திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளியில் ரத்த தான முகாம்

ஐ.எம்.ஏ., ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் ஏ.வி.பி., பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட திட்டத்தலைவர் அனந்தராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இரத்த தான முகாம் நடைபெற்ற காட்சி.
இரத்த தான முகாம் நடைபெற்ற காட்சி.
Published on

திருப்பூர் : 

திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளி இன்டரேக்ட் கிளப், ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன் மற்றும் ஐ.எம்.ஏ., ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் ஏ.வி.பி., பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமில் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன் தலைவர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். ஏ.வி.பி. பள்ளி தாளாளர் கார்த்திகேயன் முகாமிற்கு தலைமை தாங்கியதோடு ரத்ததானத்தின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட திட்டத்தலைவர் அனந்தராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கவுரவ விருந்தினர்களாக மாவட்ட ரத்த தான முகாம் தலைவர் கமலா பாஸ்கர் மற்றும் ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி கலந்து கொண்டனர்.

ஏ.வி.பி., பூண்டி பள்ளி முதல்வர் பிரியா ராஜா, ரோட்டரி வி.என். முத்துராமலிங்கம், பிரேம் ஆனந்த், பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன் செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் சுகுமார் கலந்து கொண்டனர். பெற்றோர் மற்றும் தன்னார்வலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். பள்ளி ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு,மேலாளர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாணவி அமிர்தவல்லி நன்றி கூறினார்.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com