என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சாந்தி அமலோா் தலைமை வகித்தாா்
    • காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு உறுப்பினா் பிரசாந்த், தன்னாா்வலா் அமைப்பின் நிா்வாகி வசந்தி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

    காங்கயம்:

    குழந்தை திருமண ஒழிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி காங்கயத்தில் நடைபெற்றது.காங்கயம் காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சாந்தி அமலோா் தலைமை வகித்தாா்.இதில் பெண் குழந்தைகளுக்கு 18 வயது பூா்த்தியாகும் முன்பே திருமணம் செய்யக்கூடாது.குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதோடு, அவா்களின் பள்ளிக் கல்வி தொடா்வதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன.இதைத்தொ டா்ந்து, மாணவிகள், ஆசிரியா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள், ஆசிரியா்கள், காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு உறுப்பினா் பிரசாந்த், தன்னாா்வலா் அமைப்பின் நிா்வாகி வசந்தி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

    • சிக்கண்ணா அரசு கல்லூரி அருகே 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீஸசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    திருப்பூர்:

    திருப்பூர் -வஞ்சிபாளையம் இடையே சிக்கண்ணா அரசு கல்லூரி அருகே 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீஸசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்.
    • பொள்ளாச்சி - கோவை இடையே பயண நேரத்தை, 50 நிமிடங்களாக குறைக்க வேண்டும்.

    உடுமலை:

    பொள்ளாச்சி ரெயில் நிலையத்தை ஆய்வு செய்ய வந்த, தெற்கு ெரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்கை சந்தித்து பொள்ளாச்சி ெரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை வழியாக பொள்ளாச்சி - கோவை இடையே காலை மற்றும் மாலை இயக்கப்படும் ெரயிலை வாரத்தின் அனைத்து நாட்களும் இரு திசைகளில் இருந்தும் இயக்க வேண்டும்.தற்போது கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சனிக்கிழமை மாலை ெரயில் இல்லை.பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு ஞாயிறு காலை ெரயில் இல்லை. கோவை - மதுரை ெரயில் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு வர 58 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. பொள்ளாச்சி - கோவை இடையே காலை மற்றும் மாலை இயக்கப்படும் ெரயில் வேகத்தையும், மதுரை - கோவை - மதுரை ெரயிலின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.பொள்ளாச்சி - கோவை இடையே பயண நேரத்தை, 50 நிமிடங்களாக குறைக்க வேண்டும். பொள்ளாச்சி - மேட்டுப்பாளையம் இடையே நேரடி ெரயில்கள் இயக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து சென்னை எழும்பூர் அல்லது தாம்பரம் ஆகிய ஊர்களுக்கு பழநி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக வந்தே பாரத் அல்லது விரைவு ெரயில்கள் தினமும் இயக்க வேண்டும்.பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் கூடுதல் ெரயில்கள் இயக்க வேண்டும். எர்ணாகுளம் - பாலக்காடு மின்சார ெரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்.பொள்ளாச்சி, பழநி, மதுரை வழியாக குருவாயூர் - ராமேஸ்வரம் வந்தே பாரத் ெரயிலை இயக்க வேண்டும்.

    பொள்ளாச்சி ெரயில் நிலையத்தில் மீட்டர் கேஜ் காலங்களில் இருந்தது போன்று,ெரயில் பராமரிப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, இங்கு இருந்து நேரடியாக பல்வேறு இடங்களுக்கு ெரயில்களை இயக்க வேண்டும்.பொ ள்ளாச்சி அல்லது கோவையில் இருந்து, காரைக்கால் அல்லது வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு பழநி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை வழியாக விரைவு ெரயில்களை இயக்க வேண்டும்.

    இது குறித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொடுத்த மனுவில், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு கல்வி, மருத்துவம், தொழில் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இதற்காக, பொது போக்குவரத்துக்கு பஸ்சை பயன்படுத்துகின்றனர். எனவே பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 6 முறை ெரயில்விட வேண்டும்.

    பொள்ளாச்சியில் இருந்து சென்னை செல்ல கோவை வழியாக ெரயில் இயக்கிட வேண்டும். கேரளா துறைமுக நகரமான கொச்சியில் இருந்து தமிழக துறைமுக நகரமான துாத்துக்குடிக்கு தினசரி ெரயில் இயக்க வேண்டும்.முன்பு இருந்துள்ள பாலக்காடு - பொள்ளாச்சி பயணிகள் ெரயில் தினசரி இயக்க வேண்டும். கோவையை தலைமையிடமாகக்கொண்டு, பொள்ளாச்சி ெரயில்வே நிலையத்தை உள்ளடக்கிய புது ெரயில்வே கோட்டம் உருவாக்கிட வேண்டும்.

    தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், குறைவான பெட்டிகளுடன் இயங்கி கொண்டு இருக்கும் பாலக்காடு - திருச்செந்தூர் ெரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். மதுரை - கோவை - மதுரை இயக்கப்படும் ெரயிலை, திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும். சென்னைக்கு அதிவிரைவு ெரயில் இயக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    • நலவாரியங்களில் தற்போது 40 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா்.
    • கட்டுமான தொழிலாளா்களுக்கு வீடு கட்ட மானியம் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்.

    திருப்பூர்:

    எச்எம்எஸ்., தொழிற்சங்கம் சாா்பில் திருப்பூர் மாவட்டத் தலைவா் ஆா்.முருகன், மாவட்டச்செயலாளா் முத்துசாமி ஆகியோா் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தமிழகத்தில் கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளா்களுக்கு என தனித்தனியாக 18 நலவாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நலவாரியங்களில் தற்போது 40 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா். இந்த தொழிலாளா்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸ் தொகையாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும்.கட்டுமான தொழிலாளா்களுக்கு வீடு கட்ட மானியம் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான 18 நலவாரியங்களிலும் ஒரே மாதிரியான இணையதள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
    • உணவு தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயலலிதாம்பிகை எச்சரித்துள்ளார்.

    திருப்பூர்:

    தமிழக அரசால்தடை செய்ய பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பைகள் டம்ளர் கள் விற்பனை செய்த 10 கடைகளுக்கு ரூ. 43000 அபராதம் விதித்து சீல் வைத்தனர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்படி திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர் ரகுநாதன், காங்கயம் காவல் நிலைய போலிசார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். காங்கயம் அகஸ்திலிங்கப்பாளையம், ஆலாம்பாடி, தாராபுரம் ரோடு, கீரனூர், பூமான்டவலசு பகுதிகளிலுள்ள 10 கடைகளில் இந்த ஆய்வு மேற்கொண்டனர். அப்போது

    தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 10 கடைகளுக்கும் மொத்தமாக ரூ. 43000 அபராதம் விதித்தும் கடைகளையும் மூடி சீல் வைத்தனர். மீண்டும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் கடைகளுக்கு உணவு தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயலலிதாம்பிகை எச்சரித்துள்ளார்.

    • தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
    • .பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திட கடைசி தேதி 30-11-2023 ஆகும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. ஒரு வருடத்திற்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ.30,000 எனவும், மாணவிகளுக்கு 36,000 எனவும் வழங்கப்படுகிறது.பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திட கடைசி தேதி 30-11-2023 ஆகும்.

    மேலும் விவரங்கள் அறிந்திட திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0421-2971127 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாய்ப்பினை முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் பயன்படுத்தி கொண்டு 30-11-2023-க்குள் www.ksb.gov.in என்ற கே.எஸ்.பி., இணையதளத்தில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.   

    • கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் 27 -ந் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படுகிறது.
    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தங்கள் நடைபெறுகிறது

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில், 23.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் 27 -ந் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படுகிறது.

    முன்னதாக, கடந்த ஜூன் மாதம் முதல் திருத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக 7 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு மாவட்ட மொத்த ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 2,520 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஸ்ட்ராங் ரூமில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, வரும் 27-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெறுகின்றன. அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், நவம்பர் மாதம் 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில் சுருக்கமுறை திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. சுருக்கமுறை திருத்தத்தின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தங்கள் நடைபெறுகிறது. இதற்காக, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநகராட்சி உதவி கமிஷனர், தாசில்தார்களுக்கு அனுப்பிவைக்கப்ப ட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில், சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும்.

    Voters.eci.gov.in என்கிற இணையதளம், VSP மொபைல் செயலி வாயிலாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்து வரும் 2024 ஜனவரி 5ந் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான பட்டியல் என்பதால், இந்தாண்டுக்கான வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி முக்கியத்துவம் பெறுகிறது.

    வீடுவீடாக செல்லும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்காக, இறந்தோர் விவரங்கள், பெயர் சேர்ப்பதற்காக புதியவர் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

    வருகிற 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, கலெக்டர் அலுவலகம், அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில் ஒட்டப்படும். வாக்காளர்கள் தவறாமல் வரைவு பட்டியலை பார்வையிடவேண்டும். குடும்ப உறுப்பினர்களின் பெயர், புகைப்பட விவரங்கள், முகவரி, தொகுதி சரியாக உள்ளனவா என சரிபார்க்க வேண்டும். மாறுதல்கள் இருப்பின் சுருக்கமுறை திருத்த காலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை சேர்ப்பதில், தேர்தல் கமிஷன் அதிக கவனம் செலுத்திவருகிறது. இதற்காக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 1-ந் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளைஞர்கள், தவறாமல், தங்களை வாக்காளராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் கேட்டுக்கொள்ள ப்பட்டுள்ளது.  

    • அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    • வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 27.10.2023 அன்று மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக அறை எண்: 240 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறது. கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் கலெக்டரிடம் வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட உள்ளது. வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளவும், வேளாண் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்ப டவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்துகொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர்.
    • பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவை தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் "உணவுத் திருவிழா" கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் மாணவர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார் மற்றும் குஜராத் என்று அந்தந்த மாநிலங்களின் சிறப்புமிக்க உணவு வகைகளை சுவை மிகுந்ததாகவும், சத்துள்ளதாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தினர். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்க த்தினையும் எடுத்துரைத்தனர். சமூக அறிவியல் துறையால் தானிய வகைகள் மூலம் அலங்கரிக்க ப்பட்ட 'உலக வரைபடம்" அனைவரையும் கவர்ந்தது. விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர். பள்ளி முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதா பானு,மேலாளர் ராமசாமி ஆகியோர் மாணவர்களையும், அவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டினர்.

    • 2024ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பித்து கொள்ள வேண்டும்.
    • ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இைண இயக்குனர்கள் சரவணன், புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2024ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பித்து கொள்ள வேண்டும். புதுப்பித்து கொள்ள வேண்டிய கடைசி நாள் 31-10-2023 ஆகும். எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் https://dish.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று உரிய உரிம தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பித்து, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்ப ட்டுள்ளது.

    • குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம், 1பவுன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் என்று கூறி 3 பேர் தனியாக வசிக்கும் பெண்களை குறிவைத்து நகை, பணத்தை மிரட்டி பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. இது குறித்து வடக்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த ஜெயராம் (வயது 47), கோவை அண்ணா நகரை சேர்ந்த அய்யப்பன் (51), ஆறுமுகம் (47) ஆகிய 3 பேரை பிடித்தனர். இவர்கள் தனியாக வசிக்கும் பெண்களை குறி வைத்து போலீசார் போல் நடித்து அவர்களை மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்து

    சென்றது தெரிய வந்தது. கஞ்சா வழக்கு போடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளனர். ஆறுமுகம் போலீஸ் போல் போலியான அடையாள அட்டை மற்றும் காக்கி சீருடை வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம், 1பவுன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.

    • ஊதிய நிர்ணயக்குழு உறுப்பினருமான நெடுஞ்செழியன், திருப்பூர் தொழிற்சங்க நிர்வாகி ரங்கசாமி, மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • பஞ்சாலை தொழிலாளர் ஊதிய நிர்ணய குழுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    திருப்பூர்:

    பஞ்சாலை தொழிலாளர் ஊதிய நிர்ணய குழுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாலை தொ.மு.ச. மாவட்ட பொதுச்செயலாளர் கொ.ராமதாஸ் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதன்படி பஞ்சாலை தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1000 ஊதியம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். உள்ளிட்ட நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ராமதாஸ் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார். இதில் தொ.மு.ச. மாநில பேரவை செயற்குழு உறுப்பினரும், ஊதிய நிர்ணயக்குழு உறுப்பினருமான நெடுஞ்செழியன், திருப்பூர் தொழிற்சங்க நிர்வாகி ரங்கசாமி, மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×