போலீசில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

ஆலங்காயத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்பெற்றோரையும் நேரில் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்
போலீசில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணராமன். இவரது மகள் ஆர்த்தி (வயது 19). ஆர்த்தியும், திருப்பத்தூர் அடுத்த கொரட்டி தண்டூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (25) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஆலங்காயத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து காதல்ஜோடி விக்னேஷ் மற்றும் ஆர்த்தி பாதுகாப்பு கேட்டு, ஜோலார்பேட்டை போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதன் எடுத்து போலீசார் 2 பேரின் பெற்றோரையும் நேரில் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com