கலெக்டர் தலைமையில் திருப்பூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - வருகிற 27-ந்தேதி நடக்கிறது

அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் 27.10.2023 அன்று மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக அறை எண்: 240 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறது. கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் கலெக்டரிடம் வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட உள்ளது. வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளவும், வேளாண் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்ப டவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்துகொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com