search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case registered and investigation"

    • மர்மமான முறையில் இறந்து கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆலங்காயம் ஒன்றியம், துரிஞ்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சக்திவேல் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணம் ஆகி உஷா என்கிற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    இந்நிலையில் சக்திவேல் இன்று காலை நாயக்கனேரி ஊராட்சி காமனூர் தட்டு பகுதியில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு விரைந்த போலீசார் சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணியை முடித்து விட்டு வீட்டுக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் தார்வழிப் பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 67). தனியார் ஷீ கம்பெனியில் காவலாளி. இவர் நேற்று இரவு பணியை முடித்து விட்டு வீட்டுக்கு புறப்படு சென்றார்.

    சாலையை கடக்கும் போது பெங்களூரில் இருந்து சென்னைக்கு கூரியர் பார்சல் லாரி குணசேகரன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசேகரன் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூரியர் பார்சல் லாரி டிரைவர் பெங்களூர் பகுதியை சேர்ந்த ரவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 மணி நேரம் போராடி இருவரையும் பிணமாக மீட்டனர்
    • கோவிலுக்கு சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த மசிகம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன்.இவரது மகன் ஜீவா (வயது 27). ஜனார்த்த னன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 7 பேர், வாணி யம்பாடி அருகே தமிழக-ஆந் திர எல்லையில் புல்லூர் தடுப் பணை பகுதியில் உள்ள கனக நாச்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

    பின்னர் அங்குள்ள தடுப் பணை பகுதியில் குளித்து கொண்டிருந்தனர். அப் போது ஜீவா, அவருடைய உறவினரான எருக்கம்பட்டு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் கல்லூரி மாணவர் மனோகரன் (19) ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர்கள் நீரில் மூழ்கினர். இதனை கண்ட உடன் இருந்தவர்கள் கூச்சலி டவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று அவர் களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்கள் ஆழமான பகுதியில் நீரில் மூழ்கியதால் மீட்க முடியவில்லை.

    சுமார் 2 மணி நேரம் போராடி இருவரையும் பிணமாக மீட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குப்பம் போலீசார் பிணத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத் துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக அம்மாசி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.
    • அம்மாசி தலை, கால்களில் அடிபட்டு மயங்கி கிடந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கட்சிபள்ளி அடுத்த அழகப்பன் பாளையம் பகுதியை சேர்ந்தவர்அம்மாசி (வயது 70). இவர் நேற்று இரவு 9 மணி அளவில் லகுவம்பட்டி அருகே மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியே வந்த ஒரு சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக அம்மாசி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

    இதில் அம்மாசி தலை, கால்களில் அடிபட்டு மயங்கி கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த அம்மாசி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கீழ்ப்பகுதியில் இருந்து உயரமான பகுதிக்கு டிராலி மூலம் எடுத்துச் சென்றபோது அதில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு பக்கெட் மின்சார ஒயரில் மோதியதாக தெரிகிறது.
    • உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கு சிமெண்ட் கலவை கலக்கும் எந்திரத்தின் மூலம் (டிராலி) கட்டிடத்தின் மேல் பகுதிக்கு அனுப்பும் பணியில் சேலம் மாவட்டம், காரிப்பட்டி அருகே உள்ள நாட்டாமங்கலம் அக்ரஹாரத்தைச் சேர்ந்த சசி கண்ணன் (வயது 39) என்பவர் ஈடுபட்டிருந்தார்.

    சிமெண்ட் கலவை கீழ்ப்பகுதியில் இருந்து உயரமான பகுதிக்கு டிராலி மூலம் எடுத்துச் சென்றபோது அதில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு பக்கெட் மின்சார ஒயரில் மோதியதாக தெரிகிறது. இதில் பாய்ந்த மின்சாரம் சசிகண்ணன் மீதும் பாய்ந்தது. உடனடியாக அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது ஏற்கனவே சசி கண்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மின்சாரம் தாக்கி இறந்த சசிகண்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. சசிகண்ணனுக்கு தீபா என்ற மனைவியும், 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். இது பற்றி மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×