என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adolescent magic"

    • மனைவி போலீஸ் நிலையத்தில் புகார்
    • போலீசார் தேடி வருகின்றனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே வேலைக்கு செல்வதாக கூறிசென்ற இளைஞர் ஒரு மாதமாக காணவில்லை கண்டுபிடித்து தரவேண்டும் என போலீஸ் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.

    ஒடுகத்தூர் அருகே உள்ள கீழ்கொத்தூர், தண்டையான்கோட்டை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியானவர் விஜய் (வயது 24). இவருக்கு திருமணமாகி தேவையானி (22) என்ற மனைவி உள்ளார். கடந்த நவம்பர் மாதம் 10-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளார். சென்ற அடுத்த நாள் முதல் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டள்ளது.

    மேலும் இவரை பற்றி அக்கம் பக்கம் உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை அவரை கண்டுபிடித்து தர வேண்டுமென வேப்பங்குப்பம் போலீசாரிடம் தேவையானி நேற்று புகார் கொடுத்தார்.

    இதன் சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து கானாமல் போன அவரை தேடி வருகின்றனர்.

    • மதுரை அருகே வாலிபர் மாயமானார்.
    • குடும்ப தகராறு காரணமாக மனைவி, குழந்தைகளையும் விரட்டி விட்டார்.

    மதுரை

    மதுரை எம்.கே.புரம் தெற்கு சண்முகபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 37). வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அருணாதேவி(36). வேல்முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. சரியாக வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் மனைவியை குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டுக்கு விரட்டி விட்டார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அதிகாலை வேல்முருகன் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டை காலி செய்தார். அதன்பிறகு அவர் மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மனைவி அருணாதேவி கொடுத்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தந்தை போலீசில் புகார்
    • போலீசார் தேடி வருகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சின்ன பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜி இவரது மகன் சிவா (வயது 37) இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 22-ந் தேதி சிவா வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து ராஜி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிவாவை தேடி வருகின்றனர்.

    ×