திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளியில் உணவுத்திருவிழா

விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர்.பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவை தொடங்கி வைத்தார்.
ஏ.வி.பி.பள்ளியில் உணவுத்திருவிழா நடைபெற்ற காட்சி. 
ஏ.வி.பி.பள்ளியில் உணவுத்திருவிழா நடைபெற்ற காட்சி. 
Published on

திருப்பூர்:

திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் "உணவுத் திருவிழா" கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் மாணவர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார் மற்றும் குஜராத் என்று அந்தந்த மாநிலங்களின் சிறப்புமிக்க உணவு வகைகளை சுவை மிகுந்ததாகவும், சத்துள்ளதாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தினர். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்க த்தினையும் எடுத்துரைத்தனர். சமூக அறிவியல் துறையால் தானிய வகைகள் மூலம் அலங்கரிக்க ப்பட்ட 'உலக வரைபடம்" அனைவரையும் கவர்ந்தது. விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர். பள்ளி முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதா பானு,மேலாளர் ராமசாமி ஆகியோர் மாணவர்களையும், அவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com