அரசு மருத்துவமனையில் அதிகாரி திடீர் ஆய்வு

ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை
அரசு மருத்துவமனையில் அதிகாரி திடீர் ஆய்வு
Published on

வாணியம்பாடி:

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன் தீப்சிங் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு புதியதாக ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணிகளை விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.மாரிமுத்து, துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர்.செந்தில், வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர். சிவசுப்பிரமணி, டாக்டர்கள். செந்தில், பார்த்திபன், தன்வீர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com