என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
    • மாணவ- மாணவிகள் மழையில் நனைந்த படி சென்றனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி வேலை முடிந்த நேரத்தில் மழை பெய்ததால் மாணவ- மாணவிகள் மழையில் நனைந்த படி சென்றனர்.

    இதேபோல் நாட்டறம்பள்ளி ஆத்தூர்குப்பம், ஜங்கலாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஜோலார்பேட்டை ஏலகிரி மலை மற்றும் நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×