என் மலர்
நீங்கள் தேடியது "நகை-பணம் பறிப்பு"
- மூன்று வாலிபர்கள் ஜானகியிடம் வீடு வாடகைக்கு இருக்கிறதா? என கேட்டு உள்ளனர்.
- சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி தலைமுறைவாகி விட்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் வீரபாண்டி ஆத்து தோட்டம் அமிர்தா நகர் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி ஜானகி (வயது 36). நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது மூன்று வாலிபர்கள் ஜானகியிடம் வீடு வாடகைக்கு இருக்கிறதா? என கேட்டு உள்ளனர்.
உடனே ஜானகி இருப்பதாக கூறி உள்ளார். இதனையடுத்து மூன்று பேரில் ஒருவன் கேட்டின் அருகே நின்று கொண்டார். இரண்டு பேர் உள்ளே சென்றுள்ளனர். அப்போது திடீரென ஜானகி கழுத்தில் கத்தியை வைத்து நகையை கொடுத்து விடு ,இல்லையென்றால் குத்தி விடுவதாக மிரட்டினர். இதனால் பயந்து போன அவர் கழுத்தில் கிடந்த நகையை கழற்றி கொடுத்தார். அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த கேசவனின் கழுத்திலும் ஒருவர் கத்தியை வைத்து மிரட்டி பணம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் மனைவி இருவரும் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி தலைமுறைவாகி விட்டனர்.
இதுகுறித்து திருப்பூர் வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் நகை பணத்தைப் பறித்து சென்ற வாலிபர்கள் குறித்து விசாரணை நடத்தி ேதடி வருகின்றனர்.இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.
- அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம், 1பவுன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் என்று கூறி 3 பேர் தனியாக வசிக்கும் பெண்களை குறிவைத்து நகை, பணத்தை மிரட்டி பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. இது குறித்து வடக்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த ஜெயராம் (வயது 47), கோவை அண்ணா நகரை சேர்ந்த அய்யப்பன் (51), ஆறுமுகம் (47) ஆகிய 3 பேரை பிடித்தனர். இவர்கள் தனியாக வசிக்கும் பெண்களை குறி வைத்து போலீசார் போல் நடித்து அவர்களை மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்து
சென்றது தெரிய வந்தது. கஞ்சா வழக்கு போடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளனர். ஆறுமுகம் போலீஸ் போல் போலியான அடையாள அட்டை மற்றும் காக்கி சீருடை வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம், 1பவுன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.






