என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • பட்ட பகலில் கதவை உடைத்து துணிகரம்
    • ரோந்து பணியில் சிக்கினார்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீசார் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் மகள் நந்தினி (வயது 31). இவர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ மற்றும் கபோர்டை உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 9 பவுன் நகை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, குற்றப்பிரிவு போலீசார் விஜயரங்கன், சவுந்தர பாண்டியன் உள்ளிட்டோர் நேற்று அண்ணான்டப்பட்டி கூட்டு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    வாலிபரை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    அவர் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் அருகே உள்ள வ.உ.சி.தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 30) என்பதும், இவர் போலீஸ் குடியிருப்பில் புகுந்து நந்தினி வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

    மேலும் இவர் மீது சேலம், திருப்பூர், தருமபுரி, கோவை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

    கார்த்திகேயனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து, 9 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.





    ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    பொதுமக்கள் புகார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் முக்கிய சாலை கச்சேரி தெரு இங்கு வியாபார நிறுவனங்கள் மருத்துவமனைகள் அரசு பள்ளி மற்றும் கோவில்கள் உள்ளன.

    இந்த தெருவில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை காரணம் தெருவிளக்கு சுவிட்ச் ஆன் செய்த ஆப் செய்யும் ஆபரேட்டர்கள் வருவதில்லை ஒப்பந்தம் எடுத்த நகராட்சி ஒப்பந்ததாரர் இது பற்றி கவலைப்படுவதில்லை.

    இதனால் தெருக்களில் விபத்து மற்றும் திருட்டு அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது.

    நகராட்சி நிர்வாகம் உடனடியாக தெருவிளக்குகளை ஆன் செய்யும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை எரிய செய்ய வேண்டும்.

    • வாலிபர் படுகாயம்

    ஜோலார்பேட்டை:

    சென்னை அருகே கேளம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் மகன் தீபக் (வயது 21). இவர் ஏலகிரி மலையில் நடைபெறும் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பைக்கில் சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்கு வந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு தனது பைக்கில் சென்னை நோக்கி புறப்பட்டார் அப்போது ஏலகிரி மலை 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது நிலை தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதி வலது கால் முறிவு ஏற்பட்டது.

    உடனடியாக அங்கிருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது சம்பந்தமாக தீபக் கொடுத்த புகாரின் பேரில் ஏலகிரி மலை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் மயில்வாகனம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பின்னால் வந்த பைக் மோதியது
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை ஜெய மாதா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சக்தி வேல் (வயது 15). அதேப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது உறவினர் மகள் யோகேஸ் வரி (15). இவர்களது நண்பர்கள் நிசாந்த் (14), அஸ்வினி (14).

    இவர்கள் நான்கு பேரும் சம்பவத்தன்று பார்சம்பேட்டை கடைத்தெரு வழியாக சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தனர். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் நடந்து சென்று கொண்டிருந்த 4 பேர் மீதும் மோதி படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை அங்கிருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக திருப் பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • நாளை தொடங்குகிறது
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 6,553 இடைநிலை ஆசிரியர் பணிக்கும், 3,587 பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் நடப்பு ஆண்டில் தேர்வு நடத்தப்படவுள்ளது. இரு தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் ஆகிய பாடங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால், இத்தேர்விற்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளை அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும். மையங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங் களில் நடத்துவதற்கு அறிவுரை பெறப்பட்டுள்ளது.

    'டெட்' பேப்பர் -1 மற்றும் 2 ஆகியவற்றுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை (திங்கட்கிழமை) திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல் அறிய வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மற்றும் உதவியாளரை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இப்ப யிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • ரெயில் பெட்டியில் புகை வந்ததால் அச்சம்
    • அதிகாரிகள் பயணிகளிடம் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரை தினசரி சொர்ணா பேசஞ்சர் ரெயில் இரு மார்க்கத்திலும் இயக்கப்படுகிறது. அதன்படி வழக்கம்போல் நேற்று மாலை 5.30 மணியளவில் கர்நாடகா மாநிலம், பெங்களூர் ரெயில் நிலையத்தில் இருந்து சொர்ணா பேசஞ்சர் ரெயில் புறப்பட்டது.

    பங்காரப்பேட்டை, குப்பம் மற்றும் பச்சூர் வழியாக ஜோலார்பேட்டை நோக்கி பக்கிரிதக்கா அருகே நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் சென்றது. அப்போது ரெயில் எஞ்சின் பின்புறம் உள்ள 3-வது பயணிகள் பெட்டியில் திடிரென புகை வந்தது.

    இதனை பார்த்து அதிசடைந்த பயணிகள் கூச்சலிட்டபடி ரெயிலை நிறுத்த அபாய சங்கலியை பிடித்து இழுத்தனர்.

    அதற்குள் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய பிளாட்பாரம் உள்ளே நுழைந்ததால் டிரைவர் மீனா ரெயிலை பிளாட்பாரத்தில் நிறுத்திவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் அதிகாரிகள் விரைந்து சென்று பயணிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் ரெயில் பெட்டிகள், என்ஜின் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். புகை ஏதும் வராததால் இன்று 4.30 மணியளவில் மீண்டும் ஜோலார்பேட்டையில் இருந்து பெங்களூர் நோக்கி சொர்ணா பேசஞ்சர் ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
    • போலீசார் சோதனையில் சிக்கினார்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி பக்கிரித்தக்கா பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் அரசு டாஸ்மாக் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெட்டிக்கடையில் சோதனையிட்டனர். அப்போது விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அதே பகுதியை சேர்ந்த அனுமுத்து என்பவர் என் மனைவி பவுனம்மாள் (வயது 71) என்பவரை போலீசார் செய்தனர்.

    • 9 மற்றும் 10-ந் தேதி நடைபெறும் மண்டல அளவிலான போட்டி நடக்கிறது
    • இறுதி கட்ட போட்டித் தேர்வு 23-ந் தேதி நடைபெறுகிறது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா ஈஷா புத்துணர்வு கோப்பை முதல் கட்ட போட்டிகள் நேற்று நடைபெற்றது.

    இதில் மாவட்ட முழுவதும் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு முதல் கட்ட கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்களுக்கான கைப்பந்து போட்டி அணியினர் போட்டியில் பங்கேற்றனர்.

    இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10-ந் தேதி நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.

    மேலும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு இறுதி கட்ட போட்டித் தேர்வு கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் ஆதியோகி முன்பு சத்குருவும் விருந்தினர்கள் முன்னிலையில் செப்டம்பர் 23-ந் தேதி நடைபெற உள்ளது.

    • போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை
    • போலீசார் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் 'நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.

    மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் உறுதியளிக்கிறேன்" என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    நிகழ்ச்சியின் போது சப் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சேதுக்கரசன் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கூடம் நகரம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ரகு. இவரது மகன் சாகர் (வயது 24).

    இவர் வளத்தூர்-குடியாத்தம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்கும் போது ஜோலார் பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே உள்ள கொயாக்காமேடு பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர், வீட்டின் அருகே உள்ள மாந்தோப்பில் நேற்று செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

    அப்போது விவசாய நிலத்தில் 8 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தடியில் ஊர்ந்து சென்ற சுமார் 8 அடி நீளமுள்ள மலைப் பாம்பை பிடித்து, திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த பாம்பை அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.

    • பிளஸ்-1 படித்து வருகின்றனர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை: 

    ஜோலார்பேட்டை அடுத்த பார்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றனர்.

    கடந்த 13-ந் தேதி தனது நண்பர்களான யோகேஸ்வரி (15), அஸ்வினி (15), நிஷாந்த் (15) ஆகியோருடன் நடந்து சென்றார்.

    அப்போது பின்னால் பைக் இவர்கள் மீது மோதியது. மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×