என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை அரசு மாதிரி பள்ளியில் வட்ட அளவிலான விளையாட்டு போட்டி
- 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெறயுள்ளது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல் நிலை பள்ளி வளாகத்தில் வட்ட அளவிலான செஸ், கேரம், வாலிபால், இறகு பந்து போட்டி, கபாடி போட்டி, டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெறயுள்ளது.
இதில் அரசு பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்கின்றனர்.
இப்போட்டி வருகிற செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி ஆய்வாளர் குணசுந்தரி பள்ளி மாணவ, மாணவி களுக்கு இடையே நடைபெறும் செஸ் போட்டியை தொடங்கி வைத்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம் அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைவர் சி.எஸ்.பெரியார்தாசன், தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக துணை தலைவர் ம.அன்பழகன், நகர மன்ற துணை தலைவர் இந்திராபெரியார்தாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விளையாட்டு போட்டியில் நகர மன்ற கவுன்சிலர் புன்னகை கமலசேகரன், பெற்றோர் ஆசிரியர் சங்கம் துணை தலைவர் முகிலன், சங்க இணை செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் சண்முகம், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மதன் குமார் நன்றி கூறினார்.






