என் மலர்
திருப்பத்தூர்
- 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது, பின்னால் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பின்னால் சென்ற லாரியின் டிரைவர் ஆரணி இரும்பேடு பகுதியை சேர்ந்த முனிசாமி (வயது 55) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் லாரியில் சிக்கியிருந்து டிரைவரின் உடலை போராடி மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சாலை விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயி கைது
- ஜெயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த அடியத்தூர், தாயப்பன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சாமுடி மகன் ராகுல் (வயது 22).
கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த மையா என்கிற மகேந்திரன் (61) என்பவர் விவசாய நிலத்தில் உள்ள பம்ப் செட் டிரான்ஸ்பார்மரில் பழுதைசரிசெய்தபோது மின்சாரம் தாக்கி பலியானார்.
இதைக் கண்ட மகேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆத்திரமடைந்த ராகுலின் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு மகேந்திரன் வீட்டில் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.
இது குறித்து ராகுலின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்த னர். அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- சிகிச்சை அளிக்க சென்ற டாக்டர்கள் பெண் மற்றும் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- மன உளைச்சலில் இருந்த பெண், குழந்தை பிறந்ததும் அதனை கே.ஜி.எப். எடுத்து சென்று விற்பனை செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.
ஆம்பூர்:
குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயது பெண். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் தனது அக்கா வீட்டில் தங்கி வந்தார்.
அப்போது பெண்ணுக்கும், அவரது அக்கா கணவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு பழகி வந்தனர்.
இதில் கர்ப்பமான பெண்ணை அவரது உறவினர்கள் கடந்த 23-ந்தேதி பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு நேற்று முன்தினம் இரவு பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை மற்றும் அவரது தாய் நேற்று காலை திடீரென அங்கிருந்து மாயமாகி விட்டனர்.
சிகிச்சை அளிக்க சென்ற டாக்டர்கள் பெண் மற்றும் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து டாக்டர்கள் உமராபாத் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் பெண்ணின் செல்போன் எண் சிக்னலை வைத்து தேடினர்.
பெண் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் கே.ஜி.எப். விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்கு குழந்தையின் தாய் குழந்தையை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு, பெண் மற்றும் அவரது உறவினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
ஆஸ்பத்திரியிலிருந்து குழந்தை மற்றும் அவரது தாய் திடீரென காணாமல் போனதால் அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கினோம்.
பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து பெண் ஆம்பூர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி வந்தார்.
அக்காவின் கணவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் கர்ப்பமானார். பெண்ணை அவரது உறவினர்கள் கேலி கிண்டல் செய்வார்கள் என பயந்தனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த பெண், குழந்தை பிறந்ததும் அதனை கே.ஜி.எப். எடுத்து சென்று விற்பனை செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.
இதுகுறித்து பெண், அவரது உறவினர்களிடம் என் அண்ணனுக்கு பயந்து நான் குழந்தையை வேறொரு நபரிடம் கொடுத்துள்ளேன் எனக்கூறி நாடகமாடி உள்ளார்.
பெண்ணிடம் தொடர்ந்து விசாரித்ததில் குழந்தையை விற்பனை செய்தது தெரிய வந்தது. குழந்தையை மீட்டு அவரிடம் ஒப்படைத்ததோடு அறிவுரைகள் வழங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- போலீசில் புகார்
- கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே மிட்டாளம் பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஒருவர் சிகிச்சை அளிப்பதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் உமராபாத் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் விசா ரணை நடத்தினர்.
அப்போது மருத்துவ படிப்புமுடிக் காமல் கிளினிக் வைத்து பொதுமக்க ளுக்கு மருத்துவம் பார்த்த வாணியம் பாடியை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தனர்
- கடைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வ லர்கள் புகார் அளித்து வந்தனர்.
அதன்பேரில் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் வெ.கோபாலகிருஷ்ணன் தலைமையில், திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு,துப்புரவு ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் திருப் பத்தூர் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள கடைகளில் சுமார் 95 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் வெ.கோபாலகிருஷ் ணன் கூறுகையில் மாவட்டம் முழுவதும் இச்சோதனை தொடர்ந்து நடைபெறும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது.
மீண்டும் இதுபோன்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, வழக்கு பதியப்படும் என்றார்.
- வருகிற 3-ந் தேதி நடக்கிறது
- நுழைவு கட்டணம் ரூ.50 செலுத்தி முன் பதிவு செய்ய வேண்டும்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாநில அளவிலான தடகளப் போட்டியில் திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வருகின்ற செப்டம்பர் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டி நடைபெற உள்ளது.
இதில் 14,16,18 மற்றும் 20 ஆகிய வயது உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஆன தடகள போட்டிகள் நடைபெறும்
இப்போட்டிகளில் வெற்றி பெறற்றவர்கள் நாமக்கல் மாவட்டதில் செப்டம்பர் 14,15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
எனவே கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பின் வரும் கைபேசி எண்களில் தொடர்பு கொள்ள கைபேசி எண்கள் 9443966011,9443429456, இமெயில் tdaatirupatturdt@gmail.com பங்கேற்கும் வீரர்கள் நுழைவு கட்டணம் ரூ.50 செலுத்தி முன் பதிவு செய்ய வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
- வருவாய் துறை அதிகாரிகள் அகற்றினர்
- அரசு புறம்போக்கு இடம் என்பது உறுதியானது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பணந்தோப்பில் வசிப்பவர் தேவேந்திரன் (வயது 44) இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று பணந்தோப்பு புறம்போக்கில் சிமெண்டு சீட் கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தாசில்தார் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி உத்தரவிட்டார் இதனையடுத்து நாட்டறம்பள்ளி வருவாய் அலுவலர் வனிதா தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த இடம் அரசு புறம்போக்கு இடம் என்பது உறுதியானது இதனையடுத்து வருவாய் துறையினர் சிமெண்டு கொட்டகை அமைத்திருந்ததை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மின்சாரத்துறை அதிகாரிகள் உத்தரவு
- கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியதால் நடவடிக்கை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலை கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல் நேரடியாக அருகில் இருந்த நிலத்தில் விடுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து கழிவு நீரை நிலத்தில் வெளியேற்றிய தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டிக்க மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் அதிரடி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து மின்சாரத்துறை அதிகாரிகள் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
- சம்பள நிலுவை தொகை, போனஸ் வழங்காததை கண்டித்து நடந்தது
- 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்
ஆம்பூர்:
ஆம்பூரை அடுத்த விண்ண மங்கலம் பகுதியில் தனியார் ஷூ தொழிற்சாலை செயல் பட்டு வருகிறது. இதில் 500- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சம்பளம், நிலுவை தொகை, போனஸ் உள்ளிட் டவை வழங்காததை கண் டித்து 100-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உள் ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.
சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களிடம் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- 1 டன் சிக்கியது
- வருவாய் துறையினருடன் சோதனை செய்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியை அடுத்த ஜெயந்திபுரம் அருகே வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக அப்பகுதியில் உள்ள முட்புதரில் ரேசன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாருக்கு தகவல் கிடைத்தது.
அதைதொடர்ந்து அவர் வட்ட வழங்கல் அலுவலர் ராமன் மற்றும் வருவாய் துறையினருடன் சென்று சோதனை செய்தார்.
அப்போது அரசனப்பள்ளி கிராமத்தில் முட்புதரில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேசன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேசன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்
- பெற்றோர்களை வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த நாயன அத்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் இவருடைய மகன் சரத் (வயது 23) இவர் வேலூரில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
ஜவ்வாது மலை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகள் பூஜா (20) இவர் வேலூரில் நர்சிங் முடித்துவிட்டு அங்கேயே தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் சரத்தின் வீட்டிற்கு பூஜா வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று கிருஷ்ணகிரியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
போலீசார் இருவரின் பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடிகளை அனுப்பி வைத்தனர்.
- முன்னால் சென்று கொண்டிருந்தது திடீரென பின்னோக்கி வந்தது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி அருகே மதனாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பவுல்ஸ்.
இவரது மகன் கனகராஜ் (வயது 16). இவர் இன்று காலை கிருஷ்ணகிரி-வாணிய ம்பாடி நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே பங்களாமேடு சர்வீஸ் சாலையில் பைக்கில் சென்றார்.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் திடீரென பின்னோக்கி வந்தது.
இதனை கனகராஜ் கவனிக்காததால் பைக் மீது டிராக்டர் மோதி அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகராஜ் இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பேலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






