என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் நேற்று இரவு சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது பார்சம் பேட்டை அருகே ன சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர் இடையன்பட்டி பகுதியைச் சேர்ந்த நெல்சன் மண்டேலா (வயது 25) என்பதும், கையில் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதேபோல் இடையும் பட்டியைச் சேர்ந்த ஹரிஷ் (23) என்பவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.

    அவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் 2 வாலிபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனங்கள் ஊர்ந்து சென்றன

    ஆம்பூர்:

    ஆம்பூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

    இதனால் வாணியம்பாடி, ஆம்பூர் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றனர்.

    கடந்த 4 நாட்களாக அவ்வப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசி வருகிறது.இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • குடையை விரித்தபோது பரிதாபம்
    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி (வயது 50), தொழிலாளி.

    இவரது மனைவி சுகுணா (45). வீரமணி மற்றும் சுகுணா ஆகியோர் நேற்று பைக்கில் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றனர். பைக் வீரமணி ஓட்ட, சுகுணா பின்புறத்தில் உட்கார்ந்து சென்றார்.

    பொன்னேரி அருகே சென்ற போது லேசான தூரல் மழை பெய்தது. அப்போது சுகுணா, கையில் வைத்திருந்த குடையை விரித்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

    அவரை வீரமணி மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சுகுணா சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    • யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வளத்தூர்- குடியாத்தம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் உஷாராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெறயுள்ளது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல் நிலை பள்ளி வளாகத்தில் வட்ட அளவிலான செஸ், கேரம், வாலிபால், இறகு பந்து போட்டி, கபாடி போட்டி, டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெறயுள்ளது.

    இதில் அரசு பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்கின்றனர்.

    இப்போட்டி வருகிற செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

    நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி ஆய்வாளர் குணசுந்தரி பள்ளி மாணவ, மாணவி களுக்கு இடையே நடைபெறும் செஸ் போட்டியை தொடங்கி வைத்தார்.

    பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம் அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைவர் சி.எஸ்.பெரியார்தாசன், தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக துணை தலைவர் ம.அன்பழகன், நகர மன்ற துணை தலைவர் இந்திராபெரியார்தாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விளையாட்டு போட்டியில் நகர மன்ற கவுன்சிலர் புன்னகை கமலசேகரன், பெற்றோர் ஆசிரியர் சங்கம் துணை தலைவர் முகிலன், சங்க இணை செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் சண்முகம், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மதன் குமார் நன்றி கூறினார்.

    • வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 52). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார்.

    ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த பிரதாப் குமார் (24) என்பவர் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக செல்வகுமார் செல்போன் மூலம் கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு பிரதாப் குமாரிடம் கேட்டுள்ளார்.

    இந்த நிலையில் பணத்தை வசூலிப்பதற்காக செல்வகுமார், பிரதாப் குமார் வீட்டிற்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே பணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த பிரதாப் குமார் செல்வகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் செல்வகுமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப் குமாரை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை
    • இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி, குன்னத்தூர் பகு தியை சேர்ந்த மாணவர் ஒரு வர் வாணியம்பாடி தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த மே மாதம், மாணவர் ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத் துள்ளார்.

    இது குறித்து ஜோலார் பேட்டை போலீஸ் நிலையத் தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மங் கையர்கரசி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரே நடந்தது
    • 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் கேத்தான்டப்பட்டியில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரே அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    சர்க்கரை ஆலை நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அண்ணா தொழிற்சங்க மாநில பேரவை தலைவர் (சர்க்கரைப் பிரிவு) திருப்பதி, ஐ.என்.டி.யுசி. மாநில பேரவை பொருளாளர் (சர்க்கரை பிரிவு) தங்கராஜ் பாட்டாளி தொழிற்சங்க தலைவர் அன்பழகன் உள்பட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களிடையே கடந்த 1990 முதல் 33 ஆண்டுகளாக வழங்கி வரும் இரட்டை ஊதிய முறையை கலைந்து அனைவருக்கும் ஒரே மாதிரியான அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி தாசில்தார் குமார் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம் லத்தேரி காட்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 40 வயதுதக்க ஆண் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது க சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் கருப்பு கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலிசார் விசாரணை செய்து வருகின்றனர் இறந்தவரின் முகம் முழுவதும் சிதைந்த இருப்பதால் இறந்தவரை அடையாளம் காண்பதில் போலிசாருக்கு சவாலாக உள்ளது.

    • ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது
    • தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் பஜார் பகுதியில் பேன்சி ஸ்டோர் இயங்கி வருகிறது. இந்த ஸ்டோரில் மாணவர்களுக்கான புத்தகங்கள், நோட்டுகள், விளையாட்டு பொருட்கள் உள்பட அனைத்தும் உள்ளது.

    காலையில் கடை திறப்பதும் இரவில் மூடி செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு பேன்சி ஸ்டோரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது . இதனால் ஸ்டோர் முழுவதும் எரிய தொடங்கியது. தீ மள மளவென பரவி அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளுக்கும் பரவியது.

    பேன்சி ஸ்டோரில் தீப்பிடித்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கும், வாணியம்பாடி, திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்து கொண்டே தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த தீ விபத்தால் நேற்று இரவு ஆம்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆத்மா திட்டத்தின் திருவிழா நடைபெற்றது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கலந்தரா ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் வேளாண்மை துறையின் ஆத்மா திட்டத்தின் கீழ் கிசான் கோஷ்தி என்ற விவசாயத் திருவிழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் தலைமை தாங்கினார்.

    ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். இதில் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பா அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    இதில் விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொருட்களை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆத்மா மானிய விலையில் திட்ட தலைவர் சரவணன், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மேரி வீனஸ், உதவி தொழில் நுட்ப மேலாளர் ஸ்ரீநாத், வேளாண்மை உதவி அலுவலர் அனிதா, ஒன்றிய கவுன்சிலர் கே.ஜி. சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்
    • ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு சென்றனர்

    ஆம்பூர்:

    மாதனூர் அடுத்த கீழ்முருங்கை ஊராட்சியில் ஸ்ரீ சுயம்பு பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவிலில் மூலவர் மற்றும் நந்தி மீது நுமார் 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு பின்னி, பிணைந்து படம் எடுத்து ஆடியது.

    இதனைப் பார்த்த கிராம மக்கள் மற்றும் கோவில் பூசாரி பாம்பிற்கு கற்பூர தீபாரணை காட்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    இந்த நிகழ்வு குறித்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது. ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலில் நடந்த அதிசய நிகழ்வை வந்து பார்வையிட்டு சாம தரிசனம் செய்தனர்.

    ×