என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A woman who steals"

    • புகைப்படத்தை காண்பித்து பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு
    • கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது சிக்கினார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதமாக வயதான முதியவர்களை குறிவைத்து நகை மற்றும் பணம் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜாவூர் பகுதியில் பட்டப்பக லில் முதியவர்களிடம் நைசாக பேசி நகை பணத்தை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் திருடி சென்றனர். அப்போது அருகே உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தபோது தள்ளபாடி பகுதியை சேர்ந்த மைதிலி என்பது தெரியவந்தது.

    வயது முதிர்ந்த தம்பதியர் இருக்கும் வீட்டை நோட்டமிட்டு அவர்களிடம் நூதனமாக பேச்சு கொடுத்து கொள்ளைய டிப்பதில் அந்த பெண் கை தேர்ந்தவர் என கூறப்படுகிறது. மேலும் இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு உத்தரவின் பேரில் கிராமிய சப்-இன்ஸ்பெக்டர் அகி லன் தலைமையில் போலீசார் கொரட்டி, தோரணம்பதி, சின்னாரம்பட்டி, விஷமங்கலம், பேராம்பட்டு மற்றும் பல் வேறு ஊர்களில் மைதிலி புகைப்படத்தை காண்பித்து விழிப் புணர்வில் ஈடுபட்டனர். புகைப்படத்தில் உள்ள பெண் மைதிலி வந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

    ×