என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி"

    • மனித உரிமைகள் தின உறுதிமொழிஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • அனைத்து அரசு துறை அலுவலர்களும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மனித உரிமைகள் தினத்தையொட்டி மாவட்டவருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருமான வந்தனாகார்க் ஆகியோர் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழிஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அனைத்து அரசு துறை அலுவலர்களும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன் தாட்கோ மேலாளர் யுவராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜகோபால், மாவட்ட கலெக்டர் அலுவலகமேலாளர் (நீதியியல்) வெங்கடேசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அனைவரும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அனைவரும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, நில அளவை பிரிவு உதவி இயக்குனர் சேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை
    • போலீசார் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் 'நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.

    மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் உறுதியளிக்கிறேன்" என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    நிகழ்ச்சியின் போது சப் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சேதுக்கரசன் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள மக்கள் பல்வேறு சமயங்களை தமது முன்னோர்களின் வழியாக பின்பற்று கின்றனர்.
    • நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்குமே மத சுதந்திரம் உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி போலுப் பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாதி, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இதற்கு கல்லூரி வணிக கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் ஜெகன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.

    அவர் பேசும் போது, மனிதனை நல்வழிப்படுத்தி சரியான பாதையில் வாழ செய்வதற்கு உருவாக்கப் பட்ட மதங்கள், இன்று மனிதனை அடிமையாக்கி கொண்டி ருக்கிறது.

    ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள மக்கள் பல்வேறு சமயங்களை தமது முன்னோர்களின் வழியாக பின்பற்று கின்றனர்.

    நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்குமே மத சுதந்திரம் உள்ளது. இந்து மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம், யூத மதம் மற்றும் பவுத்த மதம் போன்றவை உள்ளது.

    எந்த மதமும், கடவுளும் யாரையும் துன்புறுத்த சொல்லவில்லை. இந்து சமயத்தில் அன்பே சிவம் என்று பகவத் கீதை சொல்கிறது. அனைத்து உயிர்களிடத்தும் அன்பா கவும், இல்லாதவர்களுக்கு தேவையானவையை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது. உன்னை எப்படி நேசிக்கிறாயோ அதே போல் மற்றவரையும் நேசிக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார். அன்பையும், அமைதியையும் போற்றி வாழ வேண்டும் என்று பவுத்த மதம் கூறுகிறது.

    மனிதத்தை காத்து வாழ வேண்டும் என்று இஸ்லாமிய மதம் கூறுகிறது. மதங்கள் அனைத்தும் மனிதனை நல்வழிப்படுத்தவே தோன்றின. அனைத்து மதங்களும் ஒற்றுமையையும் அன்பையும் போதிக்கின்றன என கூறினார்.

    இந்த விழாவில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் அலுவலர்கள் ஸ்டீபன் விக்டர் ஆண்டனி, சரவண குமார் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். முடிவில் பேரா சிரியர் தனசீலன் நன்றி கூறினார். 

    • உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • டி.என்.பி.எல்.நிறுவனத்தில் நடைபெற்றது

    கரூர் :

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், உலக புகையிலை ஒழிப்பு தினம் உறுதிமொழி நிகழ்ச்சி தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனவளாகத்தில் அமைந்துள்ள கால அலுவலகத்தில் நடைபெற்றது.

    உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் பொது மேலாளர் சுரேஷ்(மனிதவளம்), துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் (பாதுகாப்பு), உதவி பொது மேலாளர் சரவணன் (எலக்ட்ரிக்கல்), முதுநிலை மேலாளர் சிவக்குமார் (மனிதவளம்), துணை மேலாளர்கள் சங்கர்,

    வெங்கடேஷன் (மனிதவளம்) ஆகியோர் தலைமையில் தமிழ்நாடுசெய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியை சமூக இடைவெளியை கடை பிடித்து எடுத்துக்கொண்டனர்.


    ×