என் மலர்
திருப்பத்தூர்
- ரூ.41 லட்சம் வசூல்
- போக்குவரத்து அதிகாரி தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.பி. காளியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.பி.காளியப்பன்
தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.விஜயகுமார் மற்றும் போக்குவரத்து துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, 2,390 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது இதில் 551 வாகனத்திற்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இதன் அபராத தொகையாக ரூ.41,16,800 வசூலிக்கப்பட்டது.
மேலும், 295 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு, இணக்க கட்டணமாக ரூ.35,99,900 நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல், அதிக பாரம் ஏற்றி சென்ற சரக்கு வாகனங்கள் 43, ஆட்டோ 58, பள்ளி வாகனங்கள் 17 சிறப்பு தணிக்கை செய்து சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. தலைக்கவசம் இல்லாத வாகனங் கள், காப்பீடு இல்லாத வாகனங்கள், தகுதி சான்று இல்லாத வாகனங்கள் மற்றும் அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள்
சிறப்பு தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாகன சோதனையில் சிக்கியது
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர். இதனால் காரை ஓட்டி வந்தவர் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து போலீசார் காரை சோதனை செய்த போது, அதில் கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் கிடந்தன. உடனே போலீசார் 1,248 மதுபாக்கெட்டுகள் அடங்கிய அட்டை பெட்டிகளுடன் காரை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேட்டி, சேலை அணிந்து மாலை மாற்றிக் கொண்டனர்
- மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த ஏழரைப்பட்டி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதிகள் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தின்படி வேட்டி, சேலை அணிந்து மாலை மாற்றிக் கொண்டனர்.
அப்போது காதலை வெளிப்படுத்தும் விதமாக மோதிரம் அணிந்து திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
- வழக்குப்பதிவு செய்து விசாரணை
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் காட் டன் சூதாட்டத்தை தடுப்பது சம்பந்தமாகதனிப்படைபோலீசார் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் வாணி யம்பாடி நியூடவுன்-பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றி ருந்தவரை பிடித்து விசாரித்த போது, ஆம்பூரை அடுத்த கம் பிகொல்லை பகுதியை சேர்ந்த தண்டபாணி (வயது 39) என்பதும் காட்டன் சூதாட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
மேலும் புதிய பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபடும்படி ஒருவரை மிரட்டி பணம் பறித்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை வாணியம்பாடி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டபா ணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காட்டன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீதும் அதை ஒருங்கிணைக்கும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- மேம்பால பணிகள் நடந்து வருகிறது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குடியானகுப்பம் ரெயில்வே கேட் பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயில்வே மேம்பால பணியின் பில்லர் அமைக்க வெட்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சேதுக்கரசன் மற்றும் போலீசார் பில்லர் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடந்த வாலிபரை கயிறு கட்டி வெளியே எடுத்தனர் அதன் பிறகு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள அக்ரகாரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் வினோத்குமார் (வயது 29) என்பது தெரியவந்தது.
மேலும் இவர் டிப்ளமோ படித்துவிட்டு வீட்டிலிருந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் திருப்பதி கோயிலுக்கு செல்லவும், இதனால் தனது மோட்டார் சைக்கிளை ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு ரெயில் மூலம் திருப்பதி செல்ல இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் குடியானகுப்பம் ரெயில்வே கேட் பகுதியில் நடைபெற்று வரும் வழியில் ரெயில்வே மேம்பாலப் பணிக்கு பில்லர் அமைப்பதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து விபத்துக்குள்ளாகி படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து வினோத் குமாரின் தந்தை ஜெயராமன் என்பவர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- போலீசார் பேச்சுவார்த்தை
- 120 மாணவர்கள் பி.காம் தேர்வு. எழுதினர்
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் ரெட்டித்தோப்பு பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 120 மாணவர்கள் பி.காம் தேர்வு. எழுதினர். அதில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாககல்லூரி நிர்வாகம் அறிவித்தது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர் கள் 50-க்கும் மேற்பட்டோர் கல்லூரி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் கல்லூரி நிர்வாகத்தின ரிடம் இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறு தியளித்ததன் பேரில் மாணவர்கள் போராட்டத்தைகைவிட்டு கலைந்து சென்றனர்.
- ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது
- செயல்விளக்கம் அளிக்கப்பட்டது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே கத்தாரி பகுதியில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் சுமார் 120 மாணவ-மாணவிகளுக்கு தென்மேற்கு பருவமழை பேரிடர் காலங்களில் நீர் நிலைகளிலும், தீ விபத்து போன்ற சம்பவங்களிலும் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தீயணைப்புத்துறை மாவட்ட துணை இயக்குனர் சரவண குமார் தலைமையில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் மற்றும் தீயணைப்பு குழுவினர் செயல்வி ளக்கம் செய்து காட்டினர்.
தீ விபத்து ஏற்படும் சூழ்நிலையில் எப்படி முன் அப்போது னெச்சரிக்கையாக நடந்து கொள்வது, விபத்தில் சிக்கியவர் களை காப்பாற்றுவது, பாதுகாப்பு உபகரணங்களை கையாள் வது, உயரமான மாடி கட்டிடங்களில் சிக்கிக் கொள்பவர்களையும் நீர்நிலைகளில் மூழ்கியவர்களையும் உபகரணங்களை பயன்படுத்தி காப்பாற்றுவது போன்றவைகளை செயல்விளக் கம் மூலம் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தினர்.
- ரோந்து பணியில் ஈடுபட்டனர்
- 10 பாக்கெட் பறிமுதல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் சேதுக்கரசன் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பார்சம்பேட்டை ரெயில்வே மேம்பாலம் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர் புது ஓட்டல் தெருவை சேர்ந்த விக்னேஸ்வ ரன் (வயது 46) என்பதும், மது மற்றும் சாராயம் விற்றதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 20 மது பாட்டில்கள், 10 பாக்கெட் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- கூடுதல் நிதி உட்பட பல்வேறு சலுகைகள் மத்திய அரசு வழங்கும்
- அனைத்து கோணங்களிலும் ஆராய்வார்கள்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் மத்திய அரசு சுகாதார துறை சார்பில் அரசு தேசிய தரச்சான்றிதழ் வழங்கி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருகிறது.
இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த பட்டியல் மத்திய சுகாதார துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன் பின்னர் தேசிய தரச்சான்றிதழ் மதிப்பீட்டு குழுவினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 அல்லது 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்வார்கள். அப்போது, அங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, வசதிகள், தினசரி நிகழும் பிரச வங்கள் எண்ணிக்கை, வெளி நோயாளிகள் எத்தனை பேர் வரு கின்றனர்.
மருத்துவமனையில் போதுமான செவிலியர்கள் பணியில் உள்ளனரா? உட்பட அனைத்து கோணங்களிலும் அலசி ஆராய்வார்கள்.
பின்னர் இது தொடர்பாக அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் அளிக்கும் மதிப்பெண் அடிப் படையில் தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்படும். இதனால், கூடுதல் நிதி உட்பட பல்வேறு சலுகைகள் மத்திய அரசு வழங்கும்.
இந்நிலையில் கடந்த ஆண்டு திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜமுனாபுதூர், ராம நாயக் நடந்தது.
தேசிய நல கன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதுப் பேட்டை சமுதாய சுகாதார நிலையம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு தேசிய தரச் சான்றிதழ் பெற்றதாக அறிவிப்பு வெளியானது. இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் கலந்துகொண்டு தேசிய தரச் சான்றிதழ்களை பெற்றனர்.
- 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது
வாணியம்பாடி:
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் உமேஸ்வரன் (வயது 30). இவர் நண்பர்களுடன் காரில் நேற்று வாணியம்பாடியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் (24). இவர் கூரியர் வேனை ஓட்டிக்கொண்டு வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் அருகே வந்து கொண்டு இருந்தார்.
அப்போது முன்னாள் உமேஸ்வரன் ஓட்டி சென்ற கார் மீது சஞ்சய் ஓட்டி வந்த வேன் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் கார் சாலை தடுப்பில் மோதி நின்றது. வேன் கவிழ்ந்தது.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் சாலையில் இருந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்தில் காரும், கூரியர் வேனும் முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 120 மாணவர்களில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக புகார்
- போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்
ஆம்பூர்:
திருப்பூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் மஜிருலூம் கல்லூரி இயங்கி வருகிறது.
இங்கு 120 மாணவர்கள் பி.காம் தேர்வு எழுதினர். அதில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கல்லூரி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- 10 பாட்டில்களை பறிமுதல்
- சிறையில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே உள்ள சோலையூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ெரயில்வே குடியிருப்பு பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மது பாட்டில்களை விற்பனை செய்த குமார் (52) என்பவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தன்.
மேலும் குமாரை திருப்பத்தூர் கோர்ட்டி ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.






