என் மலர்
திருப்பத்தூர்
- மின் ஒயர் மீது கை உரசி பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த சின்ன வரிகம் ஊராட்சி மேக்னா பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் தினகரன் (வயது 24), லாரி டிரைவர்.
இவர் இன்று காலை ஆம்பூர் பெரிய வரிகத்தில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலைக்கு லோடு ஏற்றி சென்றார்.
தொழிற்சாலையில் லாரியின் பின்புறத்தில் கட்டப்பட்டிருந்த தார்பாயை கழற்றினார்.
அப்போது தினகரனின் கை, லாரியின் மேல் புறத்தில் சென்ற மின் ஒயர் மீது உரசியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் உடலில் மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தினகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பேர் கைது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் ரெட்டிதோப்பு பகுதியில் மின்வாரிய அலுவலகம் உள்ளது.
இங்கு கடந்த சில நாட்களாக அலுமினிய கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச்செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று 2 பேர் ரூ.1 லட்சம் மதிப்புள்ள அலுமினிய கம்பிகளை மினிவேன் மூலம் திருடிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்குவந்த மின்வாரிய துணை பொறியாளர் கவிதா அவர்களை கையும், களவுமாக பிடித்து ஆம்பூர் டவுன் போலீசில் ஒப்படைத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பத்திரப்பள்ளி பகுதியை சேர்ந்த சாமுவேலு (வயது 41), உமராபாத் அருகே கைலாசகிரியை சேர்ந்த பிரகாஷ் (28) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- ரெயிலை என்ஜின் டிரைவர் இயக்க முற்பட்டபோது சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
- பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஜோலார்பேட்டை:
சென்னையிலிருந்து-பெங்களூரு சென்று கொண்டிருந்த டபுள் டக்கர் ரெயில் வாணியம்பாடி ரெயில் நிலையத்திற்கு 10. 32 க்கு வந்தது.
பின்னர் ரெயிலை என்ஜின் டிரைவர் இயக்க முற்பட்டபோது சிக்னல் கோளாறு ஏற்பட்டது. சிக்னல் கிடைக்காததால் ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.
பின்னர் இதை சரி செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து 20 நிமிடங்கள் தாமதமாக 10.52-க்கு பெங்களூருக்கு டபுள் டக்கர் ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 அடி உயர பிரமாண்ட கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.
- பாச்சல் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.
திருப்பத்தூர்:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் ஜவ்வாதுமலையில் நடைபெறும் கோடை விழாவில் பங்கேற்க உள்ளார்.
இதில் கலந்துகொள்ள நேற்று வேலூர் வந்த அவர் வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில் இரவு முழுவதும் தங்கினார்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை மாவட்டத்திற்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார்.
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான மாதனூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு மேள தாளங்கள், நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து ஆம்பூரில் சென்னை-பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 அடி உயர பிரமாண்ட கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.
அதனை தொடர்ந்து வாணியம்பாடி அருகே தனியார் மண்டபத்தில் தி.மு.க. சமூக வலைதள செயற்பாட்டளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதனை தொடர்ந்து வாணியம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி உயர கொடி கம்பத்தில் கழக கொடியேற்றி வைத்தார்.
தொடர்ந்து செட்டியப்பனூர் கூட்டு ரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நிழற்கூடத்தையும் திறந்து வைத்தார்.
ஜோலபேட்டை அருகே மண்டலவாடியில் நடைபெற்ற அரசு நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் 14,300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அதனை தொடர்ந்து பாச்சல் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு திருப்பத்தூர் விருந்தினர் மாளிகையில் மதியம் உணவு அருந்த சென்றார்.
மாலை 5 மணிக்கு திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
ஆய்வு பணிகளை முடித்து விட்டு இரவு 7 மணிக்கு தனியார் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 1000 கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார்.
அங்கு நிகழ்ச்சியை முடித்து கொண்டு இரவு ஏலகிரிமலையில் ஒய்வு எடுக்கிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சாலையின் இருபுறங்களுக்கும் கட்சி கொடி கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டு உள்ளது.
அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
- ஒருவர் கைது
- ஜெயிலில் அடை-த்தனர்
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக கெங்கை அம்மன் திருவிழா நடந்துவருகிறது.
இதனையொட்டி சாமி ஊர்வலம் நேற்று நடந்தது. அதே பகுதியை சேர்ந்த தீபக் (வயது 22) என்பவர் சாமி கும்பிட சென்றார். அப்போது அங்கு வந்த செந்தூர ப்பாண்டியன் (31), தீபக்கை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது 2 பேரும் மோதலில் ஈடுபட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த தீபக் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, செந்தூர ப்பாண்டியனை கைது செய்து ஜெயிலில் அ்டைத்தனர்.
- 10 பாட்டில்கள் பறிமுதல்
- சிறையில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசிதலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவா சன் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சிரெட்டியூர் அருகே சென்றபோது குண்டு மாரி யம்மன் வட்டம் பகுதியை சேர்ந்ததிருப்பதி என்பவரின் மகன் சேட்டு (வயது 40) என்ப வர் ஒரு வீட்டின் பின்புறம் டாஸ்மாக் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்.
அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவ ரிடமிருந்து 10 மது பாட்டில் கள் பறிமுதல் செய்யப்பட் டன. பின்னர் அவரை போலீ சார் திருப்பத்தூர் கோர்ட் டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- புகைப்படத்தை காண்பித்து பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு
- கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது சிக்கினார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதமாக வயதான முதியவர்களை குறிவைத்து நகை மற்றும் பணம் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜாவூர் பகுதியில் பட்டப்பக லில் முதியவர்களிடம் நைசாக பேசி நகை பணத்தை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் திருடி சென்றனர். அப்போது அருகே உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தபோது தள்ளபாடி பகுதியை சேர்ந்த மைதிலி என்பது தெரியவந்தது.
வயது முதிர்ந்த தம்பதியர் இருக்கும் வீட்டை நோட்டமிட்டு அவர்களிடம் நூதனமாக பேச்சு கொடுத்து கொள்ளைய டிப்பதில் அந்த பெண் கை தேர்ந்தவர் என கூறப்படுகிறது. மேலும் இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு உத்தரவின் பேரில் கிராமிய சப்-இன்ஸ்பெக்டர் அகி லன் தலைமையில் போலீசார் கொரட்டி, தோரணம்பதி, சின்னாரம்பட்டி, விஷமங்கலம், பேராம்பட்டு மற்றும் பல் வேறு ஊர்களில் மைதிலி புகைப்படத்தை காண்பித்து விழிப் புணர்வில் ஈடுபட்டனர். புகைப்படத்தில் உள்ள பெண் மைதிலி வந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
- 2 பவுன் தங்க நகையை மீட்டனர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் வாணியம்பாடி அருகே குந்தானி மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் விநாயகம் (வயது 40) என்பது தெரிய வந்தது.
மேலும் இவர் நாட்டறம்பள்ளி அடுத்த மல்லபள்ளி சுண்ணாம்பு குட்டை பகுதியில் வசித்து வரும் அமராவதி (62) என்பவரின் வீட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருடியது ஒப்புக்கொண்டார். இதனையடுத்து விநாயகத்தை போலீசார் கைது செய்து 2 பவுன் தங்க நகையை மீட்டனர்.
பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- காப்பகத்தில் இருந்து அவரை வரவழைத்து அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்
- தகவல் வாட்ஸ்-அப் குழுவில் பகிரப்பட்டதால் கண்டுபிடித்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலைகளில் சுற்றித்திரிந்தார்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு மேட்டுசக்கரக்குப்பம் பகுதியில் உள்ள காப்பகத்தில் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.
இது குறித்து தகவல் வாட்ஸ்-அப் குழுவில் பகிரப்பட்டது. அந்த தகவலை பார்த்த கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீசார், ஜோலார்பேட்டை போலீசாருடன் தொடர்பு கொண்டு இதுகுறித்த விவரங்களை கேட்டனர்.
போலீசாரால் மீட்கப்பட்டவர் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த வி.பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த கவுரவன் (வயது 80) என்பதும், இவர் கடந்த 5-ந் தேதி காணாமல் போய்விட்டதாக அவரது உறவினர்கள் புகார் கொடுத்திருப்பதும் தெரியவந்தது.
பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்த அவரின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் காப்பகத்தில் இருந்து அவரை வரவழைத்து அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
- 50 பாட்டில்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்
ஆம்பூர் அடுத்த கொத்தூர் பகுதியில் ரீசன்ட் (வயது 60). என்பவர் வெளிமாநில மதுவை விற்பதாக உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது ரீசன்ட் வெளிமாநில மதுவை பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து உமராபாத் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போதை பொருட்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் உமராபாத் பஸ் நிலையத்தில் நவ நீத கிருஷ்ணன் (வயது 30) என்பவர் பங்க்கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பங்க்கடையில் சோதனை செய்தனர். அப்போது கடையில் குட்கா போன்ற போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. போலீசார் குட்கா பாக்கெட் கடை பறிமுதல் செய்தனர்.
மேலும் நவநீதகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது சம்பந்தமாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 மணி நேரம் தாமதமாக சென்னை நோக்கி சென்றது
- பயணிகள் கடும் அவதி
ஜோலார்பேட்டை:
கர்நாடகா மாநிலம், பெங்களூரில்இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்னை நோக்கி சென்றது.
கர்நாடகா மாநிலம், பெங்களூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, குப்பம், ஜோலார்பேட்டை, காட்பாடி, வழியாக தினமும் சென்னை செல்கிறது.
அதன்படி வழக்கம் போல் நேற்று காலை 6மணி அளவில், லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் பெங்களூரில் புறப்பட்டது.
அப்கிபோது கிருஷ்ணராஜபுரத்தில் ரெயில் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 1 மணி நேரம் தாமதமாக குப்பம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.
அங்கிருந்து ஜோலார்பேட்டை செல்ல ரயில் புறப்பட்டு சென்றது. அப்போது சோமநாயக்கன்பட்டி அருகே சென்றபோது மீண்டும் ரெயில் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்ட்டது. இதைத் தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் என்ஜின் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் காலத்தாமதமாக இந்த ரெயில் ேஜாலார்பேட்டையில் வந்து நின்றது. பின்னர் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி சென்றனர். 2 மணி நேரம் காலத்தாமதாக வந்த ரெயிலில் பயணம் செய்தவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
2 இடங்களல் ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், ஏராளமான பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி, ஜோலார்பேட்டையில் இருந்து பஸ்கள் மூலம் சென்னை சென்றனர். இதனால் அங்கு பரபரப்ப ஏற்பட்டது.






