என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • ஜமுனாமரத்தூரில் நடந்த முதியவர் கொலை வழக்கில் உத்தரவு
    • திருப்பத்தூர் கோர்ட்டு வளாகத்தில் இருந்து தப்பியோட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

    திருப்பத்தூர்:

    திருவண்ணாமலைமாவட் டம் போளூர் அடுத்த ஜமு னாமரத்தூர் மண்டப்பாறை கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பொன்னு சாமி (வயது 45), விவசாயி. இவருக்கும், இவரது சகோத ரர் பூச்சிக்கும் இடையே உள்ள இடத்தில் விவசாயம் செய்வதில் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் பூச்சி, ஊர் பஞ்சாயத்தை கூட் டினார்.

    பஞ்சாயத்தில் பூச்சிக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த உறவினர் குப்பன் (60) என்பவர் பேசினார். இது பொன்னுசாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் கடந்த 2013- ம் ஆண்டு ஜூன் 10-ந் தேதி மீண்டும் குப்பனுக்கும், பொன்னுசாமிக்கும் இடையை வாக்குவாதம் ஏற் பட்டது. அப்போது பொன்னுசாமி, விவசாயியான அவ ரது சகோதரர் ஜெயராமன் (40), உறவினர்கள் உமேஷ், வெள்ளையன் மனைவி பூச்சி ஆகிய 4 பேரும் ஒன்று சேர்ந்து குப்பனை சரமாரியாக தாக் கினர். திடீரெனஜெயராமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குப்பனை வெட்டி னார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக் காக வேலூர் அரசு ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டார். அங்கி சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    ஆயுள் தண்டனை இதுகுறித்து ஜமுனாமரத் தூர் போலீசார் வழக்குப்ப திவு செய்து. பொன்னுசாமி, ஜெயராமன், உமேஷ், பூச்சி ஆகிய 4 பேரை கைது செய்து கோர்ட்டில் வழக்குதொடர்ந்தனர்.

    இந்த வழக்கு திருப்பத்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசா ரணை நேற்று நடந்தது. இதில் நீதிபதி மீனாகுமாரி கத்தி யால் வெட்டிய ஜெயராம னுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், பொன்னுசாமிக்கு ஒரு வருட சிறை தண்டனையும் ரூ.500 அபராதமும், உமேஷ், பூச்சி ஆகிய 2 பேருக்கும் தலா ரூ.750 அபதாரதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    நீதிபதி தீர்ப்பு வாசித்து கொண்டு இருந்த போது ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட ஜெயராமன் கோர்ட் டில் இருந்து தப்பியோட முயன்றார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கோர்ட்டுக்குள் அழைத்து சென்றனர். இதனால் கோர்ட்டு வளா கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ரோந்தும் பணியில் சிக்கினார்
    • போலீசார் விசராணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீசார் கம்பிக்கொல்லை பகுதியில் ரோந்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் நாயக்கனேரி ஊராட்சி பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் அஜித் (வயது 23) என்பதும், பாக்கெட்டில் 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது.

    இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 50 கிராம் கஞ் சாவை பறிமுதல் செய்தனர்.

    • நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்
    • அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்த ஆஸ்பத்திரியில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் டாக்டர்களிடம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • போலீசாரை கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்
    • டிரைவர்களை தேடி வருகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஊசி நாட்டான் பட்டம் பகுதியில் உள்ள ஏலகிரி மலை அடிவாரத்தில் அனுமதியின்றி ஜேசிபி எந்திரம் மூலம் லாரியில் மண் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ரகசிய தகவல் கிடைத்தது.

    எஸ்.பி. உத்தரவின் பேரில் ஜோலார்பேட்டை போலிஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஏலகிரி மலை அடிவாரத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் கடத்தப்படுவது தெரியவந்தது.

    அப்போது கடத்தல்காரர்கள் போலீசாரை கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

    பின்னர் போலீசார் லாரி மற்றும் ஜேசிபி எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேட்டுசக்கரகுப்பம் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 35) மற்றும் லாரி டிரைவர் சின்னா கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சேதுராமன் (30) ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • தேருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை நடந்தது
    • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    ஜோலார்பேட்டை:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் அமைந்துள்ள நிலாவூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் வட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தனிநபர் பண்ணை குட்டை அமைக்க திட்டமிடப்பட்டது.

    வெட்டும் பணியினை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.வுமான தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கதவநாச்சியம்மன் கோவிலில் புதியதாக உருவாக்கப்பட்ட தேருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தேவராஜ் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் திருமால், பொதுக்குழு உறுப்பினர் கே.சாம்மண்ணன், நாட்டறம்பள்ளி ஒன்றிய குழுத் தலைவர் வெண்மதி சிங்காரவேலன், மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் லட்சுமி செந்தில்குமார், சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற கவுன்சிலர் தனலட்சுமி, சங்கர், காளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஆலங்காயத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்
    • பெற்றோரையும் நேரில் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணராமன். இவரது மகள் ஆர்த்தி (வயது 19). ஆர்த்தியும், திருப்பத்தூர் அடுத்த கொரட்டி தண்டூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (25) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஆலங்காயத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து காதல்ஜோடி விக்னேஷ் மற்றும் ஆர்த்தி பாதுகாப்பு கேட்டு, ஜோலார்பேட்டை போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதன் எடுத்து போலீசார் 2 பேரின் பெற்றோரையும் நேரில் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 50 கிராம் கஞ்சா பறிமுதல்
    • ரோந்து பணியில் சிக்கனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீசார் கம்பி கொள்ளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். சந்தேகம் படும்படி சுற்றி திரிந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் நாயக்கனேரி ஊராட்சி மலை பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் அஜித் (வயது 23) என்பதும் இவர் பாக்கெட்டில் 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது
    • பம்ப் ஆபரேட்டர்களுக்கு பயிற்சி கையேடு வழங் கப்பட்டன

    வாணியம்பாடி:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளை சேர்ந்த கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு உறுப்பினருக்கு குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் 4 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பயிற்சி 2 முகாமிற்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் கிராம குடிநீர் திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் ந.விநாயகம் தலைமை தாங்கி பயிற்சியினை தொடங்கி வைத்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    இதில் குடிநீர் வடிகால் வாரியத்தின் உதவி நிர்வாக பொறியாளர் எஸ்.தேசிங்குராஜா, உதவி பொறியாளர் கலைபிரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். பயிற்சியில் கலந்து கொண்ட, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பு பினர்கள், வார்டு கவுன்சிலர்கள்,

    பம்ப் ஆபரேட்டர்களுக்கு பயிற்சி கையேடு வழங் கப்பட்டன. பயிற்சியாளர்கள் ராஜா, மஞ்சுநாதன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    • மாவட்ட அளவிலான இளைஞர் விழா - 2023 நடந்ததுதிருப்பத்தூர்
    • கலெக்டர் பேச்சு

    திருப்பத்தூர்:

    இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான இளைஞர் விழா - 2023 ஒரு நாள் மெகா நிகழ்ச்சி திருப்பத்தூர் அருகே மொளகாரம்பட்டி கிராமத்தில் ஹோலி கிராஸ் பெண்கள் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குநேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர்.பிரேம் குமார் தலைமை வகித்தார்.

    கல்லூரி தாளாளர் சலேத்மேரி சாமிநாதன் முன்னிலை வகித்தார், கல்லூரி முதல்வர் மேஜர் ரேணிசகாயராஜ் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்ட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வை யிட்டார்கள். பின்னர் கலெக்டர் பேசியதாவது;

    இந்த வகையான போட்டிகளை நடத்துவதன் மூலமாக தங்களுக்கு எந்த விதமான திறமை இருக்கின்றது என்று அறிந்து கொண்டு, உங்களை வளர்த்துக் கொண்டீர்களே ஆனால் வாழ்க்கை மாறும். கல்வி என்பது நம்முடைய சிந்தனையை ஊக்குவிப்பது தான். எவ்வாறு சிந்திப்பது என்று கற்றுக்கொடுப்பதுதான் கல்வியின் உடைய நோக்கமே, கிளர்க்காக மாற்றுவதோ ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக மாற்றுவதோ நீதிபதியாக மாற்றுவதோ கல்வினுடைய நோக்கமல்ல, கல்வி தகுதியின் நோக்கம் தான் அது.

    நாம் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். இளைஞர்கள் அனைவரும் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும், திற ன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு உங்களுடைய திறமைகளை என்னவாக இருக்கின்றது என்பதை அறிந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பாஸ்கரன், ஒன்றியக்குழு தலைவர் நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி தலைவர் ஆய்வு
    • பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட் பட்ட குந்தாணிமேடு பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருப்பதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.

    அதன் பேரில் நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சாலை அமைக்கும் பணிகளை உதயேந்திரம் பேரூராட்சி மன்ற தலைவர் பூசாராணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது செயல் அலுவலர் ரேவதி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா ஊராட்சி குளி மாகொல்லை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 46). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சுதீர்நாத் (17). திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனி யார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சுதீர் நாத் உடை மாற்ற செல்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென் றுள்ளார். பின்னர் வெகுநேர மாகியும் வெளியே வர வில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் சென்று உள்பக்கமாக பூட்டப் பட்டிருந்த கதவை தட்டியுள்ளனர்.

    தூக்குப்போட்டு தற்கொலை வெகு நேரமாகியும் கதவை திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது சுதீர்நாத் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

    இதை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதபடி அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திம்மாம் பேட்டை போலீசார், மாண வனின் உடலை பிரேத பரி சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, மாணவனின் தற்கொ லைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 20 வருடங்களாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தது
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த வெள்ளநாயக்கநேரி பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 49). இவர் பச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு திருமணமாகி இந்திராணி என்கிற மனைவியும்,3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.காமராஜ் கடந்த 20 வருடங்களாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன் தினம் காமராஜ் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப் பிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை, அவரது மகன் ஹரிஹரன் சிகிச்சைக் காக நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச் சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து ஓசூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது தாய் சாந்தா கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×