என் மலர்
திருப்பத்தூர்
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
- மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில், திருப்பத்தூர் கோட் டத்தை சார்ந்த கொரட்டி, குனிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக் கிறது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் | மாலை 5 மணி வரை கொரட்டி, பச்சூர், தோரணம்பதி, குமாரம்பட்டி, காமாட்சிபட்டி, எலவம்பட்டி, மைக்கா மோடு, சுந்தரம்பள்ளி, தாதகுள்ளனூர், கவுண்டப்பனூர், காக்கங்கரை, பல்லப்பள்ளி, அரவமட்றப்பள்ளி, பெரியகரம், கசிநாயக்கன்பட்டி கண்ணாலம்பட்டி, சு.பள்ளிப்பட்டு. செவ் வாத்தூர், குனிச்சி, எலவம்பட்டி, பஞ்சணம்பட்டி, புதூர் ஆகிய பகுதிகளிலும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்க ளிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.
மேற்கண்ட தகவலை திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொ றியாளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் அருகே தங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவருக்கு
சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சங்கர் ஏலகிரி மலையில் உள்ள புங்கனூர் கிராமத்தில் கடந்த 6 மாதமாக வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சங்கர் வீட்டின் வெளியே படுத்து இருந்தார். நள்ளிரவு இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றார். அப்போது அங்குள்ள தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டார்.
நேற்று காலை சங்கர் இல்லாததால், வீட்டு எதிரே கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்து திருப் பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி சங்கர் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஏலகிரிமலை சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கலெக்டர் வழங்கினார்
- ஷாம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 2023-24-ம் நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர், பவர் டில்லர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தார். உதவி செயற்பொறியாளர் குமரவேல் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் மானிய விலையில் டிராக்டர்களை வழங்கினார். இதில் ஷாம் திட்டத்தின் கீழ் பெண் விவசாயி ஒருவருக்கு மானிய விலையில் டிராக்டர் வழங்கிய கலெக்டர், பெண் விவசாயியை பாராட்டினார்.
- தீயணைப்புதுறையினர் பிடித்தனர்
- வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த கள்ளியூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். சத்தம் கேட்கவே நாகராஜ் கொட்டகைக்கு சென்று பார்த்தார். அப்போது சுமார் 7 அடி நீளமுள்ள நாகப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நாகப்பாம்பை மாட்டு கொட்டகையில் பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர்.
பிடிபட்ட நாகப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு போய் விட்டனர்.
- மனைவி உடலுறவுக்கு மறுத்ததால் தகராறு
- மகன் வெறிச்செயல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம், சு.பள்ளிப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கீழ் குரும்பர் தெருவை சேர்ந்தவர் ஜெயபால்( வயது 42). இவரது மனைவி சிவகாமி (34) , உமேஷ்(20) மகன், சுகன்யா(19) மகள் உள்ளனர். ஜெயபால் கட்டிட மேஸ்திரியாக பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு ஜெயபால் பெங்களூரில் இருந்து தனது வீட்டிற்கு வந்தார். அப்போது ஜெயபால் மனைவியை உடலுறவிற்கு அழைத்துள்ளார். இதற்கு சிவகாமி மறுத்துள்ளார். அப்போது கணவன் - மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஜெயபால், மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கினார்.
இதனை பார்த்த அவரது மகன் உமேஷ், அருகில் இருந்த கட்டையை எடுத்து ஜெயபாலின் தலையின் பின்பக்கம் ஓங்கி அடித்தார். இதில் மயங்கி விழுந்த அவர், சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து உமேஷ் மற்றும் சிவகாமியை படித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 10 லிட்டர் பறிமுதல் செய்தனர்
- போலீசார் சோதனையில் சிக்கினார்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் திரியாலம் பகுதியில் சோதனையில் ஈடு பட்டனர்.
அப்போது வீட்டின் பின்புறத்தில் சாராயத்தை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சின்ன சாமி (வயது 65) என்பவரை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 10 லிட் டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- 15 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என புகார்
- அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 35-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு கடந்த 15 மாதமாக சம்பளம், 4 மாத போனஸ் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அவ்வப்போது துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை வைத்தும் சம்பளம் வழங்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த தூய்மை பணிியாளர்கள் ஜோலார்பேட்டையில் உள்ள அரசு தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் உதவி தொடக்க கல்வி அலுவலர் ரமணனிடம் புகார் தெரிவித்தனர். அதற்கு அவர், இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.
இதனை அடுத்து தூய்மை பணியாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தெரிவித்த போது, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பெற வேண்டும் என கூறியுள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 2 மணி நேரம் போராடி இருவரையும் பிணமாக மீட்டனர்
- கோவிலுக்கு சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்
வாணியம்பாடி:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த மசிகம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன்.இவரது மகன் ஜீவா (வயது 27). ஜனார்த்த னன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 7 பேர், வாணி யம்பாடி அருகே தமிழக-ஆந் திர எல்லையில் புல்லூர் தடுப் பணை பகுதியில் உள்ள கனக நாச்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.
பின்னர் அங்குள்ள தடுப் பணை பகுதியில் குளித்து கொண்டிருந்தனர். அப் போது ஜீவா, அவருடைய உறவினரான எருக்கம்பட்டு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் கல்லூரி மாணவர் மனோகரன் (19) ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் அவர்கள் நீரில் மூழ்கினர். இதனை கண்ட உடன் இருந்தவர்கள் கூச்சலி டவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று அவர் களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்கள் ஆழமான பகுதியில் நீரில் மூழ்கியதால் மீட்க முடியவில்லை.
சுமார் 2 மணி நேரம் போராடி இருவரையும் பிணமாக மீட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குப்பம் போலீசார் பிணத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத் துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.41 லட்சம் வசூல்
- போக்குவரத்து அதிகாரி தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.பி. காளியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.பி.காளியப்பன்
தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.விஜயகுமார் மற்றும் போக்குவரத்து துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, 2,390 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது இதில் 551 வாகனத்திற்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இதன் அபராத தொகையாக ரூ.41,16,800 வசூலிக்கப்பட்டது.
மேலும், 295 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு, இணக்க கட்டணமாக ரூ.35,99,900 நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல், அதிக பாரம் ஏற்றி சென்ற சரக்கு வாகனங்கள் 43, ஆட்டோ 58, பள்ளி வாகனங்கள் 17 சிறப்பு தணிக்கை செய்து சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. தலைக்கவசம் இல்லாத வாகனங் கள், காப்பீடு இல்லாத வாகனங்கள், தகுதி சான்று இல்லாத வாகனங்கள் மற்றும் அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள்
சிறப்பு தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாகன சோதனையில் சிக்கியது
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர். இதனால் காரை ஓட்டி வந்தவர் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து போலீசார் காரை சோதனை செய்த போது, அதில் கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் கிடந்தன. உடனே போலீசார் 1,248 மதுபாக்கெட்டுகள் அடங்கிய அட்டை பெட்டிகளுடன் காரை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேட்டி, சேலை அணிந்து மாலை மாற்றிக் கொண்டனர்
- மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த ஏழரைப்பட்டி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதிகள் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தின்படி வேட்டி, சேலை அணிந்து மாலை மாற்றிக் கொண்டனர்.
அப்போது காதலை வெளிப்படுத்தும் விதமாக மோதிரம் அணிந்து திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
- வழக்குப்பதிவு செய்து விசாரணை
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் காட் டன் சூதாட்டத்தை தடுப்பது சம்பந்தமாகதனிப்படைபோலீசார் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் வாணி யம்பாடி நியூடவுன்-பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றி ருந்தவரை பிடித்து விசாரித்த போது, ஆம்பூரை அடுத்த கம் பிகொல்லை பகுதியை சேர்ந்த தண்டபாணி (வயது 39) என்பதும் காட்டன் சூதாட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
மேலும் புதிய பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபடும்படி ஒருவரை மிரட்டி பணம் பறித்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை வாணியம்பாடி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டபா ணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காட்டன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீதும் அதை ஒருங்கிணைக்கும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.






