search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Burglary by breaking the lock"

    • டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லேரி கிராமத்தில் காமராஜபுரம் சாலையில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    இன்று அதிகாலை சிப்காட் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். டாஸ்மாக் கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து. போலீசார் குடோன் அருகே சென்று பார்த்த போது அங்கு வாலிபர் ஒருவர் மது போதையில் 9 மது பாட்டில்கள், இரும்பு ராடுடன் பைக்கின் அருகே நின்றிருந்தார். அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

    அவர் காட்பாடி அடுத்த வெப்பாலை கிராமத்தை சேர்ந்த கரன் (வயது 29). என்பதும், கடையின் பூட்டை இரும்பு ராடால் உடைத்து மதுபாட்டில்கள் திருடியதும் தெரிய வந்தது.

    மேலும் டாஸ்மாக் கடையின் மேலாளர் ரமேஷ் (48). கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பவுன் தங்க நகையை மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

    அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் வாணியம்பாடி அருகே குந்தானி மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் விநாயகம் (வயது 40) என்பது தெரிய வந்தது.

    மேலும் இவர் நாட்டறம்பள்ளி அடுத்த மல்லபள்ளி சுண்ணாம்பு குட்டை பகுதியில் வசித்து வரும் அமராவதி (62) என்பவரின் வீட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருடியது ஒப்புக்கொண்டார். இதனையடுத்து விநாயகத்தை போலீசார் கைது செய்து 2 பவுன் தங்க நகையை மீட்டனர்.

    பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கேமரா காட்சிகள் மூலம் விசாரணை
    • தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையனை தேடி வருகின்றனர்

    ஆற்காடு:

    ஆற்காடு தொல்காப்பியர் தெருவில் ஜெயித்தமால்சிங் (வயது 30) என்பவர் 5 ஆண்டு களாக செல்போன் மற்றும் அதற்கான உதிரி பாகங் கள் விற்னை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் கடையை திறந்து வியாபாரம் முடித்து கொண்டு இரவு கடையை பூட்டி விட்டுச் சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    கடையில் வைத்திருந்த ரூ.16 ஆயிரம், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 20 செல்போன்கள் உள்ளிட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றனர்.

    இது குறித்து ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி

    அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர்.

    அதில் மர்ம நபரின் முகம் பதிவாகி இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் தனி படைகள் அமைக்க ப்பட்டு கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    • 10 பவுன் நகை, பணம் திருடி சென்றனர்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமம் ரோடு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அருகில் உள்ள நட்சத்திர கோவில் அருகில் சைக்கிள் ஷாப் நடத்தி வருகிறார்.

    திருட்டு

    இவர் நேற்று குடும்பத்துடன் வீட்டை பூட்டிக்கொண்டு திருவண்ணாமலைக்கு துணி எடுப்பதற்காக சென்றுள்ளார்.

    மீண்டும் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் மெயின் கேட் பூட்டப்பட்டு இருந்த நிலையில் வீட்டில் பக்கவாட்டில் உள்ள மாடி படியின் வழியாக உள்ளே வந்து மற்றொரு கேட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளதாக கலசப்பாக்கம் போலீசில் ரமேஷ் புகார் அளித்துள்ளார்.

    விசாரணை

    இதன் பேரில் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டம் பகலிலேயே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 3 பவுன் நகையை திருடி சென்றனர்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் அமர்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி.

    இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஈஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

    பின்னர் நேற்று சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு வந்தார். வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டுக்குள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகையை மர்ம கும்பல் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அரக்கோணம் நகர போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×