என் மலர்
திருப்பத்தூர்
- குடும்ப தகராரில் விபரீதம்
- ஜெயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த அண்ணான்ட ப்பட்டி ஹயாத் நகர் பகுதியை சேர்ந்தவர் பங்காரு (வயது 55). இவர் தன்னுடைய மகள் சூரிய கலாவை திருப்பத்தூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (38) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் சூரியகலா தனது தந்தையுடன் வசித்து கொண்டு திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் தனியார் பள்ளி வளாகம் எதிரில் பழ கடை வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 20-ந் தேதி சூரிய கலா பழ கடையில் இருந்து போது கணவர் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
பங்காரு இதனை தட்டிக்கேட்டுள்ளார், மருமகன் வெங்கடேசன் ஆத்திரமடைந்து கடையில் இருந்து கத்தியை எடுத்து மாமனாரை தாக்கிய கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால் படுகாயம் அடைந்த பங்காருவை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக பங்காரு கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வெங்கடேசனை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த மருத்துவர்காலணி பகுதியில் பத்மநாபன்(வயது 35) என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு பக்கத்தில் வேலு என்பவருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது.
இரும்பு கடையின் பழைய பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகளை அந்த காலி இடத்தில் கொட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த தீ மளமளவென பரவி பிளாஸ்டிக், ரப்பர், ரெக்சின் உள்ளிட்ட கழிவுகள் கொழுந்து விட்டு எறிந்தது.
உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீயால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி பட்டனர்.
இந்த சம்பவம் குறித்தும் வாணியம்பாடி டவுன் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனத்துறையினர் ரோந்து பணியில் சிக்கினர்
- 4 கொம்புகள் மற்றும் அறிவாள் பறிமுதல்
ஆம்பூர்:
திருப்த்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா குளிதிகை பகுதியில் ஆம்பூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டுப் பகுதியில் சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சுந்தரேசன் (வயது 44) என்பதும் அவர் வைத்திருந்த பையில் 4 மான் கொம்புகள் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 4 மான் கொம்புகள் மற்றும் அறிவாளை பறிமுதல் செய்தனர்.
- ரூ.27,500 அபராதம் விதிப்பு
- அதிகாரிகள் நடவடிக்கை
ஆலங்கயாம்:
வாணியம்பாடியில் மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சதிஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று கடைகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆற்றுமேடு பகுதியில் உள்ள 2 கடைகளில் பிளாஸ்டிக் தட்டுகள் உள்ளிட்டவை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 112 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு ரூ.27,500 அபராதம் விதித்தனர்.
மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ கடையின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
சுற்றுச்சூழல் பாதுபாப்பு சட்டத்தின்படி கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று அதிகாரிகள் கடையின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த சோதனையின்போது நகராட்சி துப்புறவு ஆய்வாளர் செந்தில்குமார், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை காதலித்து வருகிறார்.
- சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்.
வாணியம்பாடி:
தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). கடந்த 2021-ம் ஆண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தார்.
கடந்த 7 மாதமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை காதலித்து வருகிறார்.
இவர்களது காதலுக்கு ராஜ்குமாரின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு ராஜ்குமார் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார்.
அப்போது இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் பணியில் இருந்தனர். வழக்கு சம்பந்தமாக அனைவருமே வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு அவரது காதலியான பெண் சப்-இன்ஸ்பெக்டர் போன் செய்தார். ராஜ்குமார் போலீஸ் நிலையத்திற்கு வெளியே சென்று வீடியோ கால் மூலமாக போனில் பேசினார். நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டே இருந்தார்.
திடீரென அவருக்கும் போனில் பேசிய காதலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ராஜ்குமார் ஆவேசமடைந்தார். போனில் கோபமாக பேசியபடி போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்தார்.
அவரது இருக்கை அமைந்துள்ள சப்-இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்று கதவை வேகமாக பூட்டினார். ஆவேசமாக பேசி சென்றதால் பயந்து போன அவரது காதலியான பெண் சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்திற்கு போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சென்று அறை கதவை திறக்கும்படி வெளியில் இருந்து கூறினர்.
ஆனால் உள்ளே இருந்த ராஜ்குமார் ஒரு நீளமான துண்டை எடுத்து மின்விசிறியில் கட்டி தனது கழுத்தில் மாட்டினார்.
அவர் நீண்ட நேரமாக கதவை திறக்காதால் போலீசார் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
மின்விசிறியில் தூக்கில் தொங்க முயன்ற ராஜ்குமாரை மீட்டனர். மேலும் இது குறித்து டி.எஸ்.பி. விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்.
மேலும் ஒரு மணி நேரம் ராஜ்குமாருக்கு போலீசார் தற்கொலை செய்யக்கூடாது என்பது குறித்து கவுன்சிலிங் அளித்தனர்.
காதல் தகராறில் ராஜ்குமார் தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. தற்கொலைக்கு முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டார்.
இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர் அவர்களிடம் நேரடியாக ஒப்படைக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 10 நாட்கள் தங்கி இருந்து கண்காணிக்க திட்டம்
- சாதி மோதல்கள் ஏற்படக்கூடிய இடங்கள் உள்ளதா? என சோதனை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பதட்டமான அல்லது சாதி மோதல் பிரச்சனையாக உள்ள பகுதிகள் உள்ளனவா என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோரிடம் மத்திய அதிவிரைவு படை கமாண்டர் சீனிவாசன் தலைமையில் 10 கமாண்டோ வீரர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தில் எந்தந்த பகுதிகளில் தொடர்ந்து பிரச்சனைகள் உள்ளனவா? சாதி மோதல்கள் ஏற்படக்கூடிய இடங்கள் உள்ளதா? குற்றங்கள் தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 நாட்கள் தங்கி இருந்து கண்கா ணிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- பாம்பை காப்பு காட்டில் கொண்டுபோய் விட்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் கிராமத்தில் வசிப்பவர் ராஜேஸ்வரி. இவரது வீட்டில் நேற்று திடீரென நல்ல பாம்பு நுழைந்தது.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு பிடித்தனர்.
அதனை திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் பாம்பை கொண்டு போய் விட்டனர்.
- ஊர் நல்லா இருக்க திருடினோம் என்று வாக்குமூலம்
- கிராம மக்கள் துரத்திச் சென்று பிடித்தனர்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த தீர்த்தமலையில் விநாயகர், முருகன், சிவன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.
அப்பகுதி மக்கள் இந்த கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று அதிகாலை கார் ஒன்று விநாயகர் கோவிலுக்கு வந்தது. அதில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர்.
அப்போது திடீரென மர்ம கும்பல் கோவிலில் இருந்த விநாயகர் சிலையை காரில் கடத்தி சென்றனர்.
இதனை கண்ட சிலர் கூச்சலிட்டனர். தகவல் அறிந்து பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கோவிலில் விநாயகர் சிலையை தூக்கி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
காரை கிராம மக்கள் துரத்திச் சென்றனர். கொள்ளையர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.இதனையடுத்து 4 பேர் கொண்ட கும்பலை ஆலங்காயம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில் அணைக்கட்டு அடுத்த மருதவல்லிபாளையம் கத்தாரை கொல்லையை சேர்ந்த ஏழுமலை (வயது30), ஒடுகத்தூர் அடுத்த வண்ணான்தாங்கலை சேர்ந்த பிரகாசம் (50), அணைக்கட்டு அடுத்து பாளையத்தை சேர்ந்த செல்வம் (32), புத்தூரை சேர்ந்த சுரேஷ் (32) என்பது தெரிய வந்தது.
மேலும் விநாயகர் சிலையை திருடிக் கொண்டு வந்து கோவிலில் வைத்தால் எங்கள் ஊருக்கு நல்லது நடக்கும் என்று விநாயகர் சிலையை தூக்கி வந்தோம் என்று கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆலங்காயம் போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வேலை முடிந்து வீடு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23). இவர் கட்டிட தொழில் வேலை செய்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் கட்டிட வேலைக்கு கார்த்திக் சென்றார். வேலை முடிந்து மாலை பைக்கில் வீடு திரும்பினார்.
அப்போது ஆத்தூர்குப்பம் அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விரமாக பைக் மோதியது. இதில் கார்த்திக் பலத்த காயம் அடைந்தார்.
அங்கிருந்து பொது மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாட்ட றம்பள்ளி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீரர்கள் தீயை அணைத்தனர்
- அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே சண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுரி. இவரது வீட்டின் அருகில் உள்ள ஓடையில் வளரும் நாணல் செடிகள் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனை கண்ட கவுரி உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஞான ஒளிவு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
உடனடியாக தகவல் தெரிவித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- தீயணைப்புத் துறையினர் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
வாணியம்பாடி நியூ டவுன் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வணிக வளாகத்தில் சாதிக் (வயது 47) என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையை சுற்றிலும் உள்ள நிலத்தில் கோரை புல் புதர்கள் முளைத்து அது முழுவதும் காய்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென புதரில் தீ பிடித்து பட்டாசு கடையை சுற்றியுள்ள புல் மள மளவென எரிய தொடங்கி கடை அருகே தீ எரிந்துள்ளது.
இதை பார்த்த பட்டாசு கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வெளியே இருந்த பட்டாசுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி உடனடியாக வாணியம்பாடி தீயணைப்புத்து றையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடையை சுற்றிலும் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து தீ கடையில் பரவாமல் கட்டுப்படுத்தினர்.
இந்த தீ காரணமாக அந்த பகுதியில் இருந்த மின்கம்பங்களில் இருந்த மின்சார ஒயர்கள் தென்னை மரங்கள் அனைத்தும் முற்றிலும் தீயில் கருகி நாசமாகின.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாதுர்யமாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதை குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
- சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த தீர்த்தமலையில் விநாயகர், முருகன், சிவன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.
அப்பகுதி மக்கள் இந்த கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று அதிகாலை கார் ஒன்று விநாயகர் கோவிலுக்கு வந்தது. அதில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர்.
அப்போது திடீரென மர்ம கும்பல் கோவிலில் இருந்த விநாயகர் சிலையை காரில் கடத்தி சென்றனர்.
இதனை கண்ட சிலர் கூச்சலிட்டனர். தகவல் அறிந்து பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கோவிலில் விநாயகர் சிலையை தூக்கி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
காரை கிராம மக்கள் துரத்திச் சென்றனர். கொள்ளையர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இதனையடுத்து 4 பேர் கொண்ட கும்பலை ஆலங்காயம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில் அணைக்கட்டு அடுத்த மருதவல்லிபாளையம் கத்தாரை கொல்லையை சேர்ந்த ஏழுமலை (வயது30), ஒடுகத்தூர் அடுத்த வண்ணான்தாங்கலை சேர்ந்த பிரகாசம் (50), அணைக்கட்டு அடுத்து பாளையத்தை சேர்ந்த செல்வம் (32), புத்தூரை சேர்ந்த சுரேஷ் (32) என்பது தெரிய வந்தது.
மேலும் விநாயகர் சிலையை திருடிக் கொண்டு வந்து கோவிலில் வைத்தால் எங்கள் ஊருக்கு நல்லது நடக்கும் என்று விநாயகர் சிலையை தூக்கி வந்தோம் என்று கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆலங்காயம் போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






