என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் மயக்கம்"

    • சுதாரித்து கொண்டதால் விபத்து தவிர்ப்பு
    • பெங்களூரை நோக்கி சென்றுகொண்டிருந்தது

    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டத்திலிருந்து பெங்களூரை நோக்கி அரசு பஸ் நேற்று சென்றது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் பழனியும் நடத்துனர் கோபு குமார் பணியில் இருந்தனர். தேசிய நெடுஞ்சாலை வழியாக 60 பயணிகளுடன் சென்று கொண்டிருந்து நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் சென்று கொண்டு இருக்கும் போது டிரைவர் பழனிக்கு திடீரென உடல்நிலை கோளாறு காரணமாக மயக்கம் ஏற்படுவதை அறிந்தார்.

    பஸ்சில் இருந்த 60க்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்ற சுதாரித்துக் கொண்டார். டிரைவர் பழனி உடனடியாக தேசிய நெடுஞ்சாலையின் சாலையோரமாக அரசு பஸ்ஸை நிறுத்தினார். பஸ் நின்றதும் அவர் மயங்கினார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    டிரைவர் பழனியை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

    மேலும் மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

    ×