறிப்பாக, திறந்தவெளி குப்பை கிடங்கில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால், வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பாலித்தீன் கவரில் இருக்கும் உணவு பொருட்களால் கவரப்படும் வனவிலங்குகள், பாலித்தீன் கவருடன் உட்கொள்ளும் போது, உயிரிழப்பு நேரிடுகிறது.
இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:-
இயற்கையை பாதுகாக்கும் வகையில், பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். நுழைவு சீட்டு வழங்கும் போது வாகனங்களை சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும்.தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர் பயன்படுத்துபவர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும். நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இயற்கை வளத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க முடியும் என்றனர்.
- உடல் ஆரோக்கியத்துக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வேண்டிய அவசியம்
- 7 நாட்களாக பள்ளி, கல்லூரிகளில் சிறு தானியங்களின் விழிப்புணர்வு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
திருப்பூர் :
உடல் ஆரோக்கியத்துக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வேண்டிய அவசியம், தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக தான் இந்தாண்டை சிறுதானிய ஆண்டாக ஐ.நா.,சபை அறிவித்துள்ளது. கடந்த 7 நாட்களாக பள்ளி, கல்லூரிகளில் சிறு தானியங்களின் விழிப்புணர்வு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு மட்டும், பலன் தருமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பள்ளி மாணவ, மாணவிகள் அளவில் சிறு தானியங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டியது அவசியம் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர் மத்தியில், சிறுதானியங்கள் பயன்பாடு அதிகப்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மை குழுவினர் மாணவர்களுக்கு சிறு தானிய உணவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
- வாய்மொழியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர் கல்லூரியில் இருந்து, வெளியேற்றப்படுவர்
- தொடர்ந்து எந்த கல்லூரியிலும் கல்வி பயில முடியாது.
திருப்பூர் :
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ராக்கிங் நடவடிக்கையில் ஈடுபட்டால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, மருத்துவ கல்வி இயக்கம் மூலம் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவகல்லூரி கடந்த 2021 முதல் செயல்படுகிறது. 200 மாணவர்கள் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் தவறான, அநாகரீகமான நடத்தை, மிரட்டல், தவறான கட்டுப்பாடுகளை விதித்தல், ஒருவரை மன, உடல் ரீதியாக, வாய்மொழியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர் கல்லூரியில் இருந்து, வெளியேற்றப்படுவர்,விடுதியில் தங்க முடியாது. கல்வி உதவித்தொகை நிறுத்தப்படலாம், தேர்வுகளை எதிர்கொள்ள முடியாது.
தொடர்ந்து எந்த கல்லூரியிலும் கல்வி பயில முடியாது. போலீசார் மூலம், கிரிமினல் நடவடிக்கை மற்றும் வழக்கு பதியப்படும். கல்லூரியில் ராக்கிங் வேண்டாம் என்று சொல்லுங்கள், ராக்கிங் தண்டனைக்குரிய குற்றம். ராக்கிங்கில் ஈடுபடாதீர்கள். மேலும் விதிமுறைகளுக்கு www.ugu.ac.in என்ற இணையதளத்தை பாருங்கள். ராக்கிங் நடந்தால் புகார் தெரிவியுங்கள். போலீசாரின் உதவியை நாடுங்கள், என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
- வாட்டர் கிரெடிட் கருத்துருவை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.
- நாடு முழுக்க, பூஜ்ய நிலை சுத்திகரிப்பு முறையை அமல்படுத்த வேண்டும்
திருப்பூர் :
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க 32வது பொதுக்குழு கூட்டம் திருப்பூர் தெற்கு ரோட்டரி ஹாலில் நடந்தது.கூட்டத்தில் சாயநீரை சுத்திகரித்து மறு சுழற்சி வாயிலாக பயன்படுத்துபவர்களுக்கு கார்பன் கிரெடிட் வழங்குவது போல வாட்டர் கிரெடிட் கருத்துருவை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.
வெளி மாவட்டங்களில் அனுமதியின்றி இயங்கும் சாய ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூரை போல் நாடு முழுக்க, பூஜ்ய நிலை சுத்திகரிப்பு முறையை அமல்படுத்த வேண்டும். இம்முறையை முழுமையாக அமல்படுத்திய திருப்பூர் சாய கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கிய வட்டியில்லா கடனை மானியமாக மாற்றித்தர வேண்டும்.
வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்கவும், தற்போதுள்ள வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடர்கலவை உப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மின் கட்டணம் மற்றும் மின்சார நிலைக்கட்டண உயர்வை, மாநில அரசு, மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசு வழங்கிய டப் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் மரக்கன்று நடவு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- வனத்துறை நர்சரியில் உற்பத்தி செய்யப்பட்டு, இலவசமாக நடவு செய்து தரப்படுகிறது.
தாராபுரம் :
தமிழ்நாடு உயிர் பன்முகத்தன்மை மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் மரக்கன்று நடவு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென அந்தந்த பகுதிகளின் மண் வளம், நில அமைப்புக்கேற்ற மரக்கன்றுகள், அந்தந்த பகுதியில் உள்ள வனத்துறை நர்சரியில் உற்பத்தி செய்யப்பட்டு, இலவசமாக நடவு செய்து தரப்படுகிறது.
கடந்த ஜூலையிலேயே இத்திட்டம் நடைமுறைக்கு வரவேண்டிய நிலையில் எதிர்பார்த்த பருவமழை இல்லாததால் தற்போது மரக்கன்றுகளை நடவு செய்ய வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பக கட்டுப்பாட்டில் உள்ள தாராபுரம் நர்சரியில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வனத்துறையினர் கூறுகையில், நன்கு வளர்ந்த நிலையில் சந்தனம், தேக்கு, மகாகனி, சவுக்கு மற்றும் மலை வேம்பு மரக்கன்றுகள் உள்ளன. அவை இலவசமாகவே நடவு செய்து தரப்படும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், அரசு நிலங்களில் மரம் வளர்க்க விரும்புவோர், திருப்பூர் வனச்சரக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.விருப்பம் தெரிவிப்போரின் இடத்திற்கு நேரில் வந்து, அங்கு மரம் வளர்ப்பதற்கான சூழல் உள்ளதா என, கள ஆய்வு செய்த பின் மரக்கன்றுகள் நடவு செய்து கொடுக்கப்படும். 40 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன என்றனர்.
- ஐ.எம்.ஏ., ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் ஏ.வி.பி., பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- மாவட்ட திட்டத்தலைவர் அனந்தராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
திருப்பூர் :
திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளி இன்டரேக்ட் கிளப், ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன் மற்றும் ஐ.எம்.ஏ., ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் ஏ.வி.பி., பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமில் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன் தலைவர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். ஏ.வி.பி. பள்ளி தாளாளர் கார்த்திகேயன் முகாமிற்கு தலைமை தாங்கியதோடு ரத்ததானத்தின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட திட்டத்தலைவர் அனந்தராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கவுரவ விருந்தினர்களாக மாவட்ட ரத்த தான முகாம் தலைவர் கமலா பாஸ்கர் மற்றும் ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி கலந்து கொண்டனர்.
ஏ.வி.பி., பூண்டி பள்ளி முதல்வர் பிரியா ராஜா, ரோட்டரி வி.என். முத்துராமலிங்கம், பிரேம் ஆனந்த், பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன் செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் சுகுமார் கலந்து கொண்டனர். பெற்றோர் மற்றும் தன்னார்வலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். பள்ளி ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு,மேலாளர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாணவி அமிர்தவல்லி நன்றி கூறினார்.
- முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து, தமிழகம் முழுவதும் பெண்கள் பயனடைய உள்ளனர்
- திருப்பூர் மாநகராட்சியில் விரைவில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும்
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு வட்டத்திற்குட்பட்ட நெருப்பெரிச்சல் கிராமம் கொங்கு கலையரங்கத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமை தாங்கினார். வடக்கு தாசில்தார் மகேஸ்வரன் வரவேற்றார். இதில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வாழ்த்தி பேசுகையில் "தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 85 சதவீதத்தை திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றி உள்ளது. வரும் 15-ந்தேதி மகளிர் உரிமை திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து, தமிழகம் முழுவதும் பெண்கள் பயனடைய உள்ளனர். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சியில் 120 பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பசியாறி வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சியில் விரைவில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும்" என்றார்.
முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 68 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சத்து 58 ஆயிரத்து 049 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதை சப்-கலெக்டர், மேயர் ஆகியோர் வழங்கினார்கள். பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 84 மனுக்கள் வழங்கப்பட்டது. முன்னதாக பல்வேறு துறை, மகளிர் சுயஉதவி குழுக்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஸ்டால்களை மேயர், சப்-கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் பயிற்சி கலெக்டர் கிருத்திகா, நெருப்பெரிச்சல் கிராம நிர்வாக அதிகாரி கோவிந்தராஜ், தி.மு.க. பகுதி செயலாளர் ஜோதி, சமூக ஆர்வலர் ஈ.பி. சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சாய்குமார் ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்ததால் சோகமாக இருந்துள்ளார்.
- தற்கொலை குறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கேட்டு தோட்டம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில் இறந்தவர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சாய்குமார் (வயது 32) என்பதும், இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
அவர் ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்ததால் சோகமாக இருந்துள்ளார். மேலும் சொந்த ஊரில் உள்ள தனது குடும்பத்தினரிடம் தனக்கு பண தேவை உள்ளது. அனுப்பி வைக்குமாறும் இல்லையென்றால் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்வதாக செல்போனில் பேசி உள்ளார்.
இந்தநிலையில் அவர் திருப்பூர் வந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஜி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது.
- தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் விஜி (வயது 20). இவர் தனது தாய் மற்றும் தங்கை ஆகியோருடன் திருப்பூர்-மங்கலம் சாலை பாரப்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். மேலும் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்துள்ளார்.
இவர் கடந்த ஒரு ஆண்டாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய காதல் விவகாரம் விஜியின் தாயாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த விஜி கடந்த 7-ந்தேதி பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது தாயார் திருப்பூர் மத்திய போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜியை தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் பாராபாளையம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் விஜி பிணமாக கிடந்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் திருப்பூர் தெற்கு தீயணைப்புத்துறையினர் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஜி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க. இந்து மதத்துக்கு எதிரானது அல்ல.
- ராகுல்காந்தியை பார்த்துவிட்டு, பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்கிறார்.
திருப்பூர்:
திருப்பூரில் தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசியதாவது:-
சனாதன தர்மம் என்பது காலங்காலமாக மாறாமல் இருப்பதை அப்படியே பின்பற்றுவதாகும். தற்போதைய காலகட்டத்தில் அனைத்திலும் மாற்றங்கள் வந்துவிட்டது. மாறாமல் இருக்க முடியாது. ஏற்றதாழ்வுகளை முன்னிறுத்திய கோட்பாடுகளை கொண்டதே சனாதன தர்மம். பிறப்பில் ஏற்றதாழ்வுகளை பின்பற்ற சொல்கிறது.
மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை அழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை, இந்து மதத்துக்கு எதிர்ப்பாளர் போல் திரித்து பரப்பிவிட்டனர். தி.மு.க. இந்து மதத்துக்கு எதிரானது அல்ல. தி.மு.க.வினரை இந்து விரோதிகள் போல் சித்தரிக்கிறார்கள்.
மதசார்பற்ற இந்தியா கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். இந்தியா என்ற சொல்லையே மாற்ற விரும்புகிறார். ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி முன்பு பாரத் என்ற பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயரை மாற்றிவிட்டனர். 2024-ம் ஆண்டு இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். அந்த கூட்டணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடிவமைக்கிறார். ராகுல்காந்தியை பார்த்துவிட்டு, பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். அதனால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.






