வீட்டிற்கு நுழைந்த நல்ல பாம்பு மீட்பு

வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் பாம்பை காப்பு காட்டில் கொண்டுபோய் விட்டனர்
வீட்டிற்கு நுழைந்த நல்ல பாம்பு மீட்பு
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் கிராமத்தில் வசிப்பவர் ராஜேஸ்வரி. இவரது வீட்டில் நேற்று திடீரென நல்ல பாம்பு நுழைந்தது.

இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு பிடித்தனர்.

அதனை திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் பாம்பை கொண்டு போய் விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com