என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • வேளாண் இணை இயக்குனர் வலியுறுத்தல்
    • உரத்தின் செலவை குறைக்க நடவடிக்கை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட வேளாண் இணை இயக்கு னர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் மண் வளம் இணையதளம் என்ற இணையத ளத்தை விவசாயிகள் அறிந்து கொள்வதன் மூலம் தங்கள் விவசாய மண்ணின் வளத் தினை அறிந்து, தேவையான உரத்தினை மட்டும் பயிருக்கு அளித்து உரங்களின் செல வினை குறைக்கலாம்.

    http://tnagriculture.in/ mannvalam எனும் இணைய முகப்பில் விவசாயிகள் தங் கள் மாவட்டம், வட்டாரம், கிராமம், தங்களது நிலத்தின் புலஎண், உட்பிரிவுஎண்ணை பதிவு செய்தால் உடனடியாக மண்வளம் குறித்த அனைத்து விபரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மண் வளம் அட்டையாக மின்னணு வடி வில் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாலிபர் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் எஸ்.கே.ரோட்டில் உள்ள ஓட்டலில் முன்விரோத சண்டை காரணமாக நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த வில்வநாதன் மனைவி வசந்தம்மாள் (வயது 62).

    அவரது மகன் மோகன் (35) ஆகிய 2 பேரையும் சாய்பாபா கோவில் தெருவைச் சேர்ந்த துளசி மகன் கார்த்திக் வயது (24) கூலி தொழிலாளி என்பவர் சரமாரியாக தாக்கியதில் தாய் மகன் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • நகர மன்ற தலைவர் பார்வையிட்டு ஆய்வு
    • ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் நடைபெறுகிறது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. வார்டு பகுதிக்குட்பட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நகராட்சிக்குட்பட்ட போலீஸ் நிலைய ரோடு சாலையானது நகராட்சியின் பல்வேறு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய பிரதான சாலையாக இருந்து வருகிறது.

    நகராட்சி நிர்வாகத்தின் மூலம் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைகளின் இருபுறமும் கால்வாய் மற்றும் குடிநீர் இணைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி நடைபெற்று, அதன் பிறகு சாலை முழுவதும் பெயர்த்து எடுக்கப்பட்டு ஜல்லி கற்கள் பரப்பும் பணி நடைபெற்று வந்தது.

    மேலும் அந்தப் பணியும் நிறைவுற்று நேற்று போலீஸ் நிலைய ரோடு சாலைக்கு தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதனை நகர மன்ற தலைவர் எம். காவியா விக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து சாலையின் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் ஜி. பழனி, பொறியாளர் பி. சங்கர், நகர செயலாளர் அன்பழகன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி. எஸ். பெரியார் தாசன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • 12 பாட்டில்களை பறிமுதல்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் மாதனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் போலி மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி ஆம்பூர் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருளானந்தம் மற்றும் போலீசார் மாதனூர், பெரியாங்குப்பம், சுபேதர் தெரு, தோட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சுபேதர் தெருவை சேர்ந்த கண்ணப்பன் மனைவி ராதிகா (வயது 36) என்பவர் போலி மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்ததுடன், அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • தந்தை போலீசில் புகார்
    • போலீசார் தேடி வருகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சின்ன பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜி இவரது மகன் சிவா (வயது 37) இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 22-ந் தேதி சிவா வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து ராஜி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிவாவை தேடி வருகின்றனர்.

    • தெருவிளக்குகள் எரியாததால் ஆத்திரம்
    • நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு பகுதியில் கச்சேரி தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ளது. இங்கு பள்ளிகள், வணிக வளாகங்கள் மற்றும் அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ளன. கடந்த 15 நாட்களுக்கு மேலாக தெரு விளக்குகள் எரியாமல் உள்ளதால் இந்த பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது.

    இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாடுவதற்கு பயப்படுகின்றனர். இது குறித்து பலமுறை நகராட்சி அலுவல கத்திற்கு புகார் தெரிவித்தும் மின்விளக்கு எரிவதற்கு நடவ டிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று இரவு நகராட்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகரமன்ற உறுப்பினர் சுபாஷ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • புகார் அளித்த பெண்கள் மற்றும் அவர்களின் கணவர்களை நேரில் அழைத்து ஆலோசனை

    திருப்பத்தூர்:

    பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் இமை கள் திட்டத்தின் பகுதியாக குடும்ப வன்முறையால் பாதிக் கப்பட்ட பெண்களுக்கும் மற்றும் அவர்களின் கணவர்களுக் கும் ஆலோசனை வழங்கும் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் இந்த மாதம் முழுவதும் குடும்ப பிரச்சினை காரணமாக 100, 1098 உதவி எண்ணில் புகார் அளித்த 20 பெண்கள் மற்றும் அவர்களின் கணவர்களை நேரில் அழைத்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில் மாவட்டத்தில் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைக ளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவானது திருமணமான மற்றும் வயதான பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு சம் பந்தமாகவும் செயலாற்றும். மேலும் குடிகார கணவரால் துன்புறுத்தல் என்ற புகார்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.4 கோடியில் நலத்திட்ட உதவிகள்
    • அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கூட்டுறவு சங்கங்களின் சார்பில் மாபெரும் கடன் மேளா ஜோலார்பேட்டை அருகே சாலை நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    ரூ.4 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, ஜோலார்பேட்டை தேவராஜி எம்.எல்.ஏ. திருப்பத்தூர் நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்தியா சதிஷ்குமார், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சதிஷ் குமார் மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 55). கட்டிடம் மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக நள்ளிரவு பாச்சல் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் சிக்கி கொண்டார்.

    இதில் அவரது இடது கை துண்டானது. வலியால் அலறி துடித்து கொண்டிருந்த இளங்கோவின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

    பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு துண்டான கையுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து துண்டான கையை ஐஸ் பாக்சில் வைத்து சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் மீது லாரி மோதி வாலிபர் படுகாயம்
    • டிரைவரை கைது செய்ய கோரி போராட்டம்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி, எல்.மாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தனசிங் மகன் ஆனந்தவேல் (வயது 37). காங்கிரஸ் பிரமுகர்.

    இவர் இன்று காலை தனது காரில் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே சென்றார். அப்போது பின்னால் வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயம் அடைந்த ஆனந்தவேல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்ய கோரி வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சுரேஷ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட கட்சியினர் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • தற்கொலையா? போலீஸ் விசாரணை
    • 1 வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த கிரி சமுத்திரத்தை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 48). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி மகேஸ்வரி, மகன்கள் ரஞ்சித், வெங்கடேசன், கவுதமன்.

    இந்த நிலையில் பிரகாசம் கடந்த 1 வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். நேற்று காலை திடீரென வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இன்று காலை அதே பகுதியில் உள்ள மலை அடிவாரம் அருகே உள்ள வேப்ப மரத்தில் பிரகாசம் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்ற வர்கள் வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாசத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே புள்ளானேரி கிராமத்தில் வசித்து வரும் கனகராஜ் என்பவரின் வீட்டினுள்ளே திடிரென சத்தத்துடன் பாம்பு நுழைந்தது இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினார்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    இதனை பெற்றுக் கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள ஏலகிரி மலை காப்பு காட்டில் விட்டனர்.

    இதேபோல் நாட்டறம்பள்ளி அருகே சின்னூர் பகுதியில் வசித்து வரும் சீனு என்பவரின் வீட்டில் பாம்பு நுழைந்தது கண்டு உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஞான ஒளிவு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை பெற்றுக் கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.

    ×