என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுமினியம் திருட்டு"

    • 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் ரெட்டிதோப்பு பகுதியில் மின்வாரிய அலுவலகம் உள்ளது.

    இங்கு கடந்த சில நாட்களாக அலுமினிய கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச்செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று 2 பேர் ரூ.1 லட்சம் மதிப்புள்ள அலுமினிய கம்பிகளை மினிவேன் மூலம் திருடிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்குவந்த மின்வாரிய துணை பொறியாளர் கவிதா அவர்களை கையும், களவுமாக பிடித்து ஆம்பூர் டவுன் போலீசில் ஒப்படைத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பத்திரப்பள்ளி பகுதியை சேர்ந்த சாமுவேலு (வயது 41), உமராபாத் அருகே கைலாசகிரியை சேர்ந்த பிரகாஷ் (28) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ×