என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், பணம் கொள்ளை
    X

    கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், பணம் கொள்ளை

    • கேமரா காட்சிகள் மூலம் விசாரணை
    • தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையனை தேடி வருகின்றனர்

    ஆற்காடு:

    ஆற்காடு தொல்காப்பியர் தெருவில் ஜெயித்தமால்சிங் (வயது 30) என்பவர் 5 ஆண்டு களாக செல்போன் மற்றும் அதற்கான உதிரி பாகங் கள் விற்னை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் கடையை திறந்து வியாபாரம் முடித்து கொண்டு இரவு கடையை பூட்டி விட்டுச் சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    கடையில் வைத்திருந்த ரூ.16 ஆயிரம், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 20 செல்போன்கள் உள்ளிட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றனர்.

    இது குறித்து ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி

    அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர்.

    அதில் மர்ம நபரின் முகம் பதிவாகி இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் தனி படைகள் அமைக்க ப்பட்டு கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×