என் மலர்
நீங்கள் தேடியது "வனவிலங்குகளுக்கு அபாயம்"
- சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், திறந்தவெளியில் பிளாஸ்டிக் கழிவு வீசப்படுகிறது
- வனவிலங்குகள், பாலித்தீன் கவருடன் உட்கொள்ளும் போது, உயிரிழப்பு நேரிடுகிறது.
உடுமலை :
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில், உள்ள வனச்சரகங்களில் வனவிலங்குகளும், பசுமை மாறாக்காடுகளும், நீர்நிலைகளும் நிறைந்துள்ளன.
அங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், திறந்தவெளியில் பிளாஸ்டிக் கழிவு வீசப்படுகிறது. குறிப்பாக, திறந்தவெளி குப்பை கிடங்கில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால், வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பாலித்தீன் கவரில் இருக்கும் உணவு பொருட்களால் கவரப்படும் வனவிலங்குகள், பாலித்தீன் கவருடன் உட்கொள்ளும் போது, உயிரிழப்பு நேரிடுகிறது.
இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:-
இயற்கையை பாதுகாக்கும் வகையில், பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். நுழைவு சீட்டு வழங்கும் போது வாகனங்களை சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும்.தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர் பயன்படுத்துபவர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும். நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இயற்கை வளத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க முடியும் என்றனர்.






