என் மலர்
திருப்பத்தூர்
- மாற்று திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்காததை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் ஜாபர் சாதிக் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல், தாலுகா
செயலாளர் காசி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்கள்.
இதில் தமிழக அரசின் உதவித் தொகையை நம்பி வாழ்ந்து வரும் அதிக உடல் ஊனம் உள்ள மாற்று திறனாளிகளுக்கு ஐந்து மாதகாலமாக உதவித் தொகை வழங்காததை கண்டித்தும், உடனடியாக உதவித் தொகை வழங்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள்.
ரங்கன், ரஹமான், ஈசாக். சிங்காரம், கரிசித்தன், கேசவன், ஜோதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நாளை கடைசி நாள்
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 330
தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில்
தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு சேர்க் கைக்கான விவரங்கள் www.skilltraining. tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப தாரர்கள் தற்காலிக ஒதுக்கீடு ஆணையை மேற்குறிப்பிட்ட இணை யதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
அதன் பிறகு சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அசல் சான்றிதழுடன் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி சேர்க்கையினை உறுதி செய்ய வேண்டும். இதற்கான கடைசி நாள் நாளை (புதன்கிழமை) ஆகும். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- ராணிப்பேட்டையை சேர்ந்தவர்கள்
- 40 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது
ஜோலார்பேட்டை:
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை அருகே நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.
ரேசன் அரிசி கடத்தல்
குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் ரெயிலில் பொதுப் பெட்டியில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சீட்டுக்கு அடியில் 40 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது. சந்தேகத்தின் பேரில் போலீசார் அதனை சோதனை செய்தபோது 1 டன் ரேசன் அரிசி இருந்தது.
விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சுமதி (வயது 38), கிருஷ்ணவேணி (37) சரவணன் (30) ஆகியோர் ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிந்தது.
குற்ற புலனாய்வுத் துறை போலீசார் அரிசி மூட்டைகளையும், அதனை கடத்தி வந்தவர்களையும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரெயில்வே போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
- 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் ஆ.பூசாராணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ரேவதி அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் வரவு, செலவு உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் ஆ.பூசாராணி கூறினார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆ.செல்வராஜ், ஏ.மரியஜோசப், ஆர்.சரவணன், ஜெ.கீதா, வி.ஆர்.சரவணன், ஏ.ரமேஷ், ஆர்.மகேஸ்வரி, எம்.பரிமளா,பி.சந்தியா உட்பட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
- மாணவ- மாணவிகள் மழையில் நனைந்த படி சென்றனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி வேலை முடிந்த நேரத்தில் மழை பெய்ததால் மாணவ- மாணவிகள் மழையில் நனைந்த படி சென்றனர்.
இதேபோல் நாட்டறம்பள்ளி ஆத்தூர்குப்பம், ஜங்கலாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஜோலார்பேட்டை ஏலகிரி மலை மற்றும் நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஜோதியை சிறப்பு படை போலீசார், வாணியம்பாடி தாலுகா போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
- போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் பகுதியில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளை நடக்கிறது.
இதனை தடுக்க சிறப்பு படை போலீசார், இன்று காலை அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவரை, மடக்கி பிடித்தனர்.
மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஜோதியை சிறப்பு படை போலீசார், வாணியம்பாடி தாலுகா போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி வாணியம்பாடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சிறப்பு படை போலீசார் பேசிக் கொண்டிருந்ததை, ஓட்டு கேட்ட ஜோதி அங்கிருந்து வேகமாக ஓடினார். கிராமத்தை ஒட்டியுள்ள டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து அதன் மீது ஏறி உட்கார்ந்து கொண்டார்.
நீங்கள் என்னை கைது செய்தால், நான் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டார்.
அவரிடம் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- சுதாரித்து கொண்டதால் விபத்து தவிர்ப்பு
- பெங்களூரை நோக்கி சென்றுகொண்டிருந்தது
ஜோலார்பேட்டை:
வேலூர் மாவட்டத்திலிருந்து பெங்களூரை நோக்கி அரசு பஸ் நேற்று சென்றது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் பழனியும் நடத்துனர் கோபு குமார் பணியில் இருந்தனர். தேசிய நெடுஞ்சாலை வழியாக 60 பயணிகளுடன் சென்று கொண்டிருந்து நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் சென்று கொண்டு இருக்கும் போது டிரைவர் பழனிக்கு திடீரென உடல்நிலை கோளாறு காரணமாக மயக்கம் ஏற்படுவதை அறிந்தார்.
பஸ்சில் இருந்த 60க்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்ற சுதாரித்துக் கொண்டார். டிரைவர் பழனி உடனடியாக தேசிய நெடுஞ்சாலையின் சாலையோரமாக அரசு பஸ்ஸை நிறுத்தினார். பஸ் நின்றதும் அவர் மயங்கினார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
டிரைவர் பழனியை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
மேலும் மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
- 385 கிலோ பறிமுதல்
- டிரைவர் தப்பி ஓட்டம்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலையுடன் வந்த கார் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. அதில் காய மின்றி தப்பிய டிரைவர் போலீசார் வருவதை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சி பகு திக்குஉட்பட்டபனம்தோப்பு என்ற இடத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சா லையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந் தது. இதில் கார் டிரைவர் காயமின்றி உயிர் தப்பிக் காருக் குள் இருந்து வெளியேறினார்கள். பின்னர் காரில் இருந்து சித றிய புகையிலை பொருளை (ஹான்ஸ் பாக்கெட்டுகள்) அவர் சேகரித்து கொண்டிருந் தார். அப்போது நாட்டறம் பள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
போலீசார் வருவதை பார்த்ததும் கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.
விபத்தில் சிக்கிய கார் தமிழக பதிவெண் கொண்டதாகும். காரில் தடை செய்யப் பட்ட 385 கிலோ புகையிலை பொருள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.4 லட் சம் இருக்கும் என கூறப்படு கிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் குறித்தும், புகையிலை பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று ஜோலாபேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பொன்னேரி கூட்ரோடு அருகே உள்ள டீக்கடையில் ஒருவர் சந்தேகப்படும்படி இருந்தார். அவரை பிடித்து விசா ரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
இதனையடுத்து அவரை சோதனை செய்ததில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 84 வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர்பொன்னேரி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் (வயது 42) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து.அவரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கிராம போக்குவரத்து துண்டிப்பு
- தூரமாக நின்று சிலர் செல்பி எடுத்து கொண்டனர்
ஆம்பூர்:
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலைக்கு யானைகள் கூட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வந்தன.
அதில் 2 யானைகள் இறந்துவிட்டது. மேலும் பல யானைகள், தண்டராம்பட்டு வனப் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்தது. அந்த யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை யினர், முதுமலைக்கு கொண்டு சென்றுவிட்டனர்.
இந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை தந்தம் கொண்ட ஆண் யானை, ஜவ்வாது மலையில் தஞ்சமடைந்தது.
பொதுமக்களுக்கு பாதிப்பு விளைவிக்காமல், ஒற்றை தந்தத்துடன் கம்பீரமாக சுற்றி வரும் இந்த யானைக்கு பொதுமக்கள் 'ஒற்றைக் கொம்பன்' என பெயர் சூட்டி செல்லமாக அழைக்கின்றனர்.
இதற்கிடையில் ஜவ்வாதுமலையில் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு வெளியேறிய ஒற்றை கொம்பன் யானை, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிகிறது.
ஆம்பூர் அடுத்த நாயாக்கனேறி மலை ஊராட்சிக்கு உட்பட்ட பனங்காட்டேரி வனப்பகுதி சாலையில் இன்று காலை ஒற்றை யானை நின்று கொண்டு கொம்பன் யானை அட்டகாசம் செய்தது.
அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களை கடந்து செல்ல விடாமல் பார்வையால் மிரட்டியது.
பல மணி நேரமாக சாலையிலேயே நின்று கொண்டிருந்ததால், அந்த வழியாக மலை வாழ் மக்களின் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது.
நகராமல் சாலையில் நின்று கொண்டிருந்த யானையுடன், தூரமாக நின்று சிலர் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.
யானையின் நடமாட்டத்தால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வயதான காராணத்தால் கண் பார்வை கொஞ்சம் மங்கலாக உள்ளது. இந்த யானை காட்டுக்குள் செல்லாமல் நடுரோட்டில் நடந்து சென்று சாலையோரம் காட்டில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.
இதனை வனத்துறையினர் பிடித்து, அதற்கு தேவையான உணவு உள்ளிட்ட விலை வழங்கி பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது
- விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை
வாணியம்பாடி:
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன் தீப்சிங் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு புதியதாக ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணிகளை விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.மாரிமுத்து, துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர்.செந்தில், வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர். சிவசுப்பிரமணி, டாக்டர்கள். செந்தில், பார்த்திபன், தன்வீர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- குளிப்பதற்காக சென்ற நிலையில் பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 27).கூலி தொழிலாளி. இவர் நேற்று ஜோலார்பேட்டை அடுத்த சின்ன கம்மியாம்பட்டில் உள்ள உறவினர் பார்த்திபன் வீட்டிற்கு வந்தார்.
இன்று காலை ஸ்ரீராம் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பார்த்திபனின் விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றார்.
கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது திடீரென ஸ்ரீராம் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட அவரது நண்பர் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து ஸ்ரீராமை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீராம் நீரில் மூழ்கியதால் மீட்க இயலாமல் போனது பணி தோல்வியில் முடிந்தது.இதையடுத்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) முருகன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி ஸ்ரீராமை பிணமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






