என் மலர்
திருவாரூர்
- மாநிலம் முழுவதும் பேரணிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தமிழக அரசு பேரணிக்கு தடை விதித்திருப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்:
காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி தமிழக முழுவதும் பேரணி நடத்துவதாக ஆர்.எஸ்.எஸ் அறிவித்திருந்தது அதன் பெயரில் மாவட்டங்களில் தீவிரமான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன.
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றமும் தெரிவித்து இருந்தது. இதனால் கூடுதல் உற்சாகத்தோடு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டையிலும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு மாநிலம் முழுவதும் தடை விதித்துள்ளது.
பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணியால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படலாம் என்று கருதி தடை விதிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாநிலம் முழுவதும் பேரணிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தமிழக அரசு பேரணிக்கு தடை விதித்திருப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருவதால் கடைக்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
- ஆபத்தான நிலையிலுள்ள கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலப்பெருமழை ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்து உள்ளது இதை உடனே சீரமைக்க வேண்டும் என்று மேலப்பெருமழை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கட்டிடத்தை பார்வையிட்டு சீரமைத்து தருமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கட்டிடத்தின் மேல் பகுதி பழுதடைந்து உள்ளது. ரேஷன் கடையின் மேற்காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருவதால் கடைக்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் கட்டிடம் பழுதடைந்து உள்ளது. எனவே உடனடியாக ரேஷன்கடை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நூற்றுக்கும் மேலான நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
- மாவட்ட தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நாய்களுக்கு தடுப்பூசி போட்டார்.
மன்னார்குடி:
மன்னார்குடி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறையும், மிட்டவுன் ரோட்டரி சங்கமும் இணைந்து லூயிஸ் பாய்ச்சர் என்ற விஞ்ஞானி பிறந்த தினத்தில் (தடுப்பூசியை கண்டுபிடித்தவர்) வெறி நோய் தடுப்பூசி முகாமை நடத்தினர்.
இதில் 2981 ரோட்டரி மாவட்ட கால்நடை முகாம்களுக்கான மாவட்ட தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நாய்களுக்கு தடுப்பூசி போட்டார்.
மொத்தம் 113-க்கும் மேலான நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மண்டல இணை இயக்குனர் டாக்டர் டி. ராமலிங்கம் வழிகாட்டுதலின் பேரில் உதவி இயக்குனர் டாக்டர் சி. மும்மூர்த்தி, மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் டி. ரெங்கையன், செயலர் வி. கோபாலகிருஷ்ணன், பொருளர் டி. அன்பழகன், டாக்டர்கள் கார்த்திக், ராகவி, ஆய்வாளர் சின்னக்காளை, உதவியாளர்கள் இ. நடராஜன், வி. பாரதி மோகன், ஆர். கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பெரிய கோவில் குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் புதிதாக விட்டு நிரப்பப்டும்.
- குளத்தை பராமரிக்காமல் தண்ணீர் விட்டதால் சாக்கடை நீர் மற்றும் பாசி படிந்து கிடைக்கிறது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டத்துக்கு உள்பட்ட நெடும்பலம் கிராமத்தில் திருத்துறைப்பூண்டி பெரிய கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் புதிதாக குளத்தில் விட்டு நிரப்பப்டும்.
அதுபோல் இந்த ஆண்டும் குளத்தில் தண்ணீர் விடப்பட்டது.
குளத்தில் மழை பெய்து சாக்கடை நீர் மற்றும் பாசி படிந்து கிடைக்கிறது.
அதை பராமரிக்காமல் தண்ணீர் விட்டதால் பாசி படிந்த தண்ணீருடன் கலந்து கிடைக்கிறது.
அதனால் துர்நாற்றம் வீசுகிறது.
அதனை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவில் நிர்வாகம் தண்ணீரை இறைத்து விட்டு புதிதாக நீர் விட்டு கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- மன்னார்குடி பஸ் நிலையத்தில் நின்றிருந்தவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா சப் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் மன்னார்குடி பஸ் நிலையத்தில் நின்று இருவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை செய்தபோது கேரளா மூணாம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணாமலை செட்டி தெருவை சேர்ந்த சசி (48) வாணக்கார தெரு பிரபாகரன் (38) ஆகிய இருவரையும் கைது செய்து மேலும் சாரணர் செய்து வருகின்றனர்.
- போட்டி 6 சுற்றுலாக நடைபெற்று மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
- அடுத்த மாதம் நடைபெறக்கூடிய மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
நன்னிலம்:
நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம், நன்னிலம் வட்ட சதுரங்க கழகம், நன்னிலம் ரோட்டரி சங்கம், நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து சோழ மண்டல அளவிலான பள்ளி மாணவ -மாணவிகளுக்கான செஸ் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நன்னிலம் ரோட்டரி சங்க தலைவர் பாரி தலைமை தாங்கினார். சாசன தலைவர் சுப்ரமணியம், முன்னாள் தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி ஆளுநர் ஜானி சாம்சன் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டி 6 சுற்றுலாக நடைபெற்றது.
இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள், அடுத்த மாதம் நடைபெறக்கூடிய மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாலையில் பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் முன்னாள் மாவட்ட ஆளுநர் மணிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்ச்செல்வி, சிவசுப்பிர மணியம், தினேஷ், சுரேஷ், தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முன்னாள் தலைவர் உத்தமன் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு சதுரங்க கழகம் இணை செயலாளர் பாலகுணசேகரன் தலைமை யிலான 10 நடுவர்கள் போட்டியை நடத்தினர்.
முடிவில் பொருளாளர் அப்துல் கரீம் நன்றி கூறினார்.
- அரசு மதுக்கடை இல்லாததால் கள்ளச்சந்தையில் வீதிகளில் மது விற்பனை செய்யப்படுகிறது.
- பெட்ரோல்- டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூர் வர்த்தகா் சங்கத்தினர் நேற்று காலை முதல் மாலை வரை கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
கோட்டூரில் அரசு மதுக்கடை இல்லாததால் கள்ளச்சந்தையில் வீதிகளில் மது விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே கோட்டூரில் அரசு மதுபானக்கடை திறக்க வேண்டும்.
மின்கட்டண உயர்வு, பெட்ரோல்- டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோட்டூரில் திருவாரூர் ரோடு, மன்னார்குடி ரோடு, திருத்துறைப்பூண்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
இதனால் காலை நேரத்தில் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோட்டூர் கடைவீதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
- வெள்ள அபாயம் ஏற்பட்டால் தண்ணீர் வடிய வாய்ப்பில்லாமல் சாகுபடி வயல்கள் மூழ்க வாய்ப்புள்ளது.
- வடிகால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி ஆறுகளை தூர்வார வேண்டும்.
திருத்துறைபூண்டி:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் உள்ள மாரியாறு வடிகால் என்பது பாண்டி கோட்டகம் ராஜன் வாய்க்காலிருந்து பிரிந்து இப்பகுதி வடிகாலாக மாரியாறு வடிகால் உருவாகி இங்கிருந்து கரையாங்காடு வழியாக தொண்டியக்காடு சென்று கடலில் கலக்கிறது.
அதேபோல் இப்பகுதியில் உள்ள கள்ளிக்குடி வடிகால், பாண்டியான் போக்கு வடிகால், வளவனாறு வடிகால் என நான்கு வடிகாலும் குன்னலூர் எக்கல், தர்காசு போன்ற சுற்று பகுதியில் உள்ள சுமார் 125 கிராமங்களுக்கு வடிகாலாக உள்ளது.
இந்நிலையில் வடிகால்கள் தூர்வாரப்படாததால் ஆறுகள் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளது. மேலும், கடும் மழை மற்றும் வெள்ள அபாயம் ஏற்பட்டால் தண்ணீர் வடிய வாய்ப்பில்லாமல் கிராமங்கள் மற்றும் சாகுபடி வயலும் மூழ்க வாய்ப்புள்ளது.
எனவே, வடிகால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி ஆறுகளை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, குன்னலூர் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி, துணைத்தலைவர் கதிர்வேல், ஒன்றிய கவுன்சிலர் அனிதா மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஊராட்சி செலவில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற முடிவு செய்தனர்.
இதில் ஊராட்சி செலவில் வாய்க்கால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை டிரோன் மூலம் மருந்து தெளித்து அழிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகள் முதற்கட்டமாக மாரியாறு வடிகாலில் தொடங்கியது.
இது விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- மாலை நேரத்தில் பள்ளி விட்டு இரவு 8 மணிவரை பஸ்சுக்கு காத்திருக்கும் நிலை உள்ளது.
- காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பேன்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பகுதியில் விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதி.
பல்வேறு கிராமங்களிலிருந்து திருத்துறைப்பூண்டி நகரப் பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு படித்து வரும் ஏழை எளிய மாணவ மாணவிகள் அரசுப் பஸ்களில் பயணம் செய்து பள்ளிகளுக்கு தினந்தோறும் வந்து செல்கிறார்கள்.
ஆனால் மாலை நேரத்தில் பள்ளி விட்டு இரவு 8 மணிவரை பஸ்சுக்கு காத்திருக்கும் நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதை அறிந்த திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து திடீரென்று புதிய பஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
உடனடியாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பள்ளி கல்லூரி நேரங்களுக்கு ஏற்ற காலை மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பேன்.
இதுபோல் தொகுதிக்கு உட்பட்ட மற்ற பகுதிகளிலும் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
- அன்பரசன் தனது வயலில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார்.
- கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் தங்கள் வயலில் உள்ள பயிரை காப்பாற்றுவதற்காக தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்
திருவாரூர்:
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள தளிக்கோட்டையை சேர்ந்தவர் அன்பரசன்(வயது 55) விவசாயியான இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. அன்பரசன் தனது வயலில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் நேரடி நெல் விதைப்பு செய்திருந்த தனது வயலில் தேங்கிய தண்ணீரை வடிய வைப்பதற்காக அன்பரசன் தனது மகன் அருள்முருகனை(வயது 25) அழைத்துக்கொண்டு நள்ளிரவு 2 மணியளவில் வயலுக்கு சென்றார்.
அங்கு சென்ற அவர்கள், கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் தங்கள் வயலில் உள்ள பயிரை காப்பாற்றுவதற்காக தண்ணீரை வடியவைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அருள்முருகன் மீது மின்னல் தாக்கியது. அந்த நேரத்தில் அருள்முருகனின் அருகில் அவரது தந்தை அன்பரசன் நின்று கொண்டு இருந்ததால் அவர் மீதும் மின்னல் தாக்கியது. இதில் தந்தை-மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த அருள் முருகனுக்கும், மன்னார்குடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 26 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
மின்னல் தாக்கி தந்தை-மகன் பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
- அறைகள் முழுவதும் குட்கா மற்றும் பான் மசாலா புகையிலை பொருட்களை நிரப்பி வைத்துள்ளனர்.
- 98 அட்டை பெட்டிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருந்தது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமாரின் உத்தரவு படி "ஆப்ரேஷன் கருடா" என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை அழித்து வருகின்றனர்.
அந்த வகையில் சிறப்பு காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான போலீசார் ஆவூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டின் முன் பகுதியில் டீ தூள் மற்றும் கோதுமை மாவு போன்ற பொருட்களை ஏஜெண்ட் எடுத்து செய்வது போல், பொதுமக்களை நம்ப வைத்து, வீட்டின் மற்ற அறைகள் முழுவதும் குட்கா மற்றும் பான் மசாலா புகையிலை பொருட்களை நிரப்பி வைத்துள்ளனர்.
இதில், 65 மூட்டைகள் மற்றும் 98 அட்டை பெட்டிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு சுமார் ரூ. 25 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து நபர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
- நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி, ஆடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கல் உள்ளிட்ட கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
- கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, ஆடு மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது.
மன்னார்குடி:
மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை வளாகத்தில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி, ஆடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கல் உள்ளிட்ட கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக மிட்டவுன் ரோட்டரி சங்க 2981 ரோட்டரி மாவட்ட ஆளுநர் வி. செல்வநாதன், மன்னார்குடி நகராட்சி ஆணையர் தா.
சென்னுகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன்,
ரோட்டரி உதவி ஆளுநர் டி.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர்
டி.ராமலிங்கம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டார்.
ஆடு மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் தலைவர்கள் சி.குருசாமி, எம்.நடராஜன், ஜி.மனோகரன், ஜி.சிவக்கொழுந்து, ஆர்.மாரியப்பன், டாக்டர் கே.மோகனசுந்தரம், பி.ரமேஷ், ஹரிரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ரோட்டரி செயலாளர் வி. கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் ரோட்டரி பொருளாளர் டி.அன்பழகன் நன்றி கூறினார்.






