search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional boxes"

    • கடந்த 25-ந் தேதியுடன் இந்த ெரயில் தொடங்கப்பட்டு 200 நாட்களை நிறைவடைகிறது.
    • சென்னை- கோவை வந்தே பாரத் 5.50 மணி நேரத்தில் இலக்கை சென்றடைகிறது.

    திருப்பூர்:

    இந்திய ெரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே வந்தே பாரத் ெரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு தொடக்கம் முதலே மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தது.

    தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் வந்தே பாரத் என்றால் அது சென்னை- பெங்களூர்- மைசூர் வந்தே பாரத் தான். இருப்பினும் அதன் பெரும்பகுதி கர்நாடகாவில் தான் செல்கிறது. எனவே முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட முதல் வந்தே பாரத் என்றால் அது சென்னை- கோவை வந்தே பாரத் தான். இதனை கடந்த ஏப்ரல் 8-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    கடந்த 25-ந் தேதியுடன் இந்த ெரயில் தொடங்கப்பட்டு 200 நாட்களை நிறைவடைகிறது.இந்தியாவில் இயக்கப்படும் பல வந்தே பாரத் ெரயில்கள் காலியாகவும் பயணிகள் இல்லாமல் இயக்கப்படும் நிலையில், சென்னை- கோவை வந்தே பாரத் ெரயில்கள் இந்த 199 நாட்களும் ஹவுஸ்புல்லாகவே இருந்துள்ளது.

    இந்த ெரயிலை முதல் நாள் பிரதமர் மோடி நேரில் வந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது முதலே இந்த ெரயில் டிக்கெட்கள் வெயிடிங் லிஸ்டிலேயே இருந்துள்ளது. அதிலும் கோவை - சென்னை மார்க்கத்தில் வந்தே பாரத் ெரயில்களின் டிக்கெட்டுகள் பல நாட்கள் முன்பாகவே விற்று தீர்ந்துவிடுகிறது. இதனால் கோவை - சென்னை வந்தே பாரத்தில் பயணிக்க விரும்புவோர் முன்கூட்டியே நிச்சயம் புக் செய்தாக வேண்டும்.

    சென்னை -கோவை வந்தே பாரத்தில் 56 இருக்கைகளை கொண்ட முதல் வகுப்பு எக்ஸிகியூட்டிவ் க்ளாஸ் இருக்கைக்கான டிக்கெட் ரூ. 2,310ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 450 சீட்களை கொண்ட வழக்கமான சேர் காருக்கு டிக்கெட் ரூ.1,215ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக வந்தே பாரத்தில் டிக்கெட் விலை சற்று அதிகமாக இருக்கிறது என்ற விமர்சனம் இருக்கும். ஆனால், இது சென்னை- கோவை வந்தே பாரத் ெரயில்கள் முன்பதிவை குறைக்கவில்லை.

    எப்போதும் இருக்கும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்கள் இதற்கு சாட்சியாகும். ஒரு சில வந்தே பாரத் ெரயில்களில் டிக்கெட் விற்பனை குறைவாக உள்ளதாக புகார் இருக்கும் நிலையில் சென்னை -கோவை வந்தே பாரத் நல்ல வரவேற்புடன் புதிய சாதனை படைத்து வருகிறது.

    முதலில் சென்னை- கோவை வந்தே பாரத் 6 மணி நேரம் 10 நிமிடங்களில் செல்லும் என அறிவிக்கப்பட்டது. அதிவேகமாக ெரயில்கள் செல்லும் வகையில் டிராக் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட நிலையில் வந்தே பாரத் பயண நேரம் மேலும் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இப்போது சென்னை- கோவை வந்தே பாரத் 5.50 மணி நேரத்தில் இலக்கை சென்றடைகிறது.

    கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் திருப்பூர், ஈரோடு. சேலம் வழியாக 11.50க்கு சென்னை சென்றடையும். அதேபோல சென்னையில் இருந்து மதியம் 2.25 மணிக்குக் கிளம்பும் வந்தே பாரத் இரவு 8.15 மணிக்கு மீண்டும் கோவை வந்தடையும். இந்த ெரயில் திருப்பூர் மற்றும் சேலத்தில் இரண்டு நிமிடங்களும் ஈரோட்டில் 3 நிமிடங்களும் நிறுத்தப்படுகிறது.

    சென்னை - ஜோலார்பேட்டை இடையே மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதித்ததும், அதைத் தொடர்ந்து அரக்கோணம் - ஜோலார்பேட்டை பிரிவில் வேகத்தை அதிகரித்ததும் பயண நேரத்தை குறைக்க உதவி இருக்கிறது. சென்னை- கோவை இடையே பகல் நேரத்தில் ஏற்கனவே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் நிலையில், அதையும் தாண்டி வந்தே பாரத்திற்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது.

    மேலும் நாட்டில் இயக்கப்படும் மற்ற வந்தே பாரத் ெரயில்களில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். ஆனால், சென்னை -கோவை ரூட்டில் 8 பெட்டிகள் மட்டும் இருக்கிறது. இந்த ரூட்டில் டிக்கெட் தேவை அதிகமாக இருப்பதால் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இருப்பினும் ஒரு ரூட்டில் 6 மாதங்கள் ெரயில் இயங்கிய பிறகே தேவையான மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதால் தற்போதைய சூழலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

    • பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்.
    • பொள்ளாச்சி - கோவை இடையே பயண நேரத்தை, 50 நிமிடங்களாக குறைக்க வேண்டும்.

    உடுமலை:

    பொள்ளாச்சி ரெயில் நிலையத்தை ஆய்வு செய்ய வந்த, தெற்கு ெரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்கை சந்தித்து பொள்ளாச்சி ெரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை வழியாக பொள்ளாச்சி - கோவை இடையே காலை மற்றும் மாலை இயக்கப்படும் ெரயிலை வாரத்தின் அனைத்து நாட்களும் இரு திசைகளில் இருந்தும் இயக்க வேண்டும்.தற்போது கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சனிக்கிழமை மாலை ெரயில் இல்லை.பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு ஞாயிறு காலை ெரயில் இல்லை. கோவை - மதுரை ெரயில் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு வர 58 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. பொள்ளாச்சி - கோவை இடையே காலை மற்றும் மாலை இயக்கப்படும் ெரயில் வேகத்தையும், மதுரை - கோவை - மதுரை ெரயிலின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.பொள்ளாச்சி - கோவை இடையே பயண நேரத்தை, 50 நிமிடங்களாக குறைக்க வேண்டும். பொள்ளாச்சி - மேட்டுப்பாளையம் இடையே நேரடி ெரயில்கள் இயக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து சென்னை எழும்பூர் அல்லது தாம்பரம் ஆகிய ஊர்களுக்கு பழநி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக வந்தே பாரத் அல்லது விரைவு ெரயில்கள் தினமும் இயக்க வேண்டும்.பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் கூடுதல் ெரயில்கள் இயக்க வேண்டும். எர்ணாகுளம் - பாலக்காடு மின்சார ெரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்.பொள்ளாச்சி, பழநி, மதுரை வழியாக குருவாயூர் - ராமேஸ்வரம் வந்தே பாரத் ெரயிலை இயக்க வேண்டும்.

    பொள்ளாச்சி ெரயில் நிலையத்தில் மீட்டர் கேஜ் காலங்களில் இருந்தது போன்று,ெரயில் பராமரிப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, இங்கு இருந்து நேரடியாக பல்வேறு இடங்களுக்கு ெரயில்களை இயக்க வேண்டும்.பொ ள்ளாச்சி அல்லது கோவையில் இருந்து, காரைக்கால் அல்லது வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு பழநி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை வழியாக விரைவு ெரயில்களை இயக்க வேண்டும்.

    இது குறித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொடுத்த மனுவில், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு கல்வி, மருத்துவம், தொழில் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இதற்காக, பொது போக்குவரத்துக்கு பஸ்சை பயன்படுத்துகின்றனர். எனவே பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு 6 முறை ெரயில்விட வேண்டும்.

    பொள்ளாச்சியில் இருந்து சென்னை செல்ல கோவை வழியாக ெரயில் இயக்கிட வேண்டும். கேரளா துறைமுக நகரமான கொச்சியில் இருந்து தமிழக துறைமுக நகரமான துாத்துக்குடிக்கு தினசரி ெரயில் இயக்க வேண்டும்.முன்பு இருந்துள்ள பாலக்காடு - பொள்ளாச்சி பயணிகள் ெரயில் தினசரி இயக்க வேண்டும். கோவையை தலைமையிடமாகக்கொண்டு, பொள்ளாச்சி ெரயில்வே நிலையத்தை உள்ளடக்கிய புது ெரயில்வே கோட்டம் உருவாக்கிட வேண்டும்.

    தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், குறைவான பெட்டிகளுடன் இயங்கி கொண்டு இருக்கும் பாலக்காடு - திருச்செந்தூர் ெரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். மதுரை - கோவை - மதுரை இயக்கப்படும் ெரயிலை, திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும். சென்னைக்கு அதிவிரைவு ெரயில் இயக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    • செவ்வாய்க்கிழமை தவிர, வாரத்தின் 6நாட்கள் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது.
    • முன்பதிவு இருக்கை எண்ணிக்கை 2,108 ஆக இருந்தது.

    திருப்பூர்:

    மங்களூருவில் இருந்து கச்சிக்குடாவுக்கு இயக்கப்படும் ெரயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி., பெட்டி இணைக்கப்படுகிறது.புதன், சனிக்கிழமை தோறும் கர்நாடகமாநிலம், மங்களூருவில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவுக்கு செல்லும்.இந்த ெரயிலில் தற்போது, 22 பெட்டிகள் உள்ளது. தற்போது கூடுதலாக ஒரு ஏ.சி., பெட்டி இணைக்கப்படுகிறது.இதே போல், மறுமார்க்கமாக கச்சிக்குடாவில் இருந்து மங்களூருவரும் ரெயிலிலும் ஒருஏ.சி., பெட்டி இணைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் இருந்து திருப்பூர் வழியாக மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ெரயிலில் இரண்டு முன்பதிவு பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது.

    செவ்வாய்க்கிழமை தவிர, வாரத்தின் 6நாட்கள் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது. 21 பெட்டிகளுடன் பயணித்து வந்த நிலையில், கடந்த வாரம் முதல் கூடுதலாக இரண்டு முன்பதிவு பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்பதிவில் புதிய இலக்கை ஜனசதாப்தி ரயில் எட்டியுள்ளது.

    முன்பதிவு இருக்கை எண்ணிக்கை 2,108 ஆக இருந்தது. கூடுதலாக இரண்டு பெட்டி சேர்த்து 21 பெட்டியானதால், முன்பதிவு இருக்கை எண்ணிக்கை 2,320 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் இவ்வளவு முன்பதிவு இருக்கைகளுடன் இயங்கும் ஒரே ெரயில் ஜனசதாப்தி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×